வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மையின் சேமிப்பு

Last Updated at: December 19, 2019
141
உங்கள் நிறுவனத்திற்கான பெயரை விரைவாக கண்டறிவது எப்படி

பெரும்பாலும் தொடக்க நிறுவனங்களின்  சூழியலமைப்புகள் முதன்மை நிறுவனங்களை(தனியார் வரையறுக்கப்பட்ட)கொண்டிருக்கும்.அத்தகைய வணிகங்கள் பெரும்பாலும் நிதி இல்லாமல் இருக்க முடியாது என்பதால் இதுபோன்ற வணிகங்களுக்கு அத்தகைய நிதி கிடைத்திருக்கும். ஆனால் எல்லா வணிகங்களுக்கும் நிதி தேவையில்லை. உண்மையில் , தொடக்க நிறுவனங்களின்  ஒரு பகுதியினர் வி.சி.(துணிகர மூலதனம்)க்களிடமிருந்து நிதியுதவி பெறுகிறார்கள். இங்கே, மற்ற வணிக வகையான எல்.எல்.பி அதாவது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  

தொடக்க நிறுவன உலகில் நாம் விவாதிக்கும் பெரும்பாலான வணிகங்கள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இந்த வணிகங்கள் அனைத்தும் நிதியுதவியைப் பெற்றுள்ளன, அவ்வாறு நிதி பெறவில்லை என்றால் அநேகமாக அவை இருந்திருக்காது. ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டும்,அதாவது அனைத்து வணிகங்களுக்கும் நிதி வேண்டுவதில்லை, எனவே நிதி தேவைப்படும் அல்லது பெற வேண்டும் எனில் வி.சி(துணிகர மூலதனம்)க் களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தொடக்க நிறுவனங்களில் வெறும் 1% தான்  நிதி பெறுகின்றன. எனவே மற்ற வணிக வகைகள்  நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உங்களுக்கு உதவும் எனில் பிற வணிக வகைகளை ஏன் பார்க்கக்கூடாது. இதில் நாம் எல்.எல்.பி அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை தொடங்குவதற்கான வழக்கை ஆராயலாம்.

தொடக்க நிறுவனத்தின் சேமிப்புகள்:

உங்களுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பை வழங்கும் வணிக வகைகளில், எல்.எல்.பி மலிவானது. ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் அதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் உடனடியாக 5000 ரூபாயை சேமிக்கலாம். மேலும், இதை தொடங்குவதற்கு குறைவான நாட்களே  ஆகும். நீங்கள் நிதி திரட்ட விரும்பவில்லை என்றால், அது உங்கள் வாய்ப்பை எந்த வகையிலும் குறைக்காது.

வரி சலுகைகள்:

ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்துடன், நீங்கள் குறைந்தபட்ச மாற்று வரி (எம்ஏடி) செலுத்த வேண்டும், ஈவுத்தொகை விநியோக வரி (டி.டி.டி) மற்றும் சொத்து வரி ஆனது லாபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு 1% ஆகும். எனவே எல்.எல்.பி உடன் மூன்று வரிகளிலும்  சேமிப்புகள் உள்ளன. இப்போது, நீங்கள் நிதி தேவையில்லாத விளம்பர நிறுவனம் என்று சொல்லலாம். ஆகையால் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைத் தொடங்குவதற்குப் பதிலாகஒரு எல்.எல்.பியை இணைத்து இந்த வரிகளைச்  சேமிக்கலாம்.

வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை பதிவு

தணிக்கையாளர் கட்டணம்:

ஒரு எல்.எல்.பி ( Limited Liability Partnership) ஆனது தணிக்கையாளரை கொண்டிருக்க வேண்டுமெனில்,அதன் விற்றுமுதல் 40 இலட்சத்திற்கு மேலாகவோ அல்லது மூலதன பங்களிப்பானது 25 இலட்சத்திற்கு மேலாகவோ இருத்தல் வேண்டும். ஆனால் மற்றொருபுறம் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது ஒருங்கிணைப்புச் சான்றிதழை பெற்ற 30 நாட்களுக்குள் ஒரு தணிக்கையாளரை கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும்.மேலும்  அவ்வாறு நியமிக்கும் தணிக்கையாளரின் ஊதியமானது மலிவாக இருக்காது.அதாவது அனுபவமற்ற ஒருவருக்கு கூட 15000 முதல் 20000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்.ஆனால் நீங்கள் ஒரு எல்.எல்.பி. நிறுவனமாக இருந்தால் இந்த பணத்தை வணிகத்திற்காக பயன் படுத்திக்கொள்ளலாம்.

கட்டாய இணக்க செலவுகள்:

ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது அது இணைக்கப்பட்ட தேதியிலிருந்தே மிகப் பெரிய அளவிலான இணக்கங்களை சந்திக்கத் தொடங்குகின்றன.முதல் வருடத்திலேயே ஒரு சிறிய செயலாளர் நிறுவனமாக இருந்தாலும் 15000 ரூபாய் வரை நீங்கள் செலவு செய்ய வேண்டும். நிச்சயமாக சிறந்தவை எப்பொழுதும் விலை உயர்ந்தவையாகத் தான் இருக்கும். ஆனால் மற்றொருபுறம்,எல்.எல்.பி.யில் இணக்கத் தொகையானது 2500 ரூபாய் மட்டுமே ஆகும். இன்னும் பல உள்ளன: இந்த முயற்சியை நிர்வகிக்க நீங்கள் நேரத்தையும் முதலீடு செய்ய வேண்டும். இந்த பணமும் முயற்சியும் உங்கள் வணிகத்தை உருவாக்க முடியும்.

வேலைக்கான  செலவுகள்:

ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அதன் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும்பொழுது  நிறுவன பதிவாளரிடம் (ஆர்ஒசி ) தெரிவிக்க வேண்டும். எப்போதாவது, இந்த மாற்றங்களை ஒரு சிஎஸ் செய்வதற்கு குழுக்களை திரட்டி கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் மேலும் படிவங்களை நிரப்புதல் செய்ய வேண்டும்.இத்தகைய பல முயற்சிகள் இவற்றில் தேவைப்படுகின்றன. ஆனால் எல்.எல்.பி.யில் அத்தகைய முயற்சி எதுவும் தேவையில்லை.நிறுவன பதிவாளரிடம் அறிவுப்பு செய்தால் மட்டும் போதுமானது. 

மொத்தத்தில், எல்.எல்.பி அமைப்பு இணைய அபிவிருத்தி கடைகள் முதல் எண்முறை சந்தைப்படுத்துதல் முகவர்கள்  வரை பலவகையான வணிகங்களை மிகவும் திறமையாக இயக்க உதவுகிறது. நீங்கள் வணிகத்தை தொடங்குவதற்கு  இதை கருத்தில் கொள்ள வேண்டும். 

இப்போது, எல்.எல்.பி அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை அமைப்பதால் உங்கள் மதிப்புமிக்க நேரத்தையும் பணத்தையும் சேமிக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அடிப்படையில், எல்.எல்.பிக்களை தொடங்க குறைத்த செலவு மட்டுமே ஆகும்.மேலும் வரிச் சலுகைகள் மற்றும் கட்டாய இணக்கச் செலவுகள் போன்றவை பெரிய அளவில் இல்லை என்பதால் தொடக்க நிறுவனங்களுக்கு செலவை சேமிக்க விரும்பத்தக்கவையாக எல்.எல்.பி.இருக்கும். எனவே, சேமித்த பணத்தையும் முயற்சியையும் பயன்படுத்தி  உங்கள் வணிகத்தை திறமையாக உருவாக்க முடியும்.

    SHARE