இணைய வழியில் தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

Last Updated at: Apr 01, 2020
1045
இணைய வழியில் தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு வழங்குகின்ற  ஸ்மார்ட் ரேஷன் அட்டை என்பது பழைய  வழக்கமான ரேஷன் அட்டையை மாற்றுவதாகும், இது பொதுவாக சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மானிய விலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும்  பலசரக்கு சாமான்கள் மற்றும் உணவு தானியங்களை பெறுவதற்கு பயன்படுகிறது. இந்த வலைப்பதிவில், ரேஷன் அட்டையின் இணைய வழி விவரங்கள், மற்றும் இணைய வழியில்  ரேஷன் அட்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி அறியலாம்.

சமூகத்தில் நிதி ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் அவர்களின் உயிர்வாழ்வதற்கான அடிப்படை சாமான்களையும்  உணவு தானியங்களையும் அரசாங்கத்தின் உதவியால் பெறுவதை உறுதி செய்வதற்கான ஒன்று தான் ரேஷன் அட்டை ஆகும்.

ரேஷன் அட்டை அனைத்து அரசு துறைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளம் மற்றும் முகவரிக்கு சான்றாகும். ரேஷன் அட்டை  வழங்கக் கூடிய மற்றொரு நன்மை இதுவாகும். விவேகமான தொழில்நுட்பத்தையும் எண்முறை மயமாக்கலையும் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வெளியிட்டு வருகிறது. கைப்பேசி  பயன்பாடு, அழைப்பு மையங்கள், எஸ்எம்எஸ் சேவை, மின்னஞ்சல் சேவை மற்றும் இணைய நுழைவு போன்ற பல எண்முறை தளங்கள் பயனர்களின் நலனுக்காக இந்த அட்டைகளை இணைக்கின்றன.

ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளின் வகைகள்

தற்போது, தமிழக அரசு  நான்கு வகையான ஸ்மார்ட் ரேஷன்  அட்டைகளை வழங்குகின்றன. அவை பின்வருமாறு:

 • வெளிர் பச்சை அட்டைகள்: நியாய விலைக் கடைகளிலிருந்து அரிசி மற்றும் பிற பொருட்களை பெற கூடிய அட்டைதாரர்களான அந்தோடயா அண்ணா யோஜனாவை உள்ளடக்கியது.
 • வெள்ளை அட்டைகள்: நிலையான ஒதுக்கீட்டில் 3 கிலோ கூடுதல் சர்க்கரை வாங்க உதவுகிறது.
 • பொருட்கள் இல்லாத அட்டை: நியாய விலைக்  கடைகளிலிருந்து எந்தவொரு பொருளையும் பெற உரிமை இல்லாதவர்களுக்கு  வழங்குதல் .
 • காக்கி அட்டைகள்: ஆய்வாளர்கள்  பதவி வரை காவல்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுதல்.

ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை  இணைய வழியில் விண்ணப்பிக்க வழிகள்

தமிழ்நாடு மாநில அரசின் திட்டப்  படி, அனைத்து ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளாக  மாறுகின்றன. ஸ்மார்ட் ரேஷன் அட்டையின் இணைய வழி பதிவு மற்றும் பயன்பாட்டிற்குள் நுழைவதற்கு பின்வரும் படிகளை இங்கே காணலாம். இணைய வழியில்  ஸ்மார்ட் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை இங்கே:

 1. முதலில், தமிழ்நாடு பொது விநியோக முறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுக்கவும், அது உங்கள் வலதுபுறத்தில் இருக்கும்.
 2. பக்கத்தில் உள்ள ஸ்மார்ட்அட்டை  பயன்பாட்டு சேவை பிரிவின் கீழ் ஸ்மார்ட் அட்டை  பயன்பாட்டைச் சொடுக்கவும்.
 3. இணைப்பைச் சொடுக்கியவுடன், விண்ணப்ப படிவம் திறக்கும். படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
 4. விவரங்களுடன், படிவத்தில் குடும்பத்தின் தலைமை உறுப்பினரின் புகைப்படத்தை இணைக்கவும். படம் 10 கேபி அளவின் கீழ் ஜிஃப், பிஎன்ஜி, ஜெபிஇஜி அல்லது ஜெபிஜி கோப்பில் இருக்கலாம்.
 5. படிவத்துடன் குடியிருப்புக்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது ஜிஃப், பிஎன்ஜி, பிடிஃப்  அல்லது ஜெபிஜி வடிவத்தில் இருக்கலாம். கோப்பு அளவு வரம்பு 100 கேபி வரை இருக்கலாம்.
 6. அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தேவையான கோப்புகள் பதிவேற்றப்பட்டதும், சமர்ப்பி விருப்பத்தை சொடுக்கவும்.
 7. படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், ஸ்மார்ட் ரேஷன் அட்டையின்  நிலையை சரிபார்க்க பயன்படுத்தக்கூடிய குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள்.

