இந்தியாவில் மின் வர்த்தக வணிகத்தை எவ்வாறு தொடங்குவது

Last Updated at: Mar 18, 2020
3094
இந்தியாவில் மின் வர்த்தக வணிகத்தை எவ்வாறு தொடங்குவது

முந்தைய கால கட்டத்தில் ,பண்டமாற்று முறை மூலம் பொருட்கள் விற்கப்பட்டன , பின்னர் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் தற்பொழுது  பெரும்பாலான பரிவர்த்தனைகள் மற்றும் வணிகங்கள் இணையங்கள் மூலமாக நடக்கின்றன. இந்த மின் வர்த்தக வணிகத்தின் மூலம் உலகத்தின் அனைத்து மூலைகளிலும் வணிகம் செய்வது எளிதாகிறது

மின் வர்த்தக வணிகம் என்றால் என்ன?

மின் வர்த்தக வணிகம் என்பது தயாரிப்புகளை வாங்குவது மற்றும் விற்பதுடன் சேர்த்து நிதிகளின் பரிவர்த்தனைகள்  மற்றும் இணையத்தில் உள்ள அனைத்துத் தரவுகளின் பரிமாற்றத்தையும் வரையறை செய்வதாகும்.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for Udyog Aadhaar registration.

 

மின் வர்த்தக வணிகத்தின் புள்ளிவிவரங்கள்

கடந்த சில ஆண்டுகளில் மின் வர்த்தக  துறையின் வரைபடம் வேகமாகவும் பிரமாண்டமாகவும் வளர்ந்துள்ளது, மேலும் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அதற்கு சான்றாகும். இந்திய பொருளாதார கணக்கெடுப்பு நடத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்திய மின் வர்த்தக  சந்தை 19% க்கும் மேலாக வேகமாக வளர்ந்து 33 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. நிச்சயமாக சில புள்ளிவிவரங்கள்  ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் தங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கும் அதனை வளர்ப்பதற்கும் போதுமானதாக இருக்கிறது.

1990 களில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பல பிரபலமான மின் வர்த்தக வணிக தளங்களுடன் மின் வர்த்தக போக்கு இந்தியாவுக்கு வந்தது. அப்போதிருந்து தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும்  நுகர்வோர்களின் தேவை அதிகரிப்பதும் அதனுடன் சில்லறை விற்பனையாளர்கள் வணிகத்தில் தங்கள் அடியை அமைக்கவும்   முயற்சி செயகிறார்கள்.

மேற்கூறிய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, இந்தியாவில் மின் வர்த்தகத்தின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று ஒருவர் எளிதாகக் கூறலாம், அனால் அத்துடன் மற்ற புள்ளி விவரங்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 2034இல் அமெரிக்க மின் வர்த்தகத்தை முறியடித்து உலகளவில் இரண்டாவது பெரிய சந்தையாக மாறும் என்று கூறுகின்றன.

மின் வர்த்தக வணிக வகைகள்

மின் வர்த்தகம் என்பது ஒரு பரந்த களமாகும் , அத்துடன் வணிக வகைகளின் எண்ணிக்கை அதன் கிளைகள் மற்றும் விநியோகிக்கப்படுதல் போன்றவை மேலும் அதனை பரந்த களமாக உருவாக்குகிறது. மேலும்  நுகர்வோர், நிர்வாகம் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளைப் பொறுத்து பல்வேறு மின் வர்த்தக வணிகங்கள் உள்ளன.

மின் வர்த்தக வணிக வகைகள் பின்வருமாறு:

