Streamline your tax compliance with our expert-assisted GSTR 9 & 9C services @ ₹14,999/-

Tax efficiency, interest avoidance, and financial control with advance payment @ 4999/-
Uncategorized

செல்லுபடியாகும் ஒப்பந்தத்திற்கான அனைத்து தேவைகளும் என்ன

எந்த ஒரு ஒப்பந்தமும் சட்ட விரோதமாகவோ அல்லது சட்டத்திற்கு புறம்பான விதிமுறைகளை கொண்டிருந்தால், அந்த ஒப்பந்தம் சட்டத்திற்கு புறம்பான ஒப்பந்தமாக கருதப்படுகிறது

பெரும்பாலும் அணைத்து விதமான வணிகங்களுக்கும் இந்த வேலிட் காண்ட்ராக்ட் அடிப்படை ஆகும்.  இந்த ஒப்பந்தம் சட்டபூர்வமாக அமைந்து இருப்பதால் இது ஒருவர் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை செய்யவும், மற்றும் வேறு யாரவது அவர்களுக்கு இடையூறு அளித்தால் அவர்களை அனுமதிக்காத வகையிலும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. இது செயல்படுத்தக்கூடியது என்பதால் ஒருவர் சில செயல்களைச் செய்வதற்கான உரிமையை மக்களுக்கு வழங்கும் ஒரு ஒப்பந்தமாக செயல்படுகிறது. இது இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 இன் படி, இதில் சில அத்தியாவசியங்கள் உள்ளன அவை போடப்படும் ஒப்பந்தம் லீகலாகவும் அரசு உத்தரவிற்கு செல்லுபடியாகவும் அமைந்து இருப்பது அவசியம். இந்த சட்டத்தின் 10 வது பிரிவு தேவைகளை குறிப்பிடுகிறது யாதெனில் இந்திய நீதித்துறையின் பார்வையில் கீழ் அந்த ஒப்பந்தத்தை உருவாக்கவும் மற்றும் அதை சட்டபூர்வமாகவும் படுகிறது. செல்லுபடியாகும் ஒப்பந்தத்திற்கான தேவைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே பாருங்கள். 

ஒப்பந்தம் என்றால் என்ன?

1872 ஆம் ஆண்டின் ஒப்பந்தச் சட்டத்தின்படி, ஒரு ஒப்பந்தம் என்பது சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்படுகிறது.  எனவே, எந்தவொரு ஒப்பந்தமும் சட்டப்பூர்வமாகக் கருதப்படுவதற்கு அது நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். சரி இனி இந்த  இரண்டு கூறுகளையும் பற்றி பார்ப்போம். ஒரு ஒப்பந்தம் என்பது அடிப்படையில் சில வாக்குறுதிகளை கொண்டிருக்கும், மேலும் அவற்றில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத செயல்பாடுகளை விளக்கமாக கூறப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்ட முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மற்றும் செயல்பாட்டின் தன்மைகளுக்கும் ஒருவர் சம்மதம் தெரிவிக்கிறார் என்று அர்த்தம் என்பதே இதன் பொருள் ஆகும். அவ்வாறு போடப்பட்ட திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், இது ஒரு வாக்குறுதியாக மாறுகிறது (PROMISE), எனவே, இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் பொறுப்பிற்கு வருகிறது. 

ஒப்பந்தத்திற்கான வழிகாட்டுதல்கள்:

