Streamline your tax compliance with our expert-assisted GSTR 9 & 9C services @ ₹14,999/-

Tax efficiency, interest avoidance, and financial control with advance payment @ 4999/-
Provident Fund

படிவம் 10 சி – திரும்பப் பெறும் படிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

படிவம் 10 சி இணைய வழியிலும் இணைய வழி இல்லாமலும்  நிரப்பப்படலாம். படிவம் 10 சி வகைகள், அத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் அதன் பயன்களை காணலாம்...

ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பணியாளர் ஈடுபாடும் பாதுகாப்பும் முக்கியம். ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்றபின் உட்கார்ந்து ஓய்வெடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு திட்டம் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் (EPS) ஆகும். இங்கே, இந்த திட்டத்தின் கீழ் நன்மைகளை கோர உதவும் ஒரு முக்கியமான ஆவணத்தை (படிவம் 10 சி) விவாதிப்போம்.

படிவங்களின் வகைகள்

பல ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு, பல நடவடிக்கைகளைப் பொறுத்து பல்வேறு படிவங்கள் நிரப்பப்பட வேண்டும்:

  • படிவம் 10 டி: பணியாளர் ஓய்வூதியத்திற்குப் பிறகு 58 மாத ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் போது இந்த படிவம் நிரப்பப்படுகிறது.
  • படிவம் 10 சி: ஓய்வூதியம் / இபிஎஸ் தொகை திரும்பப் பெறவிரும்பினால்  இந்த படிவம் நிரப்பப்படுகிறது. ஊழியர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இல்லாதபோது, தொகையை திரும்பப் பெற விரும்பும் வழக்கில்  இந்த படிவம் வழக்கமாக நிரப்பப்படுகிறது.

படிவம் 10 சி நிரப்புதல்

இந்த படிவம் இணைய வழியிலும் இணைய வழி இல்லாமலும்  நிரப்பப்படலாம். இபிஃ ப்ஓ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் பதிவிறக்குவதன் மூலம் அதை இணைய இணைப்பு இல்லாமலும்  நிரப்பலாம்.

படிவம் 10 சி பின்வரும் படிகள் மூலம் இணைய வழியில் நிரப்பப்படலாம்:

    • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.epfindia.gov.in ஐத்  திறக்கவும்,  
    • பின்னர், உங்கள் யூஏஎண் எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டவுடன், உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
    • மற்றொரு பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் இணைய வழி  சேவைகள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். 
    • பல்வேறு உரிமைகோரல் படிவ விருப்பங்களிலிருந்து, படிவம் 10 சி ஐத் தேர்ந்தெடுக்கவும்.
    • அடுத்த பக்கம் திறக்கும் , அங்கு உங்கள் அனைத்து  விவரங்களையும் நீங்கள் காண முடியும்.
    • “இணைய வழியில்  உரிமைகோரலைத் தொடரவும்”  என்ற பொத்தான் வழங்கப்படும்.  தகவலைச் சரிபார்த்ததும், அந்த பொத்தானை தேர்வு செய்ய வேண்டும்.
    • உரிமைகோரல் பிரிவு திறக்க்கும் , அங்கு நீங்கள்   ‘பி.எஃப் மட்டும் திரும்பப் பெறு’ அல்லது ‘ஓய்வூதியத்தை மட்டும் திரும்பப் பெறு’ என்ற உரிமைகோரல் வகையில் உங்களுக்குத் தேவையான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
    • படிவத்தை முழுமையாகவும் கவனமாகவும் நிரப்பவும். எல்லா தகவல்களையும் சரியாக உள்ளிட்டவுடன்  ஓடீபி ஐப் பெறுவீர்கள்.
    • நீங்கள் ஓடீபி ஐ சமர்ப்பிக்கும் போது, உடனடியாக உரிமைகோரல் கோரிக்கையின் துவக்கம் உயரும்.
    • எல்லா செயல்முறையையும் நீங்கள் முடித்ததும், அது உரிமைகோரல் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டு திரும்பப் பெறும் தொகை உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும்.

படிவம் 10 சி இன் பயன்கள்:

  • திரும்பப் பெறும் தொகைகள்: 10 வருட சேவையை நிறைவு செய்யாத மற்றும் 50 வயதிற்கு குறைவான வயதுடைய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகைகளுக்கு தகுதியற்றவர்கள் என்பதால் அந்தத் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக  இந்த நன்மை வழங்கப்படுகிறது.
  • இபிஃப் க்கான உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள திட்ட சான்றிதழைப் பெறுதல்: ஊழியர் 9.5 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருந்தால், அவர்கள் மீண்டும் வேலை / நிறுவனத்தில் சேரும்போது உறுப்பினர்களாகத் தொடர இந்த சான்றிதழைக் கோரலாம், மேலும் அவர்கள் தொகையை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகின்றனர்.  இந்த திட்ட சான்றிதழைக் கோருவதற்கு பணியாளர் 50 வயதுக்கு குறைவானவராக இருக்க வேண்டும்.
  • முதலாளிக்கான பங்கு திரும்பப்பெறுதல்

படிவம் 10 சி: பொருளடக்கம் மற்றும் வழிமுறைகள்

இந்த படிவம் மொத்தம் 4 பக்கங்களைக் கொண்டுள்ளது, இதில் முதல் 2 பக்கங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கிய பொதுவான தகவல்களால் நிரப்பப்பட வேண்டும்:

  • பெயர்
  • பி.எஃப் எண்
  • பிறந்த தேதி
  • தந்தையின் / கணவரின் பெயர் மற்றும் முகவரி
  • பிற தனிப்பட்ட தகவல்கள் மற்றும் விவரங்கள்

3 வது பக்கத்தில், கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட முன்பணத்தை  முதலாளி நிரப்ப வேண்டும், மேலும் 4 வது பக்கம் நிர்வாக நோக்கங்களுக்கான தகவல்களைக் கொண்டுள்ளது மற்றும் இது  முதலாளியால் நிரப்பப்பட வேண்டியதில்லை.

படிவம் 10 சி உடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

படிவத்தில்  கடைசியாக பணிபுரியும் அமைப்பின் முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் கையொப்பமிட வேண்டும். வழக்கில், அமைப்பு இனி இல்லை என்றால், ஏதாவது ஒரு  அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியும் படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.

இந்த படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பிற ஆவணங்கள் பின்வருமாறு:

  • வெற்று காசோலை 
  • பிறப்புச் சான்றிதழ் (திட்ட சான்றிதழுக்காக)
  • இறப்புச் சான்றிதழ் (முதலாளி இல்லாவிட்டால்)
  • 1 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை

முடிவுரை

இந்த படிவம் ஊழியர்களுக்கு சேகரிக்கப்பட்ட தொகையை பல ஆண்டுகளாக இழக்காமல், பெற உதவுகிறது. நன்மைகளைப் பெறுவதற்கு அனைத்து ஆவணங்களும் மற்றும் கட்டளைகளும் அவசியம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.


Subscribe to our newsletter blogs

Back to top button

Adblocker

Remove Adblocker Extension