இந்திய தொழில் வரி பதிவு முறை

Last Updated at: December 12, 2019
129
இந்திய தொழில் வரி பதிவு முறை

நமது தொழில் வரியை மாநில அரசுகளின் வணிக வரித் துறையால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாநகராட்சிகள் இந்த வரியை வசூலிக்கின்றன. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உட்பட 21 இந்திய மாநிலங்களில் வசூலிக்கப்படுகிறது. இதற்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 276 ன் கீழ்  தொழில் வரியின் பயன்பாட்டின் படி  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி, தொழில்கள், வர்த்தகம், அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச தொகை 2,500 ரூபாய்  ஆகும் மேலும்  வரி செலுத்துவோரின் வருமானத்தை பொறுத்து செயலுத்த படவேண்டிய வரி தொகையும் மாறும்இது முதலில் ரூ .2500 ஆக மட்டுமே இருந்தது, அதை மூன்று மடங்காக ரூ .7500 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலாளிகளுக்கான தேவை:-

வணிக உரிமையாளர்கள் பணியாளர் சம்பளத்திலிருந்து தொழில்முறை வரியைக் கழித்து மாநில அரசு அல்லது நகராட்சி அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டும் இது ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்திலிருந்து கட்டாயமாக கழிக்கப்பட வேண்டும். ஒரு நிறுவனம் ஒரு நபரை பணியில் சேர்க்கிறது என்றால் அந்நிறுவனம் 30 நாட்களுக்குள் அந்த நபரின் தொழில் வரி பதிவை  மேற்கொள்ள வேண்டும். பதிவு செய்ய தவறினால் ஒரு நாளிற்கு 5 ரூபாய் என்று அபராதம் வழங்கப்படும்

ஊழியர்களுக்கான வரி விபரங்கள்:-

தொழில் வரியாக செலுத்தப்படும் எந்தவொரு தொகையும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 16 இன் கீழ் வரி விலக்கு ஆகும். மேலும் வரியாக செலுத்தப்பட்ட தொகை முதலாளிகளால் மூலத்தில் கழிக்கப்படும். ஒருவேளை நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், இந்த தொகையை கழித்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு.

இந்திய மாநிலங்களில் தொழில் வரி விகிதங்கள் பற்றிய விபரங்கள்:-

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வருமான வரி திரும்பப்பெறுதல் வருமானமாக கருதப்படுகிறதா?

பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு, செடியுல் A வில் நீங்கள் வகைப்படுத்தவில்லை என்றால் அவைகளுக்கு வரி விதிக்க படமாட்டாது.

ESI பாதுகாப்புக்கான வரம்பு என்ன?

ESI கவரேஜிற்கான ஒரு தொழிலாளியின் ஊதியத்தின் வரம்பு சமீபத்தில் 15000 முதல் 21000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Fssai உரிமத்தை மாற்ற முடியுமா?

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிப்பதின்மூலம் இறந்த நபரின் FSSAI உரிமத்தைப் அந்த குடும்பத்தை சார்ந்த வேறொரு உறுப்பினர் பெறலாம்

நிபுணர் வழிகாட்டலைப் பெறுங்கள்

ISO சான்றிதழ் கட்டாயமா?

வணிக மேம்பாட்டு தரநிலைகளை ISO உருவாக்குகிறது, மேலும் அவற்றை பரவலாக ஏற்றுக்கொள்ளவும் படுகிறது. ஆகவே ISO சான்றிதழ் வைத்திருப்பது ஒரு நன்மையாகக் கருதப்படுகிறது.

ஓய்வூதிய படிவம் 16 ஐ எவ்வாறு பெறுவது?

ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கக்கூடிய  நபர்கள், ஓய்வூதிய படிவத்திற்காக பாம் 16  னை பெற அவர்களின் வங்கி அல்லது ட்ரெசரீ தொடர்பு கொள்ளவும்.

MSME இல் NIC குறியீடு என்றால் என்ன?

தேசிய தொழில்துறை வகைப்பாடு (NIC) என்பது அனைத்து MSME வணிகங்களையும் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கும் ஒரு முறையாகும்.

    SHARE