 1. வணிகத்திற்கு வணிகம் (வ2வ): வாடிக்கையாளர்கள் மற்றும் பிறர் போன்ற இடைத்தரகர்களைக் கொண்டிருக்காமல், அதன் சேவைகள், தகவல்கள் மற்றும் தயாரிப்புகளின் பரிமாற்றத்தை வணிகங்களுக்கிடையில் நேரடியாகக் கையாளுகின்றன.
 2. நுகர்வோருக்கு வணிகம் (நு2வ): இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வணிகமானது நுகர்வோருடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது, அதாவது, தயாரிப்புகள், சேவைகள், விளம்பரங்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் செய்யப்படுகின்றன அதாவது பிற வணிகங்கள் மற்றும் நிபுணர்களுடன் எந்த தொடர்பும் இருக்காது. அத்தகைய மின் வர்த்தக  வணிகத்தின் எடுத்துக்காட்டுகளில் ஒன்று அமேசான்.
 3. நுகர்வோருக்கு  நுகர்வோர்(நு2நு): இவை வாடிக்கையாளர்களுக்கும் இணையத்தில் விற்றல் வாங்கல் மற்றும் விளம்பரங்களுக்கும் இடையிலான தொடர்பின் அடிப்படையில்  அமைந்தவை. இதுபோன்ற மின் வர்த்தகத்தில், மூன்றாம் தரப்பு தளம் வழங்கப்படுகிறது, அங்கு பரிவர்த்தனைகள் கூட நடைபெறலாம். அத்தகைய மின் வர்த்தக வலைத்தளத்தின் எடுத்துக்காட்டு ஈபே.
 4. வணிகத்திற்கு நுகர்வோர்(வ2நு): இத்தகைய வணிகத்தில்,நுகர்வோரால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள்  நிறுவனங்களுக்கு இணையத்தில் விற்பனை அல்லது ஏலம் விடுவதின் மூலமாக கிடைக்கப் பெறுகின்றன. சில தயாரிப்புகளில் புகைப்படங்கள் மற்றும் பிற விஷயங்கள் அடங்கும், அவை நிறுவனத்தின் எண்முறை சந்தைப்படுத்துதலில்  உதவக்கூடும்.
 5. வணிகத்திலிருந்து நிர்வாகம் (வ2 நி): இந்த வகைகளில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அடங்கும், இது போன்ற அரசாங்க நிர்வாகங்கள் இணைய சேவைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் இவற்றில் ஏதோ ஒரு வகையை சார்ந்து  இருக்கும். இத்தகைய மின் வர்த்தக  வணிகங்கள் கடந்த ஆண்டுகளின் இணைய சேவைகள் மற்றும் அத்தகைய நிறுவனங்களின் திறன்களைக் கருத்தில் கொண்டு வளர்ந்துள்ளன.
 6. நிர்வாகத்திற்கு நுகர்வோர் (நி2 நு): இது மின் வர்த்தக வணிகத்தின் மிகவும் பிரபலமான பகுதியாக இல்லை, ஏனெனில் பொது நிர்வாகம் நேரடியாக நுகர்வோரிடமிருந்து சேவைகளையும் எந்தவொரு தயாரிப்புகளையும் அரிதாக வாங்குகிறது.

வழக்கமாக இம்முறையில்  வேறு சில இடைத்தரகர்கள் ஈடுபடுவார்கள். மேலும் கல்வி, வரி தாக்கல் உள்ளிட்ட சில துறைகளில் நிர்வாகத்திற்கு நுகர்வோர் (நி2 நு) முறையைக் காணலாம்.

கைபேசி வர்த்தகம்:

கைபேசி வர்த்தகம் என்பது மற்றொரு வகை மின் வர்த்தகம் ஆகும், இதில் கைபேசிகள் மூலம் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் நடைபெறுகின்றன. இன்றைய உலகில் கைபேசிகளின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த வகை மின் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது. எளிய முறை பயன்பாடு மற்றும் வேகத்தின் அடிப்படையில் நுகர்வோர் மற்றும்  நிறுவனங்களால் கைபேசி வர்த்தகம் அதிகமாக விரும்பப்படுகின்றன.  

இந்தியாவில் மின் வர்த்தக வணிகத்தைத் தொடங்குவதற்கான படிகள்:

மின் வர்த்தக வணிகம் வழங்கும் அனைத்து வகைகளையும் வளர்ச்சி வாய்ப்புகளையும் பார்த்த பிறகு, ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்க முயற்சி செய்ய ஆசைப்படலாம். அவ்வாறு சொந்த தொழிலை தொடங்க விரும்புபவர்க்கு  இம்முறை பார்க்க சிக்கலானதாக தெரிந்தாலும்  செயல்படுத்துவது மிகவும் எளிது. ஒருவர் தன் மின் வர்த்தக வணிகத்தை வளர்க்கவும் இதை இன்னும் எளிமையாக்கவும் மற்றும்  நெறிப்படுத்தவும் கடைபிடிக்க வேண்டிய மனதில் கொள்ள வேண்டிய சில படிகள்;

 1. உங்கள் முக்கிய இடத்தைத் திட்டமிட்டு வணிக மூலோபாயத்தைக் கொண்டிருத்தல்:

  உங்கள் வணிகத்தை இணையத்தில் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் முன், ஒரு மூலோபாயத்தை உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட இடத்தைத் திட்டமிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். விற்பனைக்கு ஏராளமான தயாரிப்புகளை வைத்திருப்பதற்குப் பதிலாக, வரையறுக்கப்பட்ட மற்றும் தயாரிப்புகளின் பட்டியலைக் குறைத்து மட்டுமே தொடங்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகளின் படி சந்தைப்படுத்தல் உத்திகளை மேம்படுத்தவும் உருவாக்கவும் உதவுகிறது, இது மேலும் விரிவாக்கப்படலாம். இவற்றுடன் சந்தையில் ஒரே நோக்கம் மற்றும்  நடுத்தரமான போட்டி கொண்ட வணிகத்தைத் தொடங்க முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே தர அடையாளம் பாதிக்கப்பட்டுள்ள இடத்தை தேர்வு செய்தலைத் தவிர்க்க வேண்டும்.

