ஸ்டார்ட்-அப் இந்தியா விதிவிலக்குகளுக்கு உங்கள் ஸ்டார்ட்-அப் தகுதியானதா?

Last Updated at: December 19, 2019
115
ஸ்டார்ட்-அப் இந்தியா விதிவிலக்குகளுக்கு உங்கள் ஸ்டார்ட்-அப் தகுதியானதா

நமது அரசாங்கம் புதிய ஸ்டார்ட் அப்ஸ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் புதிய தொழில் முறையை சார்ந்து உள்ளதேயாகும். இந்த நோக்கத்திற்காக, இது ஒரு  இன்டெர் மினிஸ்டரில் போர்டை அமைத்து  சில புதிய வணிகங்களை தொடக்க நிலைகளாக வகைப்படுத்துகிறது. இந்த புதிய வணிகங்களுக்கு அவர்களின்  வணிகத்தின் புதுமை தன்மையை அடிப்படையாக கொண்டு அதற்கு  தகுதியும் மற்றும் அவர்களின் முதல் ஐந்து ஆண்டுகளில் மூன்று வரிகளில் இருந்து விலக்கு போன்ற வரி சலுகைகள் வழங்கப்படுகிறது. ஸ்டார்ட்-அப் இந்தியா விதிவிலக்குகளுக்கு உங்கள் ஸ்டார்ட்-அப் தகுதியானதா என்பதை காணலாம்.

ஸ்டார்ட்அப் என்றால் என்ன ?

ஸ்டார்ட்அப் இந்தியா செயல் திட்டத்தின் படி,ஒரு நிறுவனம் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் அந்த நிறுவனத்தின் டர்ன் ஓவர் 25 கோடியாக இருக்கவும் வேண்டும். வணிகமயமாக்கலுக்கான திட்டங்களுடன் துவங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் வணிகம் ஒரு புதுமையான தயாரிப்பு அல்லது சேவை அல்லது ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்தும்  செயல்முறையை நோக்கி செயல்பட வேண்டும். இந்த நிறுவனம் கட்டாயமாக பிரைவேட் லிமிடெட் கம்பெனியாகவோ லிமிடெட் லியபிலிட்டி பார்ட்னெர்ஷிப் கம்பெனியாகவோ அல்லது ரெஜிஸ்டர்டு பார்ட்னெர்ஷிப் கம்பெனியாகவோ அமைந்து இருக்க வேண்டும். பழைய வணிகத்தின் புனரமைப்பு மூலம் உருவாக்கப்படக்கூடாது.

உங்கள் ஸ்டார்ட்-அப் பதிவிற்கு

தேவையான அங்கீகாரம்

உங்கள் ஸ்டார்ட்-அப் இன் தொடக்கமானது பின்வருவனவற்றில் ஒன்றைப் பெற வேண்டும்: 

  1. வணிகத்தின் புதுமையான தன்மை குறித்து  இந்தியாவில் ஒரு முதுகலை கல்லூரியில் நிறுவப்பட்ட ஒரு இன்குபேட்டரின் பரிந்துரை செய்ய வேண்டும்.
  2. புதுமைகளை ஊக்குவிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு காப்பகத்தில் இருந்து ஆதரவு பெறுவது  அல்லது
  3. வணிகத்தின் புதுமையான தன்மை குறித்து அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு காப்பகத்தில் இருந்து பரிந்துரை பெறுவது அல்லது
  4. புதுமைகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட வேண்டும் அல்லது
  5. செபியில் பதிவுசெய்யப்பட்ட அக்ஸ்ப்லெரடோர்  / ஏஞ்சல் ஃபண்ட் / இன்குபேட்டர் / பிரைவேட் ஈக்விட்டி ஃபண்டிலிருந்த நிதி; அல்லது

6.  இந்திய காப்புரிமை (Indian Patent) மற்றும் வர்த்தக முத்திரை ( Trademark Office.) அலுவலகத்திலிருந்து காப்புரிமை  பெற்றிருக்க வேண்டும்.

    SHARE