மகாராஷ்டிராவில் தொழில் வரி பதிவு

Last Updated at: December 02, 2019
129
மகாராஷ்டிராவில் தொழில் வரி பதிவு

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து முதலாளிகளும் தங்கள் வணிகத்தை மாநிலத்திற்குள் அமைத்த 30 நாட்களுக்குள் தொழில்முறை வரி பதிவு செய்வது தேவையானதாகும். ஒரு பணியாளரை பணியமர்த்தாமல் ,  வணிகத்தை அமைத்தாலும் வரி செலுத்த வேண்டும். ஏனென்றால், இந்த வரியை செலுத்தும் ஊழியர்கள் மட்டுமல்ல; இயக்குநர்கள் மற்றும் கூட்டாளர்களும் வரிப்பணம் செலுத்த வேண்டும். இத்தகைய பதிவை பெறுவது எளிதானது:

உங்களிடம் தற்போது ஊழியர்கள் இல்லையென்றால், உங்களுக்கு தொழில் வரி சேர்க்கை சான்றிதழ் (பிடீஇசி) மட்டுமே தேவை, இதில்  இயக்குனர்கள்,கூட்டாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் தொழில்முறை வரியை செலுத்த வேண்டும். எவ்வாறாயினும்  உங்கள் பணியாளர் எவரேனும் ஒருவர்க்கு மாத ஊதியம் ரூ.75000 ஆக இருந்தால் கண்டிப்பாக தொழில் வரி பதிவு சான்றிதழை (பிடீஆர்சி) பெற வேண்டும்.

இரண்டு பதிவுகளையும் பெற, நீங்கள் கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து உள்நுழைவைப் பெற வேண்டும். பின் அத்துறையுடன் உங்களுக்கு சந்திப்பு வழங்கப்படும், நீங்கள் பின்வரும் ஆவணங்களுடன் ஒப்புதலை எடுக்க வேண்டும்:

ஒரு நிறுவனத்திற்கான ஆவணங்கள்:

 1. கட்டுரைகளின் நகல் மற்றும் சங்கத்தின் குறிப்பாணை
 2. ஒருங்கிணைப்புச் சான்றிதழின் நகல்
 3. இயக்குநரின் இரண்டு முகவரி சான்றுகள் (மின்சார ரசீது மற்றும் கடவுச்சீட்டு  / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை / குடும்ப அட்டை நகல்)
 4. வாடகை சொத்தாக இருந்தால், சொத்து உரிமையாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் அத்துடன் பராமரிப்பு மற்றும்  அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தின் ஆங்கில நகல்.
 5. விற்பனை பத்திரம் / சொத்து பத்திரத்தின் நகல் ஆங்கிலத்தில் (சொந்த சொத்தாக இருந்தால்).
 6. விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு  அளவு புகைப்படம் (தயவுசெய்து விண்ணப்பத்தை அச்சுப்பொறியில் ஒட்ட வேண்டாம்.)
 7. நிறுவனம்  மற்றும் அனைத்து இயக்குநர்களின் நிரந்தர கணக்கு எண் அட்டையின் நகல்.
 8. ரத்து செய்யப்பட்ட நிறுவனத்தின் காசோலை.

ஒரு தனி நபருக்கான ஆவணங்கள்:

 1. இவற்றில் ஏதேனும் ஒன்று: கடவுச்சீட்டு  / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை  / சொத்து வரி ரசீது / சமீபத்திய மின்சார ரசீது / குடும்ப அட்டை  நகல்.
 2. நிரந்தர கணக்கு எண் அட்டையின் நகல்
 3. ரத்து செய்யப்பட்ட காசோலை
 4. வாடகை சொத்தாக இருந்தால், சொத்து உரிமையாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் அத்துடன் பராமரிப்பு மற்றும்  அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தின் ஆங்கில நகல்.
 5. விற்பனை பத்திரம் / சொத்து பத்திரத்தின் நகல் ஆங்கிலத்தில் (சொந்த சொத்தாக இருந்தால்).

பின்வரும் நபர்கள் மகாராஷ்டிராவில் தொழில் வரியிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்:

 1. 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள்
 2. 40 சத விகிதத்திற்கும் அதிகமான குறைபாடு உள்ள ஊனமுற்றோர்கள்
 3. உடல் ஊனமுற்ற அல்லது மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்

வரி தாக்கல் செய்ய காலவரையறை:

தொழில் வரி சேர்க்கை சான்றிதழ் (பிடீஇசி) வைத்திருப்பவர்கள் வருமானத்தை தாக்கல் செய்ய தேவையில்லை, ஆனால் தொழில் வரி பதிவு சான்றிதழ் (பிடீஆர்சி) வைத்திருப்பவர்கள் பின்வருமாறு தாக்கல் செய்ய வேண்டும்:

வரி பொறுப்பு ரூ. 5000 ற்கும் குறைவாக  என்றால் ஆண்டிற்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும்;

வரி பொறுப்பு ரூ. 5000 முதல் ரூ. 20,000 ற்கும் இடை பட்டது என்றால் காலாண்டிற்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும்;  

வரி பொறுப்பு ரூ.20,000ற்கும்  அதிகம் என்றால் மாதத்திற்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும்.

  SHARE