Streamline your tax compliance with our expert-assisted GSTR 9 & 9C services @ ₹14,999/-

Tax efficiency, interest avoidance, and financial control with advance payment @ 4999/-
Others

ரிட் (நீதிப்பேராணை) மற்றும் ரிட் மனு வகைகள்

ரிட் என்பது எழுத்து மூலமாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் எழுத்தாணை (நீதிப்பேராணை- என்றும் கூறலாம்) ஆகும்.

ரிட் என்பது எழுத்து மூலமாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் எழுத்தாணை (நீதிப்பேராணை- என்றும் கூறலாம்) ஆகும்.

உங்களின் அடிப்படை உரிமைகளில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டாலும் கூட,  உயர் நீதிமன்றம் (நிபந்தனை 226) அல்லது உச்ச நீதிமன்றத்தில் (நிபந்தனை 32) ரிட் மனு தாக்கல் செய்யலாம். ரிட் மனுவை பொறுத்த வரையில் உயர் நீதிமன்றத்தின் (நிபந்தனை 226) அதிகாரம் படர்ந்தும் மற்றும் அதன் அரசியலமைப்பு விரிவடைந்தும் உள்ளது.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for MSME Udyam registration.

 

மேலும் இக்கட்டுரையில், பல்வேறு வகையான ரிட் மற்றும் ரிட் மனுவை சமர்ப்பிக்கும் மாதிரி வடிவமைப்பை பற்றியும் காண்போம்.

ஐந்து வகையான ரிட் வகைகள் உள்ளன: அஃதாவது,

  •  கோவாரண்டோ
  •  ஹெபியஸ் கார்பஸ்
  •  மாண்டமஸ்
  • ப்ரோகிபிஷன்
  • செர்ஷியோரரி

ரிட் வகைகள்:

  • ஹெபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு மனு)

ஒரு நபர் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய நீதிமன்றங்கள் ஹெபியஸ் கார்பஸ்-ஐ பயன்படுத்தப்படுகிறது. பதில் ஆம் என்றால், அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியும். ஒரு நபர் சட்டவிரோதமாக  கைது செய்யப்பட்டு இருந்தால், அவரோ, அவரின் நண்பர்களோ அல்லது உறவினரோ கூட ஹெபியஸ் கார்பஸ் ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்.

ஹெபியஸ் கார்பஸ் என்பது லத்தீன் மொழியில் ‘உடலை பெறுவோம்’ (Let us have the body) அல்லது சட்டவிரோதமாக கைது செய்து / அடைத்து வைக்கப்பட்டுள்ள நபரைப் பார்ப்போம் என்று பொருள் ஆகும். நீதிமன்றங்கள் ஹெபியஸ் கார்பஸ் ரிட் மூலம் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள நபரையோ அல்லது கைது செய்யப்பட்ட நபரையோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட முடியும்.

ஹெபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யும் வழிகள்:

 பொதுவாக காவலில் வைக்கப்பட்டுள்ள அல்லது கைதுசெய்யப்பட்ட நபரால் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், ஹெபியஸ் கார்பஸ் படி, காவலில் அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ள நபரின் சார்பில் எந்தவொரு நபரும் எழுத்து வடிவில் மனு தாக்கல் செய்யலாம். இந்த எழுதப்பட்ட மனு ஒரு பொது அதிகாரிக்கோ அல்லது குறிப்பிட்ட நபருக்கோ எதிராக வழங்கப்படலாம்.

  1. மாண்டமஸ்

உயர் நீதிமன்றங்களின் கீழ் இயங்கும் குறு நீதிமன்றங்கள் தாங்கள் செய்ய வேண்டிய சட்டத்தை நிறைவேற்றும்படி உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் கட்டளை ஆணையே மாண்டமஸ் ரிட் ஆகும். ஒரு அரசு பொது அதிகாரி தனது கடமையைச் செய்யவில்லை என்றால், அதை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிடும். மாண்டமஸ் என்பதற்கு ‘கட்டளை’ என்று பொருள் ஆகும்.

நீதிப்பேராணை ஆலோசனை பெற

மாண்டமஸ் மனு தாக்கல் செய்யும் வழிகள்:

மாண்டமஸ் அல்லது ‘எங்கள் கட்டளை’, ரிட் என்பது ஒரு தனி நபர், மாநிலத்தின் தலைவர், தலைமை நீதிபதி அல்லது கவர்னர் உட்பட யாருக்கு எதிராக வேண்டுமானாலும் வழங்கப்படலாம். சட்டரீதியாக எந்தவொரு தனி நபருக்கும் தனக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மாண்டமஸ் ரிட் மனுவை தாக்கல் செய்யும் உரிமை உண்டு.

  1. ப்ரோகிபிஷன்

‘இடைக்காலத் தடுப்பாணை’ என அழைக்கப்படும் ப்ரோகிபிஷன் ரிட் என்பது கீழ் நீதிமன்றத்திற்கு அதன் அதிகாரங்களுக்கு அப்பால் செயல்படுவதை நிறுத்துவதற்காக பிறப்பிக்கப்படும் தடை ஆணை ஆகும்.

சட்டபூர்வமற்ற செயல்களை தடுக்க மாண்டமஸ் ரிட் வழங்கப்பட்டாலும் அதற்கு சரியான தீர்வு அளிக்காத நீதிபதிகள் (கவனிப்பு விஷயத்தில் செயலற்ற நிலைக்கு) மற்றும் கண்டுகொள்ளாத ஆணையர்களுக்கு எதிராக மனு ஆணை பிறப்பிக்கப்படும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை ஆணையை (ப்ரோகிபிஷன் ரிட்) பிறப்பிக்கும்.

  1. செர்ஷியோரரி

ஒரு ஹை கோர்ட் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள அரசு அதிகாரி சட்ட விரோதமாக ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது அந்த குறிப்பிட்ட நீதிமன்றத்துக்கோ / அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக் கோரி கேட்பதுதான் இதன் அடிப்படை. இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

செர்ஷியோரரி ரிட் என்பது சட்டத்தை சீர்படுத்தக்கூடியதாகும்.

  1. கோவாரண்டோ

எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது கோவாரண்டோ

மனுவாகும். இதனை யார் வேண்டுமானாலும் போடலாம்.

சுப்ரீம் கோர்ட்டில் எழுத்து வடிவ மனு வடிவமைப்பிற்கு இங்கே கிளிக் செய்க.

உங்களுடைய அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்தால், ஒரு WRITTEN ORDER  என்கிற ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். பொதுவாக, நீங்கள் அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். பொதுப்பணியாளர்கள் மற்றும் தனியார் அதிகாரிகளுக்கு எதிராகவும் ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்.


Subscribe to our newsletter blogs

Back to top button

Adblocker

Remove Adblocker Extension