 2. தர அடையாளத்தின் பெயர்:

  பெயரைத் தேர்ந்தெடுப்பது கடினமான வேலை அல்ல, ஆனால் பெயர் தனித்துவமானது மற்றும் விரிவானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் தர அடையாளத்தையும் அது வழங்கும் முக்கிய இடத்தை வரையறுக்கும் குறுகிய மற்றும் செல்வாக்குமிக்க பெயரை தேர்வு செய்வதை முயற்சிக்க வேண்டும். மேலும், நினைவில் கொள்ள எளிதாக இருக்க வேண்டும். பெயர் இறுதி செய்யப்பட்டவுடன், நிறுவனத்தின் முத்திரை வடிவமைக்கப்பட வேண்டும், இந்த முத்திரை ஆனது தர அடையாளத்தின் குறியீடைக் குறிக்கும் வகையில் இருக்க வேண்டும். உங்கள் வர்த்தக முத்திரையை முத்திரையாகவோ அல்லது சுலோகமாகவோ அல்லது இரண்டின் கலவையாகவோ செய்ய வேண்டும் என்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. 

 3.  சரியான நிறுவனத்தைத் தேர்வுசெய்தல்:

  இந்தியாவில், ஒரு வணிகத்தை ஒரே உரிமையாளர், ஒரு நபர் நிறுவனம், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை மற்றும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம், கூட்டாண்மை போன்றவற்றாக பதிவு செய்யலாம். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு கணக்கியல், வரிவிதிப்பு மற்றும் இணக்கம் மற்றும் சட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கூட்டாண்மை அடிப்படையிலான நிறுவனம் கூட்டாண்மை பத்திரத்தை வரைவு செய்ய வேண்டும், அதேசமயம் ஒரு தனியுரிமத்திற்கு பல சட்டபூர்வமான தன்மைகள் இல்லை.

 4. உங்கள் மின் வர்த்தக வணிகத்தைப் பதிவுசெய்து வங்கிக் கணக்கைத் திறத்தல்:

  அனைத்து அடிப்படை விவரங்களும் முடிந்ததும், வணிகத்தைப் பதிவுசெய்து அனைத்து சட்ட முறைகளையும் முடிக்க வேண்டும். பதிவுசெய்ததும், வரி, கொடுப்பனவுகள் மற்றும் பிற வணிக தொடர்பான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட வணிக மற்றும் தொழில்முறை நோக்கங்களுக்காக ஒரு தனி வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும்.

 5. மின் வர்த்தக வலைத்தளத்தை உருவாக்குதல்:

  உங்கள் வலைத்தளத்தை உருவாக்கும்போது, புதிதாக உருவாக்குதல்  மற்றும் மேம்படுத்துதல் அல்லது முன்பே உருவாக்கிய தளத்தைப் பயன்படுத்துவதை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் அதிக முதலீட்டில் ஈடுபடவில்லை என்றால், முன்பே கட்டப்பட்ட வலைத்தளத்தை வைத்திருப்பது சரியான வழி, ஏனெனில் இது உங்களுக்கு எல்லா விவரங்களையும் வழங்குகிறது, மேலும் இதில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தயாரிப்புகள் மற்றும் விவரங்களை பட்டியலிடுவது மட்டும் போதுமானதாகும். வணிகமானது  தகவல்களை நுகர்வோரிடமிருந்து சேகரிப்பதை உள்ளடக்கியிருந்தால, அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை ஆவணங்கள் , தனியுரிமைக் கொள்கை இவற்றைப் பெற வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.

 6. கட்டண வழிமுறைகள்:

  உங்கள் பரிவர்த்தனையை பெறுவதற்கு   உங்கள் வணிகத்திற்கான இணைய கட்டண முறைகளை நீங்கள் அமைக்க வேண்டும். பல்வேறு முறைகள் மூலம் செய்யப்படும் கட்டண செயலாக்க அனுமதியானது கடன் அட்டை,பற்று அட்டை, பேடிஎம் இவற்றை உள்ளடக்கியது ஆகும்.

 7. தளவாடங்கள்:

  உங்கள் வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான மிக முக்கியமான படிகளில் ஒன்று. இந்த செயல்முறை தயாரிப்புகளை அனுப்புவதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வரை முழுமையான செயல்முறையை உள்ளடக்கியது. ஒரு வெற்றிகரமான தளவாட மேலாண்மை என்பது ஒரு மின் வர்த்தக வணிகத்தை நடத்துவதற்கான மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும். இது மூன்றாம் தரப்பினரின் மூலமாகவோ அல்லது ஒரு சிறு வணிகத்தின் மூலமாகவோ வெளிமூலதன தயாரிப்புகளாகவோ இருக்கலாம். அத்தகைய  தயாரிப்புகளை உங்கள் கிடங்கிலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.

