இந்தியாவில் பெயர் மாற்றத்திற்கான சிறந்த காரணங்கள் யாவை?

Last Updated at: Mar 09, 2020
525
இந்தியாவில் பெயர் மாற்றத்திற்கான சிறந்த காரணங்கள் யாவை

உங்கள் பெயரே நீங்கள் யார் என்பதன் பிரதிபலிப்பாகும், ஆனால், பல சமயங்களில், மக்கள் தங்களது பெயரில் மகிழ்ச்சியடைவதில்லை, அதை மாற்ற விரும்புகிறார்கள். நமது சட்ட அமைப்பில் இதற்கு ஒரு செயல்முறை உள்ளது. ஒரு குறிப்பிட்ட நெறிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பெயர் மாற்றத்தைப் பெறலாம். ஆனால், முதலில், மக்கள் ஏன் பெயர் மாற்றத்திற்கு செல்ல விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம், மேலும் இந்தியாவில் பின்பற்றப்படும் நடைமுறையைப் பார்ப்போம். இந்தியாவில் பெயர் மாற்றத்திற்கான காரணங்கள் பற்றி இக்கட்டூரையில் காணலாம்.

இந்தியாவில் பெயர் மாற்றத்திற்கான காரணங்கள்:

 • திருமணம் இந்தியாவில், மனைவி தனது கணவரின் குடும்பப் பெயரைச் சேர்ப்பது என்பது ஒரு பொதுவான பாரம்பரியம். அத்தகைய சந்தர்ப்பத்தில்லுள்ள ஒருவர் முக்கியமான ஆவணங்களில் பெயர் மாற்றத்திற்கு செல்ல வேண்டும்.
 • விவாகரத்து திருமணம் முறிந்தவுடன், பல பெண்கள் தங்கள் முதல் பெயருக்குச் சென்று, முன்னாள் கணவரின் குடும்பப் பெயரை நீக்குகிறார்கள். இந்த விஷயத்திலும், அவர்கள் பெயர் மாற்ற செயல்முறைக்கு செல்ல வேண்டும்.

தற்போதைய பெயரை விரும்பவில்லை – பல சமயங்களில் மக்கள் தங்கள் பெயரை விரும்புவதில்லை, அதை மாற்ற விரும்புகிறார்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில், அவர்கள் பெயர் மாற்றத்திற்கு செல்லலாம். பெயர் மாற்றத்திற்கு செல்லும்போது ஒருவர் பின்பற்ற வேண்டிய வரையறுக்கப்பட்ட நெறிமுறை உள்ளது.

 • மத காரணங்கள் மக்கள் தங்கள் பெயருக்கு கூடுதல் எழுத்துக்களை சேர்ப்பது அல்லது அவர்களின் பெயரிலுள்ள எழுத்துப்பிழைகளை மாற்றுவதை நீங்கள் அடிக்கடி கவனித்திருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம் எண்கணிதமாகும். அவ்வாறு செய்யும் பிரபலங்கள் பலர் உள்ளனர். அத்தகைய சந்தர்ப்பத்தில், அவர்கள் பெயர் மாற்ற செயல்முறைக்கு செல்ல வேண்டும்.

அரசியல் சூழல்  பல அரசியல்வாதிகள் அல்லது அரசியல் மீது ஆர்வம் கொண்டவர்களும் மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த பெயர் மாற்றத்திற்கு செல்கின்றனர். சிலர் தங்கள் பெயருடன் ஜெய் ஹிந்த்”, “ஸ்வராஜ்”, “பாரத்”, “பாரதியாபோன்ற தலைப்புகளைச் சேர்க்கிறார்கள்.
பாலின மாற்றம் – பாலின மாற்றத்திற்கு யாராவது செல்ல விரும்பினால், அடுத்த கட்டம் அவர்கள் பெயர் மாற்றத்திற்கு செல்ல வேண்டும்.

அடையாள ஒப்பனை – தொழில்முறை அல்லது வேறு மதத்திற்கு மாறுவது போன்ற பல்வேறு காரணங்கள்இருந்தாலும் அவர்கள் பெயர் மாற்றத்திற்கு செல்ல வேண்டும்.

பெயர் மாற்றத்திற்கான நடைமுறை என்ன?