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், பதிவுசெய்யப்பட்ட கைபேசி  எண்ணுக்கு தனிப்பட்ட அடையாள எண் ஒன்றைப் பெறுவீர்கள். இந்த தனிப்பட்ட அடையாள எண்ணை   அருகிலுள்ள விநியோக மையத்தில் காண்பித்து ரேஷன் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்

சில மாநிலங்கள் ரேஷன் அட்டையின்  நிலையை சரிபார்க்க சில வசதிகளை ஒதுக்கியுள்ளன.அவற்றில் சில இன்றும் செயல்பாட்டில் உள்ளன.

சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்

விற்பனை  சாதனத்தின்  புள்ளி(பிஎஸ்டி)  மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது?

நீங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று விற்பனை சாதனத்தின் புள்ளி  மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்யத் தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பு: பிஓஎஸ்  அல்லது விற்பனை சாதனத்தின் புள்ளிகள்  உயிர் புள்ளியல் அமைப்புகள் ஆகும், அவை ரேஷன் விநியோகத்தின் போது போலி அல்லது தகுதியற்ற அட்டைதாரர்களை அகற்ற அறிமுகப்படுத்தப்பட்டன.

கைபேசியில்   பொது செயலியின்  மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த நோக்கத்திற்காக கைபேசி செயலி பயன்படுத்தபி படுகிறது. இந்த பயன்பாடு ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்  இரண்டிலும் இயங்குகிறது மற்றும் இது இந்த நோக்கத்திற்காக ரேஷன் கடை அல்லது பதிவு மையத்தைப் பார்வையிடும் தொந்தரவிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.

உங்கள் ரேஷன் கார்டில் உங்கள் முகவரியை மாற்ற விரும்பினால், ரேஷன் அட்டைக்கு உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் என்றால், உங்கள் ரேஷன் அட்டையில் உங்கள் முகவரியை மாற்ற தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றால், தமிழ் நாட்டின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தை  பார்வையிட வேண்டும்.

மேற்கு வங்கம் தனது மாநில மக்களுக்காக  எண்முறை ரேஷன் அட்டை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் எண்முறை ரேஷன் அட்டையை  மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விரைவில் ரேஷன் எண்முறை மயமாக்கலைத் தொடங்கும்.

ஏற்கனவே உள்ள ஸ்மார்ட் ரேஷன் அட்டையை  இணைய வழியில் புதுப்பித்தல்

ஸ்மார்ட் ரேஷன் அட்டை பின்வரும் முறையில் புதுப்பிக்கப்படும்:

 1. http://www.tnpds.gov.in என்ற முகவரியில் தமிழக பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. உங்கள் ஸ்மார்ட் அட்டையை திருத்தம் செய்யும்  பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் திருத்தம் விருப்பத்தை சொடுக்கவும்.
 3. பதிவுசெய்யப்பட்ட கைபேசி  எண்ணை உள்ளிட வேண்டும், இது திருத்தம் படிவத்தைத் திறக்கும்.
 4. விண்ணப்பதாரர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி ஐப் பெறுகிறார். இருப்பினும், ஓடிபி யை கொடுத்தால்  தான் தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும்.
 5. மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தின் தலைமை உறுப்பினரின் புகைப்படம் ஒட்டப்பட வேண்டும். படம் 10 கேபி அளவின் கீழ் ஜிஃப், பிஎன்ஜி, ஜெபிஇஜி அல்லது ஜெபிஜி கோப்பில் இருக்கலாம். இது முடிந்த பிறகு, சமர்ப்பி விருப்பத்தை சொடுக்க வேண்டும்.  
 6. படிவத்தை சமர்ப்பிக்கும் போது, நீங்கள் ஒரு குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள், இது ரேஷன் அட்டையின்  நிலையைச் சரிபார்க்கப் பயன்படுகிறது.

ரேஷன் கார்டுகள் அனைத்து வகையான வணிகங்களையும் பதிவு (company registration) செய்வதற்கான ஆதாரத்தின் சரியான அடையாளமாகவும் செயல்படுகின்றன.

அருகிலுள்ள ரேஷன் கடைகளை அறிந்து கொள்வதில் பயனருக்கு வசதியளிக்கும் கைபேசி  பயன்பாட்டின் மூலம் தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை அணுக முடியும். மேலும் கிடைக்கக்கூடிய பலசரக்கு சாமான்களை  பற்றிய தகவல்களையும் அவர்களுக்கு வழங்குகிறது. இந்த அட்டையை வைத்திருப்பதன் மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், வழக்கமான ரேஷன் அட்டையைப்  போலல்லாமல், கணவர் குடும்பத் தலைவராக பெயரிடப்பட்ட இடத்தில், ஸ்மார்ட் ரேஷன் அட்டை மனைவியை குடும்பத் தலைவராக வைத்திருக்கிறது. ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள்  அரசாங்க நடைமுறைகளை எண்முறை மயமாக்கும் பணியில் ஒரு புரட்சிகர நடவடிக்கை. அவை அரசாங்கத் திட்டங்களை தொந்தரவில்லாமல் செய்கின்றன, மேலும் பயனர்களுக்கு இது குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்ள உதவுகிறது.