 8. எண்முறை விற்றல்:

  உங்கள் தயாரிப்புகளை விற்பதற்கும்  விளம்பரப்படுத்துவதற்கும் இது மிகச் சிறந்த மற்றும் மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும். எண்முறை விற்றல் பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல வழிகளில் செய்யப்படலாம்:

எஸ்சிஓ: வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கான மிகவும் நம்பகமான வழிகளில் இதுவும் ஒன்றாகும். தேடுபொறி பக்கத்தின் சிறந்த முடிவுகளில் இடம் பெற எஸ்சிஓ உத்திகள் மற்றும் முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

 • சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல்: இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் பல சமூக ஊடக தளங்களில் உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தலாம்.
 • விளம்பரங்கள் மற்றும் ஒத்துழைப்புகள்: நீங்கள் பல முக்கிய தர அடையாளங்களுடன் ஒத்துழைப்பு செய்ய முயற்சி செய்வதால் உங்கள் விளம்பரங்களுக்கும் அது வழி வகுக்கிறது.
 • வாய் வார்த்தை மற்றும் வாடிக்கையாளர்களுடனான தொடர்பு: சந்தைப்படுத்துதலின் மிக முக்கிய அம்சம் நம்பிக்கையாகும்.வடிக்கையாளர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கையையும் ஆற்றலையும் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.இதில் பழைய பாரம்பரிய முறையில் பின் பற்ற கூடிய பேச்சு வார்த்தை முறை உதவுகிறது, இதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்.

ஒவ்வொரு களத்திற்கும்  வணிகத்திற்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. மின் வர்த்தக வணிகத்திலும் அப்படித்தான்.

சட்ட வல்லுநர்களிடம் பேசுங்கள்

மின் வர்த்தக வணிகத்தின் நன்மைகள்:

சில நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

கிடைக்கக்கூடிய தன்மை: இணைய வணிகம் 24 * 7 இல் கிடைக்கிறது, இதனால் வாடிக்கையாளர்கள், கடைகள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வசதிக்கேற்ப பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
பரந்த எல்லை: குறைந்த அளவிலான தயாரிப்புகளைக் கொண்ட கடைகளைப் போலல்லாமல், ஒரு மின் வர்த்தக வணிகத்தைக் கொண்டிருப்பது, இடம் மற்றும் அளவு என்று  எந்த தடையும் இல்லாமல், நீங்கள் விரும்பும் பல தயாரிப்புகளை பட்டியலிட்டு விற்க முடியும்.
எளிதான அணுகல்: இந்த மின் வர்த்தக வணிகங்கள் மற்றும் வலைத்தளங்கள் எளிதில் அணுகக்கூடியவை, அவற்றுடன் பயனர் நட்பு மற்றும் உலகளவில் வாடிக்கையாளர் தளத்தை வளர்க்கும் திறன் உள்ளது.

மின் வர்த்தக வணிகத்தின் தீமைகள்:

வாடிக்கையாளர் சேவையில் வரம்புகள்: நேர்மையான கருத்து அல்லது சேவை கருத்துக்காக உங்கள் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடியாது. மேம்பாடு மற்றும் வணிக விரிவாக்கத்தை நோக்கி செயல்படும்போது இது சவாலானதாக இருக்கலாம்.

தயாரிப்பு விநியோக நேரம்: கடைகளில் வாடிக்கையாளர்கள் உடனடியாக தயாரிப்புகளை வாங்க முடியும், இணையத்தில் அவ்வாறு இல்லாமல், வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை தங்கள் கைகளில் பெற காத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு: தயாரிப்புகளின் பாதுகாப்பு,தனிப்பட்ட மற்றும் வங்கியின் தகவல்களை இணைய ஊடுருவல் செய்தல் போன்ற பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் வளரும்  பிரச்சனைகள் ஆகும்.

மிகுதியான போட்டி: ஆரம்பத்தில் கூறியது போல, சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்னவென்றால், நீங்கள் தயாரிப்பு அல்லது சேவை தரத்தில் அதிகமாக கவனம் செலுத்துதல் மற்றும் விளம்பரங்களுக்கு செலவிடுதல் ஆகும்.

எனவே, உங்கள் வணிகத்தை இலக்காகக் கொண்டு அமைத்தவுடன் இந்த எல்லா குறிப்புகளுடனும் நீங்கள் செயல் பட்டால் , எண்ணற்ற சாத்தியங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் உங்கள் வணிகத்தை உருவாக்கவும், வளரக்கவும் நீங்கள் தயாராக இருக்கலாம்.