படிவம் 61A என்றால் என்ன? இதற்கான தேவை என்ன?

Last Updated at: Mar 09, 2020
1402
படிவம் 61A என்றால் என்ன? இதற்கான தேவை என்ன?

நம் அரசாங்கம் எப்போதும் தனிநபர்கள் செய்யும் பரிவர்த்தனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலமாக அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதோடு, வருமானம் குறித்த முறைகள் மற்றும் வரி செலுத்துவோர் செலுத்தும் வரிகளைப் பற்றிய தகவல்களை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 285BA இன் கீழ் வருமான வரித் துறை ஒவ்வொரு தனிநபர் வருமானத்தைக் கண்டறிய, வருமான வரித் துறை படிவம் 61A அறிமுகப்படுத்தியது.

வருமான வரியின் படிவம் 61 A: 

SFT (Statement of Financial Transactions) என்னும் இந்த பார்ம் ஆனது  ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் எல்லா விதமான வரி செலுத்துவோர்க்கும் பொதுவானதாகும். இதில் குறிப்பிட்ட நிதி பரிமாற்றங்கள் தன்மை மற்றும் அதன் மதிப்புகளையும் இந்த FORM 61A உடன் வழங்கப்பட வேண்டும். இந்த படிவம் மின்னணு முறையில் பதிவேற்ற படுக்கிறது, மற்றும் இதில் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் (டி.எஸ்.சி) பயன்படுத்தி தாக்கல் செய்யலாம்.

பார்ம் 61A  வின் வடிவம்:

இந்த படிவம் 61A இல் கேற்கப்பட்டு இருக்கும் விவரங்களை நீங்கள் பின்வருமாறு நிரப்ப வேண்டும்:

 • பெயர் 
 • பான் நம்பர் 
 • போலியோ நம்பர் 
 • முகவரி
 • SFT யின் பதிவு எண்
 • SFT மற்றும் நிதியாண்டில் அவற்றின் மொத்த மதிப்பு
 • ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷன்ஸ் செய்யும் பொழுதும் பைனான்சியல் இயர்ரை கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும்.
 •  ட்ரான்ஸாக்ஷன்ஸ் தொடர்பான அணைத்து விவரங்கள்.

குறிப்பிடப்பட்ட நிதி பரிவர்த்தனைகள்: 

குறிப்பிடப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் கீழ் சேர்க்கப்பட்ட பரிவர்த்தனைகள் என்னவென்றால்:

  • பொருட்களை வாங்குவது, விற்பது, பரிமாறிக்கொள்வது போன்ற பரிவர்த்தனைகள்.
  • வேலைக்கான ஒப்பந்தங்கள்.
  • பல்வேறு சேவைகளை வழங்குவது தொடர்பான பரிவர்த்தனைகள்.
  • போடப்பட்ட முதலீடுகளும் செய்யப்பட்ட செலவுகள் குறித்த ட்ரான்ஸாக்ஷன்ஸ். 
  • டெபாசிட்ஸ் மற்றும் லோன்கல் 
  • இந்த ட்ரான்ஸாக்ஷன்ஸ் வரம்பு அதன் வகையைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

சட்ட வல்லுநர்களிடம் பேசுங்கள்

FORM 61A  வின் ட்டியூ டேட்:

ஒவ்வொரு நிதியாண்டின் மே 31 ஆம் தேதிக்கு முன்பு இந்த FORM  61A வை  கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். ஏதாவது சூழ்நிலையில் வரி செலுத்துவோர் குறித்த தேதிக்குள் இந்த படிவத்தை சமர்ப்பிக்க முடியாவிட்டால், அதற்காக 30 நாட்கள் அறிவிப்பு காலம் வழங்கப்படுகிறது.

FORM 61A வின் கீழ் செய்யப்படவேண்டிய ட்ரான்ஸாக்ஷன்ஸ்:

வரி செலுத்த வேண்டியோர் சமர்ப்பிக்க வேண்டிய FORM  61A  லிமிட்ஸ் பரிவர்த்தனை முறை
கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பர்சேஸ் ஆர்டர் மற்றும் டிமாண்ட் டிராப்ட் அதிகபட்ச லிமிட்ஸ்  INR 10 லட்சம் ஆகும் 
கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி நிறுவனங்கள் பணம் செலுத்துதல்  ப்ரீபெய்ட் ரிசர்வ் வங்கியின்  சலுகைகளை வாங்க பயன்படுகிறது.மேலும்  இவற்றில் ரிசர்வ் வங்கியின் பத்திரங்கள் மற்றும் பிறவும் அடங்கும்.

கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி நிறுவனங்கள்
பணத்தை டெபாசிட் செய்வதும் வித்ட்ரா செய்வதும்  குறைந்தபட்ச தொகையாக  ரூ .50 லட்சமும், அதற்கு  மேலும் அதிகரிக்கலாம்.
கூட்டுறவு வங்கிகள், வங்கி நிறுவனங்கள், தபால் நிலையங்கள் வைப்பு தொகை  வரி செலுத்துவோரின் அனைத்து கணக்குகளிலும் மொத்தம் 10 லட்சம் இருக்க வேண்டும் 

கூட்டுறவு வங்கிகள், வங்கி நிறுவனங்கள், தபால் நிலையத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்
பணம் செலுத்துதல்  ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் அல்லது அதற்கும் மேல் இறுக்க வேண்டும். கிரெடிட் கார்டு பில்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச தொகை பத்து லச்சத்திற்கு, மேலும் நீட்டிக்கப்படலாம்.
பத்திரங்களை வழங்கும் நிறுவனங்கள்  ரசீது பத்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மட்டும் பத்திரங்களைப் பெறுவதன் மூலம் வாங்கப்பட வேண்டும்
பங்குகளை வழங்கும் நிறுவனங்கள்
 
ரசீதுகள் பங்குகளைப் பெற, ரசீது பத்து லட்சத்தை தாண்ட வேண்டும்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்
ஷேர்ஸ்  பை பேக் ஒருவேளை தொகை பத்து லச்சதை தாண்டும் போது பங்குகள் மீண்டும் வாங்கப்படுகின்றன
மியுசுவல் பண்ட்ஸ்சின் மேலாளர் ரசீதுகள் இந்த பங்குகளைப் பெற, ரசீதுகள் பத்து லட்சத்தை தாண்ட வேண்டும்.

