நுண்,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து 20%கொள்முதலை உறுதி செய்வதற்கான பொது துறைப் பிரிவுகள்

Last Updated at: December 18, 2019
90
எம்.எஸ்.எம்.இ

அரசாங்கத்தின்  இந்த நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கலாம் ,அதாவது எம்.எஸ்.எம்.இ அல்லது நுண் , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து  குறைந்தபட்சம் 20% தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் வாங்க வேண்டும் என்ற தவிர்க்கலாகாத ஆணையை பிறப்பித்துள்ளது.

“எம்எஸ்எம்இ க்களால் பொருட்கள் மற்றும் சேவைகளை பரிந்துரைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தர விவரக்குறிப்புகளின்படி வழங்க முடியம் என்றால்,அவர்களுக்கு முன் அனுபவம் மற்றும் முன் வருவாய்  குறித்த விதிமுறைகள் தளர்த்தப்படும் ”என்று எம்எஸ்எம்இ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த நடவடிக்கை தொடக்க எம்எஸ்எம்இ க்களுக்கு ஒரு பகுதியாக 20 சதவீத பொது கொள்முதலை கட்டாயமாக இருக்க உதவும். இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதகற்காக இந்த தளர்வு செய்யப்பட்டுள்ளது, இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் சிறந்தவை ”என்று எம்எஸ்எம்இ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது வருமானத்தை எவ்வாறு அறிவிப்பது?

காப்பீடு, பொது வருங்கால வைப்பு  நிதி , வாடகை ரசீதுகள் போன்ற முதலீடுகளின் சான்றுகளை ஊழியர் சமர்ப்பிக்க வேண்டும், இந்த அறிவிப்பு மூலம், மொத்த வரி பொறுப்பு மற்றும் வரி மூலத்தில் கழித்தல்(டீடிஎஸ்) ஆகியவை ஊழியரின் மொத்த சம்பளத்தில் கணக்கிடப்படுகின்றன. வருமான வரி தாக்கல் பற்றி மேலும் அறிக

இஎஸ்ஐ(ஊழியர்களின் மாநில காப்பீடு)  நன்மைகளை நான் எவ்வாறு பெறுவது?

காப்பீடு செய்யப்பட்ட  முதலாளிகளுக்கு சம்பளத்தின் 70% சான்றளிக்கப்பட்ட நோய்க்கு வருடத்தில் 91 நாட்கள் வழங்கப்படும்.

மேலும் தகவல் அறியுங்கள்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ)உரிமத்தை மாற்ற முடியுமா?

எப்எஸ்எஸ்ஏஐ – உணவு உரிமம் வைத்திருப்பவர் இறந்து விட்டால், அந்த உரிமத்தை இறந்தவரின்  குடும்ப உறுப்பினரின் பெயருக்கோ அல்லது அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதியின் பெயருக்கோ மாற்றிக் கொள்வதற்கு இது தகுதியானது. அடுத்த உரிமையாளர் தனது பெயரில் உரிமத்தை மாற்ற அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

சர்வதேச தர நிர்ணய அமைப்புச்(ஐஎஸ்ஓ) சான்றிதழ் இருப்பதின் நன்மைகள் (ISO Registration)

இத்தகையச் சான்றிதழ் தர மேலாண்மை முறையை (கியூஎம்எஸ்) செயல்படுத்துவதற்கும், உங்கள் வணிகத்தின் முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதற்கும், செயல்திறன், லாபம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்களை அதிகமாக கையகப்படுத்திக் கொள்ளலாம்.

சரக்கு மற்றும் சேவை வரித்(ஜிஎஸ்டி) தொகையில் வரி மூலத்தில் கழித்தல் (டிடிஎஸ்) கழிக்கப்பட வேண்டுமா?

ஜிஎஸ்டி செலுத்துபவரின்  ஒப்பந்தம் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால், செலுத்துபவருக்கு செலுத்தும் கட்டணத்தில் 2% டிடிஎஸ் கழிக்கப்பட வேண்டும்.

அறிவுசார் சொத்தில் வர்த்தக முத்திரை என்றால் என்ன?

அறிவுசார் சொத்து (ஐபி) என்பது ஒரு சொத்து அல்லது உடல் சொத்தாகக் கருதப்படும் படைப்புப் பணிகளைக் குறிக்கிறது. ஐபி உரிமைகள் நான்கு முக்கிய துறைகளில் அடங்கும்: அவை வர்த்தக முத்திரை, வடிவமைப்பு உரிமைகள், காப்புரிமைகள் மற்றும் பதிப்புரிமை போன்றவை ஆகும்.

எம்எஸ்எம்இ பதிவுக்கு ஏதேனும் கட்டணம் உள்ளதா?

எம்.எஸ்.எம்.இ பதிவு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உத்யோக் ஆதார் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான பாரம்பரிய செயல்முறையை மாற்றி அமைத்தது , இந்த பதிவுக்கு, அரசாங்க கட்டணம் கிடையாது.

    SHARE