Streamline your tax compliance with our expert-assisted GSTR 9 & 9C services @ ₹14,999/-

Tax efficiency, interest avoidance, and financial control with advance payment @ 4999/-
Legal Notice

சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம் ?

ஒரு நபரோ அல்லது நிறுவனத்துடைய தொடர்பையோமுற்றிலும் துண்டிப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவிவகாரம் குறித்து பேசித் தீர்ப்பதற்கானகடைசிவாய்ப்பாகும்.

சட்டப்பூர்வ அறிவிப்பு என்பது இறுதிகட்ட எச்சரிக்கை ஆகும். அதாவது, ஒரு நபரோ அல்லது நிறுவனத்துடைய தொடர்பையோமுற்றிலும் துண்டிப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவிவகாரம் குறித்து பேசித் தீர்ப்பதற்கானகடைசிவாய்ப்பாகும். ஒருநபரிடமோஅல்லது நிறுவனத்திடமோ அவர்களால் ஏற்பட்டமனக்குறைகளை தீர்ப்பதற்காக எழுத்து மூலம் ஆவணம்தயாரித்து அனுப்பப்படும் இறுதி எச்சரிக்கை அறிவிப்பு. இது,பலவழக்குகளில் செயல்படுகிறது. ஒரு வேளைஇந்த இறுதி எச்சரிக்கை அறிவிப்பைஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இந்தியாவில் பொருத்தவரையில், சட்ட அறிவிப்பு என்பது முதல்கட்டசட்டநடவடிக்கையாகும்.ஒருநபரோ அல்லது நிறுவனமோசட்டஉரிமைகள்மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராகசட்ட அறிவிப்பு தொடுக்கலாம்.அதாவது, சட்டப்பூர்வ அறிவிப்பின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், சம்பந்தப்பட்டபிரச்சினையில் நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு காரணமானநபர்பாதிக்கப்பட்டநபரிடம்பிரச்சினை குறித்துப் பேசித்தீர்த்து இழப்பீடு அளித்து பிரச்சினையைசுமூகமாக முடிக்க அளிக்கும் கடைசிவாய்ப்பாக கருதப்படுகிறது.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for MSME Udyam registration.

 

சட்டப்பூர்வ அறிவிப்பின் செல்லுபடி நிலை:

சட்டப்பூர்வ அறிவிப்பு என்பது குறிப்பாகசிவில் சார்ந்த வழக்குகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். குற்றவாளிக்கு எதிராகமாநிலத்தால் எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைக்கு சட்டப்பூர்வு அறிவிப்பு செல்லுபடி ஆகாது.அதனால், குற்றவியல் வழக்குகளுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு (Legal Notice) அவசியமற்றது.ஒருவர் மாநிலத்திற்கு எதிராக சிவில் வழக்கு தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளபோது அரசாங்கத்திற்கு எதிராகசட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்ப வாய்ப்புகள் உண்டு.

இருப்பினும், சட்டப்பூர்வஅறிவிப்பை முன்கூட்டியே அனுப்பி இருந்தால் மட்டுமேமாநிலத்திற்கு எதிராகசட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.சிவில் நடைமுறை விதியின் 1908 பிரிவு 80ன் கீழ் பொது மக்களோ அல்லது அரசு அதிகாரியோ யார் தங்களின் பணியின்போது சட்டஉரிமைகளை மீறுகிறார்களோ அவர்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்படும்.ஆனால், சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குள் அனுப்பிவிட வேண்டும் என்கிறகாலவரையும் இதற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பூர்வ அறிவிப்பு ஏன் தேவை?

  • ஒருவிவகாரம் தொடர்பாக முன்கூட்டியவழக்கு அனுபவம் இல்லாதபட்சத்தில், வழக்கு தொடர்வதாகதீர்மானித்தால், அதற்கு முன்புசட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்புவது நல்ல தொடக்கமாகும்.
  • ஒருவிவகாரம் குறித்து சட்டநடவடிக்கை எடுத்து சரியானத் தீர்வு பெறுவதற்கான அனுப்புனரின் தெளிவான நோக்கம் என்னவென்றுசட்டப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.
  • நீதிமன்றத்தின் தலையீடின்றி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இரு தரப்பினருக்கும் வழங்கப்படும் வாய்ப்பாகவேசட்டப்பூர்வ அறிவிப்பு செயல்படுகிறது.
  • ஒருவருடையதவறானசெயல்பாடு தெரிந்து செய்திருந்தாலோஅல்லது தெரியாமல் செய்திருந்தாலோ அவர்களால் ஏற்பட்ட சேதங்களை அவர்களுக்கு நினைவூட்டவும் சட்டப்பூர்வ அறிவிப்பு செயல்படுகிறது.

ஒருவர் எந்தசூழ்நிலையில் சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பலாம் ?