பெயர் மாற்றத்திற்கு செல்ல ஒருவர் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளின் தொகுப்பு உள்ளது. பெயரை மாற்ற கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்:

 • முதல் படியாக, நீங்கள் பெயர் மாற்றத்திற்காகப் போகிறீர்கள் என்று கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தை உருவாக்கி அதை அங்கீகரிக்க வேண்டும்.
 • பிரமாணப் பத்திரம் முடிந்ததும், நீங்கள் பெயர் மாற்றத்திற்காகச் சென்றதாகக் கூறி ஒரு செய்தித்தாளில் வெளியிட வேண்டும். விளம்பரத்தில் பழைய பெயர் மற்றும் புதிய பெயர் இரண்டுமே இருக்க வேண்டும்.
 • விண்ணப்பதாரர் இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட ஆவணங்களைப் பெற வேண்டும்.

பெயர் மாற்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் முடித்ததும், அடுத்த கட்டமாக நிரந்தர கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற முக்கியமான ஆவணங்களில் பெயர் மாற்றத்திற்கு செல்ல வேண்டும்.

பெயர் மாற்றம்

நிரந்தர கணக்கு எண் அட்டையில் பெயர் மாற்றத்திற்கான செயல்முறை பற்றி இப்போது விவாதிப்போம்.

நிரந்தர கணக்கு எண் அட்டையில் பெயர் மாற்றத்திற்கு தேவையான பல்வேறு ஆவணங்கள் யாவை?

மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் காரணங்களுக்காக நீங்கள் பெயர் மாற்ற செயல்முறைக்குச் சென்றிருந்தால், நீங்கள் நிரந்தர கணக்கு எண் அட்டையில் பெயரை மாற்ற வேண்டும். மேலும் பெயரைப் புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கு முன், உங்களிடம் சில ஆவணங்கள் இருக்க வேண்டும்:

 • அடையாள ஆதாரம்
 • முகவரி சான்று
 • பிறந்த தேதி சான்று
 • ஆதார் அட்டை
 • பெயர் மாற்றத்திற்காக நீங்கள் வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரம்
 • கடவுச்சீட்டு

இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் அட்டையில் பெயர் மாற்றத்தை எவ்வாறு செய்வது

நிரந்தர கணக்கு எண் அட்டையில் தவறான பெயர் உள்ளிடப்பட்ட சம்பவங்கள் உள்ளன. அவ்வாறான சூழலில் உங்கள் பெயரை மாற்ற நீங்கள் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்வரும் படிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்:

 • இணையதளத்தில் பெயர் மாற்றத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் கோரிக்கையை டிஐஎன்என்எஸ்டிஎல் (TIN-NSDL) அல்லது யுடிஐஐடிஎஸ்எல் (UTIITSL) வழியாக வைக்கலாம். அல்லது இந்த இணைப்பின் மூலம் செய்யலாம். https://tin.tin.nsdl.com/pan/correction.html.
 • படிவத்தை நிரப்பி தகவலைப் புதுப்பிக்கவும்.
 • உங்கள் அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் பிறப்பு சான்றை சமர்ப்பிக்கவும்.
 • அடுத்து, நீங்கள் தொகையை செலுத்த வேண்டும். பற்று அட்டை, கடன் அட்டை அல்லது நிகர வங்கி மூலம் இணையதளத்தில் கட்டணம் செலுத்தலாம்.
 • கடின நகலில், உங்கள் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் மற்றும் கையொப்பமிட வேண்டும்.
 • இந்த படிவத்தை என்.எஸ்.டி.எல் முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்ப படிவத்துடன் உங்கள் முகவரிச் சான்று, அடையாளச் சான்று, பிறந்த தேதி மற்றும் உங்கள் நிரந்தர கணக்கு எண் அட்டையின் நகலைச் சேர்த்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மாற்றாக, ஆதார் அட்டையைப் பயன்படுத்தி அங்கீகரிப்பதன் மூலம் உங்கள் பெயரை இணையத்தளம் வழியாகவே புதுப்பிக்கலாம். இதற்கான  முழுமையான செயல்முறை இணையத்தளதில் உள்ளது, மேலும் ஆதார் அட்டையானது ஒரு முறை கடவுச்சொல்(OTP) சரிபார்ப்பின் மூலம் அங்கீகாரம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த வசதியைப் பெறுவதற்கு நீங்கள் முதலில் உங்கள் பெயரைப் புதுப்பித்து ஆதார் அட்டையில் உங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

முடிவுரை:

மேலே குறிப்பிட்டுள்ள படிகள் பெயர் மாற்ற செயல்முறையில் உங்கள் பணியை எளிதாக்கும். மேலும் நிரந்தர கணக்கு எண் அட்டையில் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும்போது எல்லா ஆவணங்களும் உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.