அந்நிய செலாவணி வியாபாரி
ரசீது பத்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரசீதை வெளிநாட்டு விற்பனை மற்றும் நாணய வியாபாரி வழங்க வேண்டும். இந்த தொகையை via cards  அல்லது drafts சில் வழியாக ஏற்படும்.
 

துணை பதிவாளர் / இன்ஸ்பெக்டர் ஜெனரல்
விற்பனை / கொள்முதல் ட்ரான்ஸாக்ஷனின் தொகை அளவு 30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
ஐ.டி.ஏ (வருமான வரி சட்டம்) இன் பிரிவு 44 பி இன் கீழ் அந்த நபரின் கணக்குகளை  ஆடிட் செய்யப்படும் 
பண ரசீது
இரண்டு லச்சத்திற்கு மேல் பொருட்களின் விற்பனை தொகை இருக்க வேண்டும் 

 

இவையே வருமான வரி விதிகள் சட்டம் 1962 இன் கீழ், பல்வேறு SFT (SPECIFIED FINANCIAL TRANSACTIONS ) ஆகும்.

பார்ம் 61A வின் முக்கியத்துவங்கள்:

வருமான வரி (Income Tax) துறைக்கு இந்த படிவம் மிகவும் நம்மைகள் தருகின்றது. அதிகபட்ச உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை தனி நபர்கள் மேற்கொள்ளும் போது அவற்றை கண்காணிக்க அவர்களுக்கு உதவுகிறது, மேலும் இந்த நபர்கள் வரி செலுத்துவதிலிருந்து எவ்வாறு தப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்பதைப் இதன் மூலம் புரிந்துகொள்ளப்படுகிறது . இதனால் செய்யும் தொழிலில் ஒளிவு மறைவு இன்றி நேர்மையான கணக்குகள் காட்டி நடத்த படுகின்றன. மேலும் இது மட்டுமல்லாமல், அந்த நிதி ஆண்டு முழுவதுமாக தனிநபர்கள் மேற்கொண்ட அனைத்து உயர் மதிப்பு மற்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளின் பதிவையும் வைத்திருக்க இது அனுமதிக்கிறது.

பான் கார்டு, பரிவர்த்தனைகளில், பிரிவு (அ) முதல் (எச்) விதி 114 பி வரை வருமான வரியின் படிவம் 61 ஏ இடத்தில் பயன்படுத்தலாம். இதன் பரிவர்த்தனைகள் –

 1. ரூபாய் 5 லச்சத்திற்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்.
 2. இரு சக்கர வாகனத்தைத் தவிர்த்து மற்ற வாகனங்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்.
 3. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிலையான வைப்பு தொகையை வங்கியிலோ அல்லது தபால் நிலையத்தில் வைத்து இருக்க வேண்டும்.
 4. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடையவை ஒரு சில குறிப்பிடப்பட்ட பத்திரங்கள் இருக்க வேண்டும்.
 5. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான பில்கள், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.

படிவம் 61A க்கான அபராதங்கள்:

61A படிவத்தை  தாக்கல் செய்து சமர்ப்பிக்கத் தவறும் தனிநபர் மீது, அதிகாரிகள் 30 நாட்களுக்கு ஒரு கால அவகாசத்துடன் அவர்களுக்கு எச்சரிக்கை அனுப்புவார்கள். எனவே கொடுக்கப்பட்ட அந்த கால அளவுக்குள் தனிநபர் படிவத்தை சமர்ப்பிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அந்த 30 நாட்களுக்குள்ளும் செலுத்தப்படவில்லை என்றால் 30 நாட்களுக்குப் பிறகு, 500 / நாள் அபராதம் விதிக்கப்படுகிறது.

தவறான தகவல் மற்றும் விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான அபராதங்கள்:

தெரிந்தோ தெரியாமலோ, தனிநபர் தவறான தகவல்களையும் விவரங்களையும் சமர்ப்பித்தால், அவர்கள் எந்த அபராதமும் செலுத்தாமல் பத்து நாட்களுக்குள் அதை மாற்றலாம். 

ஒருவேளை ஏதேனும் முரண்பாடுகளை வருமான வரி அதிகாரிகள் கண்டறிந்தால், அந்த நபருக்கு தகவல் அளிக்கப்படும். என்னவே அந்த தவறை மீண்டும் திருத்தி சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக மேலும் ஒரு 30 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த நபர் தவறை செரிசெய்ய தவறினால் அவர்கள் 50,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். இயல்புநிலை தகவல்கள் உள்ளிடப்பட்டால் தவறை சரிசெய்யும் தேதி நீட்டிக்கப்படலாம்.

முடிவுரை:

தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை வெளிப்படையாக வருமான வரி துறையிடம் ஒளிவு மறைவு இன்றி நடத்தவும், அனைத்து உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் மற்றும் நிதிகளை சரிவர கணக்கு காட்டவும் இந்த வருமான வரியின் படிவம் 61 ஏ மிகவும் அவசியம்.