ஒரு நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பபலகாரணங்கள்உள்ளன. அவற்றில் சிலவற்றைகீழே பார்க்கலாம்:

  • குறிப்பிட்டநிறுவனத்தில் வேலைஒப்பந்தப்படி குறிப்பிட்டுள்ள விதிமுறை மீறுதல், சகஊழியரைபாலியல் ரீதியாக துன்புறுத்துதல், நிறுவனங்களின் மனிதவள கொள்கைகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகளில்சிக்கியஊழியர்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பி எந்தவித முன் அறிவிப்புமின்றி பணியில் இருந்து நீக்கலாம்.
  • சம்பளம் வழங்காதுதல், பணிஒப்பந்தத்தை மீறுதல், நியாயமானகாரணமின்றிபணியில் இருந்து நீக்கப்படுதல் உள்ளிட்டகாரணங்களால் சம்பந்தப்பட்டநிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பலாம்.
  • வழங்கியகாசோலை கணக்கில் சேராமால் திரும்பவரும் பட்சத்தில், காசோலை வழங்கியவருக்கு எதிராகசட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும்.
  • உரிமை கொண்டாடுவதில் மோதல், சொத்து அடமானம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் போன்ற சொத்து தொடர்பானபிரச்சினைளுக்கும் சட்டப்பூர்வ அறிவிப்பு பொருந்தும்.
  • பரம்பரையாக தொடரும்குடும்ப சண்டை, குழந்தைகளை வீட்டுச்சிறை பிடிப்பு, விவாகரத்து போன்ற சொந்த பிரச்சினை காரணமாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கலாம்.
  • தவறான தயாரிப்புகளை விநியோகம் செய்யும், தவறான சேவைகளை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கலாம்.

சட்ட வல்லுநர்களிடம் பேசுங்கள்

சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்குவதற்கானமுக்கியகுறிப்புகள்:

சட்டப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பதில் முன்அனுபவம் இல்லை என்றால், வழக்கறிஞரைக் கொண்டு தயாரிக்கவே அறிவுறுத்தப்படுகிறது. வழக்கறிஞர் அதை தயாரிக்காவிட்டாலும், சட்டப்பூர்வ அறிவிப்பில் வழக்கறிஞரின் கையொப்பம் இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி, சட்டப்பூர்வ அறிவிப்பு வழக்கறிஞரின் தன்முகவரியுடையகடிதத்தாளில் (லெட்டர் பேட்) தான் தயாரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஒரு முறை சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பிவிட்டால், திரும்பப்பெற்று மாற்றங்கள் செய்ய முடியாதுஎன்பதைநினைவில் கொள்ளுங்கள்.
  2. சட்டரீதியாகஏற்பட்ட சேதங்கள்மற்றும் சட்டப்பூர்வஅறிவிப்பை பெற்றுக் கொள்ளும் நபரின் முழு விவரங்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். மற்றும், அதன் தொடர்பானஅனைத்து ஆவணங்களும் முன்னதாகவே சேகரித்து வைக்க வேண்டும்.
  3. சட்டப்பூர்வ அறிவிப்புகளை தபால்அல்லது இணையத்தள வழிகளிளோ அனுப்பப்படலாம்.
  4. சட்டப்பூர்வ அறிவிப்பு பெறும் நபர் 30 முதல் 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
  5. சட்டரீதியானநடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கவும். அறிவிப்பு பெற்றவர்கள் வேறுவழியின்றி அனுப்புனரின் விதிமுறைகளை ஏற்கும் வகையிலும் சட்டப்பூர்வ அறிவிப்பு தயாரித்தல் வேண்டும்.
  6. பெறுநர் மறுக்க முடியாத அளவிற்கு தகுந்த உண்மைகளும், எதிர்பார்க்கப்பட்ட தீர்வுகளும் துல்லியமாக தெரிவித்திருக்க வேண்டும். சட்டஅம்சங்கள்; அதாவது, எந்தசட்டத்தின் கீழ் தீர்வு கூறப்படுகிறது என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.
  7. காசோலை திரும்ப வந்தால், அந்ததினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்ப வேண்டும். அறிவிப்பு அனுப்பி 15 நாட்களுக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் சட்டப்படி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.

அனைத்து வழக்குகளுக்கும் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்க வேண்டும் என்றஅவசியமில்லை. நீதிமன்றத்தின் நீண்டநடவடிக்கையைதவிர்த்து அனுப்புனருக்கும், பெறுநருக்கும் இடையேபிரச்சினை சுமூகமாக முடிக்க அவர்களுக்கு வழங்கும் இறுதி வாய்ப்பேஇந்தசட்டப்பூர்வ அறிவிப்பு ஆகும்.


Subscribe to our newsletter blogs

Back to top button

Adblocker

Remove Adblocker Extension