ஒப்பந்த தொழிலாளர் என்றால் என்ன? – அதன் சிறப்பம்சங்கள், நடைமுறை மற்றும் மீறல்கள் குறித்த தகவல்கள்

Last Updated at: Mar 30, 2020
3384
ஒப்பந்த தொழிலாளர் என்றால் என்ன?

ஒப்பந்த தொழிலாளர் என்பது நிறுவனத்தில் வேலை செய்யும் நபரை குறிக்கிறது, அந்த நபரை அமர்த்தப்படும் வேலையுடைய அட்டவணைகளும், அவர் அந்த நிறுவனத்தில் பணி புரியவேண்டிய காலம் பற்றிய தகவல்களை கொண்ட ஒரு ஒப்பந்தக்காரர் மூலம்  ஒரு நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். இந்த ஒப்பந்த தொழிலாளர்களை எந்த ஒரு நிறுவனமும் நேரடியாக வேளைக்கு அமர்த்துவது இல்லை, மேலும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஊதியம் இல்லை. நிறுவனங்கள் எப்போதுமே ஒப்பந்தக்காரர்களையே (Contractors) களை நியமிக்கிறார்கள், மேலும் அவர்கள் அந்த நிறுவனத்திற்கு வெவ்வேறு வேலைகளுக்கு பணிபுரிய நபர்களை, நிபந்தனைகளின் பேரில் தேர்வு செய்கிறார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட வேலை ஆட்களை அந்நிறுவனம் எந்த சூழல்களிலும் தவறாக நடத்தும் சூழல்களில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கவும், மேலும் அவர்கள் வேலை செய்யும் சூழல்களை ஆரோக்கியமானதாகவும், ஒப்பந்த தொழிலாளர் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு சட்டம் (Contract Labour Regulation and Abolition Act) 1970 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தச் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலன்,

ஒழுங்குபடுத்துதல், சுகாதாரம், காண்ட்ராக்ட் லேபர்ஸ் களுக்கு கொடுக்கப்படும் பேமென்ட்ஸ், மற்றும் அந்த நிறுவனங்களின் பதிவு குறித்த தகவல்கள், மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு உரிமத்தின் மானியங்கள் குறித்த விரிவான விதிகளை தெரிவிக்கின்றன

ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்புச் சட்டம்), 1970 இன் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் உள்ள அணைத்து நிறுவனத்திற்கும் இந்த சட்டம் பொருந்தும். எல்லா நிறுவனங்களிலும் இருபது அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றாலோ, தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் தொழிலாளிகளையும், கடந்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பணிபுரிந்த நபர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். மேலும் இந்த சட்டம் ஒவ்வொரு கான்ட்ராக்டர்ஸின் கீழ் நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும் அல்லது  கடந்த பன்னிரண்டு மாதங்களில் எந்த நாளிலும் வேளைக்கு அமர்த்திய இருபது அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் பொருந்தும். சாதாரண அல்லது ஒழுங்கற்ற வேலை செய்யப்படும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. இது மீண்டும் சில துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது :

 1. ஒரு ஸ்தாபனம் கடந்த பன்னிரண்டு மாதங்களில், நூற்று இருபது நாட்களுக்கு மேல் செயல்பட்டால், அப்போது அந்த ஸ்தாபனத்தை இடைப்பட்ட நிறுவனம் என்று கருதப்பட முடியாது
 2. அந்த ஸ்தாபனம் ஒரு வருடத்தில் அறுபது நாட்களுக்கு மேல் செயல்பட்டாலோ மற்றும்  அந்த நிறுவனம் பருவகாலதில் செய்யப்படும் நிறுவனமாகவோ இருந்தால், அந்த ஸ்தாபனத்தை இடைப்பட்ட நிறுவனம் என்று கருதப்பட முடியாது.  

பதிவு செய்யப்பட்ட நிறுவனகளுக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதற்கான மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்

ஒவ்வொரு நிறுவனமும் அவர்களது நிறுவனத்திற்கு பணிபுரிய காண்ட்ராக்ட் லேபர்களை நியமனம் செய்கின்றது, அப்படி வேலை ஆட்களை நியமனம் செய்வதற்கு அந்த நிறுவனம் அரசாங்கத்தின் கீழ் பதிவு சான்றிதழ் பெற வேண்டும். அத்தகைய நிறுவனங்களை பதிவு செய்வதற்கான நடைமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

  1. Form no. 1 எனும் விண்ணப்பத்துடன், பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தியதை குறிக்கும் ரசீதுடன், அந்த  நிறுவனம் பதிவு ( company registration ) அலுவலகத்திற்கு (REGISTRATION OFFICE) ஸிற்கு பதிவு செய்வதற்காக செல்ல வேண்டும்.
  2. அப்படி கொடுக்கப்பட்ட விண்ணப்பம் எல்லா வகையிலும் பூர்த்தி செய்யப்பட்டால், அந்நிறுவனத்தை ரெஜிஸ்டர் ஆஃபீசர் ரெஜிஸ்டர் செய்கிறார், மற்றும் படிவம் II இல் பதிவு செய்யப்பட்ட சான்றிதழின் நகலையும் அத்துடன் வழங்குகிறது.

சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்

பதிவு சான்றிதழ் விவரங்கள்

 1. ஸ்தாபனத்தின் பெயர் மற்றும் முகவரி.
 2. ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம்  பணியமர்த்தப்பட வேண்டிய அதிகபட்ச தொழிலாளர்கள்.
 3. அவர்கள் நடத்தும் வணிகத்தின் வகை மற்றும் அவற்றை பற்றிய மற்ற சில தகவல்கள்

ஒப்பந்தக்காரருக்கான உரிமம்

ஒரு நிறுவனதின் கீழ்  பணிபுரியும் ஒவ்வொரு ஒப்பந்தக்காரரும், கடந்த பன்னிரண்டு மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் இருபது அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அந்த காண்ட்ராக்டர்கள் அதற்கான பர்மிட்களை பெற்றிருக்க வேண்டும். உரிமம் வழங்கும் அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் (Contract Labour Act )  பிரிவு 12 ன் படி இந்த உரிமத்தை கான்ட்ராக்டர்களுக்கு வழங்குகிறார்கள். அத்தகைய பிரிவின் கீழ், அந்த பர்மிட்டில் அந்த நபர் பணிபுரியும் கால அளவு குறித்த விபரங்களையும், அவர்களுக்கான வேஜஸ் குறித்த விபரங்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான பிற வசதிகள் குறித்த தகவல்களையும் கூறப்படுகிறது.  

உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகள்

உரிமம் வழங்கும் அதிகாரியிடமிருந்து உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 1. உரிமம் வழங்கும் அதிகாரியிடம் படிவம் எண். IV கீழ் உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பத்துடன் ஒரு காண்ட்ராக்டர் அனுமதி கேட்கவேண்டும்.
 2. பாதுகாப்பு கட்டண மாக ருபாய் 20 தை விண்ணப்பிக்கும் நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.
 3. உரிமம் வழங்கும் அதிகாரிக்கு செலுத்தப்பட்ட கட்டண ரசீதுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
 4. படிவம் V இல் நிறுவனத்தின் முதலாளிகளின் மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்களில் அவர், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரை அவரது  நிறுவனத்திற்காக பணியமர்த்தியதாகக் குறிப்பிடுகிறார்.
 5. ஒரு நிறுவனத்திடம் உரிமம் வழங்கும் அதிகாரி அவர்களுக்கு தேவையான விசாரணைகளை அந்த நிறுவனத்திடம்  மேற்கொள்ளலாம், படிவம் VI இல் இருக்கும் உரிமத்தை வழங்கலாம், அதற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன்இது காலாவதி ஆகும் தேதியில் இருந்து 30 நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட வேண்டும். அப்படி அவர் செலுத்த தவறினால் ஒப்பந்தக்காரரின்  சாதாரண தொகையை விட 25% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒப்பந்தக்காரர் மற்றும் நிறுவனத்தின் முதலாளியின் கடமைகள்

ஒப்பந்தக்காரர் பின்வருவனவற்றைச் செய்கிறாரா என்பதை அந்த நிறுவனத்தின் முதலாளி  உறுதிப்படுத்த வேண்டும் :

 1. அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டபடி ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்துகிறார்களா அல்லது,
 2. தொழிலாளர் ஆணையாளர் நிர்ணயித்தபடி ஊதியத்தை செலுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
 3. அவர்கள் இல்லாத நிலையில், உழைப்பாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான ஊதியம் செலுத்தப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
 4. பின்வரும் வசதிகளை வழங்குகிறது :
 • உழைப்பாளர்களுக்கு கேண்டீன் வசதிகள், (பணிபுரியும் தொழிலாளர்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தாலோ மற்றும் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தால்) அப்போது கேண்டீன் வசதிகள் குறித்து கவனிக்கப்பட வேண்டும்.
 • உழைப்பாளர்களுக்கு அவர்கள் அந்த நிறுவனத்தில் தான் பணிபுரிகிறார்கள் என்பதற்கான அடையாள அட்டைகள்  வழங்குகிறது.
 • மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் வேலை செய்யப்படும் இடங்களில் இரவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் போதிய அளவு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
 • ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான சிறுநீர் கழிப்பறைகளின் வசதிகள் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
 • உழைப்பாளர்களுக்கு தேவையான  குடிநீர், துவைக்கும் இடம், முதலுதவி, க்ரெச் போன்றவை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

5. பல்வேறு பதிவேடுகள் மற்றும் பதிவுகள், அறிவிப்புகள் போன்றவற்றை பராமரிக்கிராதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் மீறல்கள்

 1. எந்தவொரு சட்டத்தின் எந்தவொரு பகுதியையும் மீறும் எந்தவொரு நபருக்கும் மூன்று மாதங்களுக்கும் மேலாக கஸ்டடியிலோ  அல்லது ரூ .1,000 ரத்தை அபராதமாக அளிக்கப்படும் அல்லது அவர்களின் தண்டனையின் தீவிரத்தை பொறுத்து, இரண்டு தண்டனைகளை சேர்த்தபடிகூட அவர்களுக்கு தண்டனையாக கொடுக்கப்படலாம்.
 2. கூடுதல் அபராதம் வழங்கப்படாத சட்டத்தின் கீழ், நிறுவனத்தில் பணிபுரியும் அந்த நபர் எந்த விதிகளையாவது மீறும் போது பின்னர் அவளுக்கோ அல்லது அவனுக்கோ மூன்று மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படலாம், அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கப்படும், அல்லது அவர்களது குற்றத்தை பொறுத்து இரண்டு தண்டனைகளையும் சேர்த்து வழங்கலாம்.