    1. இது இரண்டு நபர்களிடையே செய்யப்பட வேண்டும்; (the offeror and offeree )
    2. ஒருவர் இன்னொருவருடன் உடன்பட முடியாது என்பதால் ஒப்பந்தம் எடுக்கப்படும் இரண்டு நபர்களும் சுதந்திரமான நபர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
    3. போடப்பட்ட அக்ரீமெண்ட்டை ரெண்டு நபர்களும் கவனமாக இருக்க வேண்டும் மேலும் எடுக்கபட்ட ஒப்பந்தத்திற்கு உண்மையாக இருப்பதும் அவசியம் ஆகும். ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதற்கு அல்லது ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதை முழுமையாக புரிந்து கொள்வது அவசியமாகும். 
    4. ஒரு ஒப்பந்தமாக மாற, போடப்பட்ட அந்த ஒப்பந்தம், ஒப்பந்தச் சட்டங்கள் வழியாக ஒருவித சட்டபூர்வமான கடமையை உருவாக்க வேண்டும்.
    5. எனவே, ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்ட நபர்கள் யாராவது தவறினால், இன்னொருவர் நீதிமன்றத்தை அணுக முடியும்.
    6. மேலும் நீதிமன்றத்தால், பாதிக்கப்பட்டவருக்கு சட்டரீதியான தீர்வை கொடுக்க முடிந்தால், இந்த ஒப்பந்தம் சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஒப்பந்தமாக கருதப்படுகிறது.

சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்

செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் அத்தியாவசியங்கள்:

  • அனைத்து செல்லுபடியாகும் சலுகைகளையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால், அந்த ஆபரார் மற்றும் அஃசெப்டறும் இடையே சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தமாக மாறுகிறது
  • ஒப்பந்தத்தில் இருக்கும் நபர்கள் சட்ட உறவின் ஒரு பகுதியாகும், ஆகவே, அவர்களில் ஒருவர் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை உறுதிப்படுத்தத் தவறினால், மற்றவர் தவறியவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யலாம்.
  • ஒப்பந்ததாரர்க்கு இடையில் சட்ட உறவு இல்லாத நிலையில், அவர்களுக்கிடையில் சரியான ஒப்பந்தத்தை உருவாக்க முடியாது. எனவே, சமூக ஒப்பந்தங்களை ஒப்பந்தங்களாக கணக்கில் எடுத்துகொள்ள முடியாது. 
  • ஒரு ஒப்பந்தத்தின் ( Legal Documentation) செல்லுபடியாகும் தன்மை கருத்தில் அல்லது வருவாய் திரும்ப பெறுதல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் இழப்பீடு அல்லது கருத்தில் என்ன இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற ஒரு விதி கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு ஒப்பந்தம் கூறப்படுவது யாதெனில் பதிலுக்கு எதுவும் செய்யப்படாமல் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று இந்த ஒப்பந்தத்தில் கருதப்படுகிறது. மேலும் இதில் பணமாகவோ அல்லது வேறு எந்த வகையான சேவையாகவோ இருக்க கூடாது என்று கூறப்படுகிறது.
  • இவர்களுக்கிடையில் போடப்படும் ஒப்பந்தத்தில் சில சில சட்டங்கள் பிணைக்கப்பட்டிருக்கும் மேலும் சட்ட விரோதமான எந்த செயல்களும் இருக்காது என்பதை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். மேலும், அத்தகைய விதி முறைகள் இல்லாத ஒப்பந்தங்களை வேகரிங் கான்ட்ராக்ட்ஸ் மற்றும் பெட்டிங் கான்ட்ராக்ட்ஸ் சாக கருதப்படுகிறது.
  • ஒப்பந்தத்தை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள நபர்கள் கட்டாயம் பெரியவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இவ்வாறு ஒப்பத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளையும் மற்றும் நிபந்தனைகளையும் முழுவதுமாக அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய திறன் அமைத்திருப்பவராக இருபது அவசியமாகும். 
  • மேலும் ஒப்பந்தம் போடும் நபர்கள் அவர்களுடைய மனப்பூர்வமான விருப்பத்தின் படியே ஒப்பந்தத்தில் நுழைய வேண்டும், வேறு எந்தஒரு சட்ட விரோதமான வற்புறுத்தல்படியோ தவறாக பயன்படுத்துவதற்காகவோ, பிறருடைய செல்வாக்கின் மூலமாகவோ, மோசடி அல்லது  தவறுகள் செய்யும் எண்ணத்துடனோ எந்த ஒரு ஒப்பந்தத்தையும் போடக்கூடாது. 
  • எல்லா ஒப்பந்தங்களும் எழுத்துப்பூரமாக பதிவு செய்து பட்டதற்கான சான்றிதழ்களை பெற வேண்டும். அப்படி செய்ய தவறிய ஒப்பந்தங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது
  • எப்பொழுதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் தெளிவாகவும், சுருக்கமாகவும், நிச்சயமற்ற தன்மையுடனும் இருக்க வேண்டும், இல்லை என்றால் அந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த முடியாது.
  • இறுதியாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் செல்லாத ஒப்பந்தமாக கருதும் விதமாக அமைக்கக்கூடாது. எந்த ஒரு கருத்துக்களும் இல்லாத ஒப்பந்தமாகவோ, திருமணத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தமாகவோ, வர்தகத்திற்காகவோ, நீதி முறை நடவடிக்கைகளுக்காகவோ, அல்லது பந்தயம் போடும் பொருட்டு அமைக்கப்படும் ஒப்பந்தத்தையும் செல்லாத ஒப்பந்தங்களாகவே கருதப்படுகின்றது.

ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கான விதிவிலக்குகள்:

பின்வரும் நபர்கள் அல்லது கட்சிகளுக்கு ஒப்பந்தம் அமைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன, ஏனென்றால் போடப்படும் ஒப்பந்தத்தை பற்றிய முழுமையான தகவல்களை புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் இல்லாததே காரணம் ஆகும்.

  • அவர்கள் மைனராக இருக்கலாம்.
  • தெளிவான மனநிலை இல்லாதவர்களாக இருக்கலாம்.
  • ஒப்பந்தத்தை உருவாக்கும் தகுதி அற்றவர்கள் என்று சட்டத்தால் கருதப்படும் நபர்கள்

சட்டவிரோத கூறுகள்:

எந்த ஒரு ஒப்பந்தமும் சட்ட விரோதமாகவோ அல்லது சட்டத்திற்கு புறம்பான விதிமுறைகளை கொண்டிருந்தாலோ அந்த ஒப்பந்தத்தை சட்டத்திற்கு புறம்பான ஒப்பந்தமாக கருதப்படுகிறது. மேலும் அப்படி போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் கூறப்படுகிறது. இந்திய காண்ட்ராக்ட் அசிட்டின் படி பின்வரும் பரிசீலனைகள் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன :

  • ஒருவேளை சட்டத்தால் தடைசெய்யப்பட்டோ, அல்லது நீதிமன்றத்தால் சட்டத்திற்கு புறம்பானது என்று கருத்தப்பட்டாலோ 
  • ஏதேனும் ஒரு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் அல்லது விதிகளுக்கு எதிராக ஏதேனும் இருந்தால் 
  • மோசடி நடவடிக்கைள் மேற்கொண்டிருந்தால் 
  • ஏதேனும் ஒருவரின் உடல்நலத்திற்கோ அல்லது சொத்திற்கோ சேதம் வரும் படி நடவடிக்கைகள் மேற்கொண்டால் 
  • ஒழுக்கக்கேடான செயல் புரிந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தண்டிக்க பட்டிருந்தால் அல்லது சட்ட விரோதமான செயல் புரிந்திருந்தாலோ, அல்லது மக்களின் நலனுக்கு பாதிப்பு அளிக்கும் விதமாக செயல்கள் புரிந்து இருந்தால்

பெரும்பாலான வணிகங்கள் மற்றும் அதன் பரிவர்த்தனைகளில் ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிப்பதால், ஒப்பந்தங்களை உருவாக்கி ஒப்புக் கொள்ளும்போது ஒப்பந்தம் போடப்படும் நபர்கள் மிகவும் கவனமாக இருபது அவசியம் ஆகும். ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அணைத்து விதிகளையும், பிரிவுகளையும் மேலும் அதன் உட்பிரிவுகள் முதற்கொண்டு நன்கு படித்து புரிந்துகொள்வது அவசியமாகும். மேலும், ஒரு ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படுவது அவசியமாகும், எல்லா ஒப்பந்தங்களும் மேலே கொடுக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டும். இந்த கட்டுரை மூலம் ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வனதாக இருபது மட்டுமே செல்லும் என்பதை உங்களுக்கு தெளிவாக விளக்குகிறது


Subscribe to our newsletter blogs

Back to top button

Adblocker

Remove Adblocker Extension