(TIN) எண்ணை சரிபார்க்கும் வழி முறைகள்

Last Updated at: December 12, 2019
238
Methods of checking TIN number

முதன் முதலாக வியாபாரியிடம் வணிகம் செய்வோர் தங்களின் வரி செலுத்துவோர் அடையாள (TIN) எண்ணை சரிபார்ப்பது மிக முக்கியமாயிற்று. ஏனெனில், தங்களிடம் சரியான வரி செலுத்துவோர் அடையாள எண் இல்லை என்றால் நீங்கள் செலுத்தும் வரி பணமானது வியாபாரின் கைகளுக்கு மட்டுமே சென்றடையும். நீங்கள் வணிகம் செய்யும் வியாபாரி சரியான முறையில் உங்கள் வரி பணத்தை செலுத்தவில்லை எனில் நீங்கள் அவரின் இச்செயலை அதற்கான அதிகாரியிடம் நேரடியாக தெரியப்படுத்தலாம்.

இணையதளத்தில் உள்ள சில கருவிகள் மூலம் உங்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை உடனே கண்டறியலாம்.

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சரிபார்ப்புக்கான சரிபார்ப்பதற்கான இரு வழிகள்:

வியாபாரி TIN எண்ணை ஆன்லைன் மூலமாக சரிபார்த்துக்கொள்ளலாம், தேவைப்பட்டால் எதிர்தரப்பினரோடு கையாளுவதற்கு முன், அவர்களின் TIN எண்ணை கூட சுலபமாக கண்டறியலாம்.

  1.   இணையத்தில் தகவல் தொடர்பு அமைப்பு TINXSYS (வரி தகவல் பரிமாற்றம் முறை) வலைதளத்தை பார்வையிடவும். இஃது மாநிலத்தின் வணிக வரி துறைகள் மாநில அரசின் வரி பரிமாற்றத்தை திறம்பட கண்காணிக்க அரசாங்கத்தால் துவங்கப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.
  2.       TIN எண்ணை மட்டும் உள்ளிடவும். பின்பு வியாபாரியின் பெயர், முகவரி, நிரந்திர கணக்கு எண் மற்றும் உரிமத்தின் (செல்லுபடி) நிலைப்பாடு என்று எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இலவச சட்ட ஆலோசனையை கேளுங்கள்

ஏன் TIN எண்ணை சரிபார்க்க வேண்டும்?

எவ்விதமான வணிகத்திற்கும் TIN எண் அவசியமானது ஆகும். இப்போதெல்லாம் எந்த மாநிலத்தில் இருந்தும் வணிகம் செய்ய முடியும் மற்றும் எந்த வியாபாரியையும் தொடர்பு கொள்ள முடியும். இதன் காரணமாகவே நம் வரி பணம் சரியான முறையில் அரசிற்கு சென்றடைகிறதா என்பதை அறிவது அவசியம் ஆயிற்று.

எனவே, இப்போது, ​​இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டு, வர்த்தகம் செய்ய விரும்பும் வியாபாரி, TINXSYS மூலமாக அனைத்து தகவல்களையும் சரியாக வழங்கியுள்ளனரா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

TIN என்றால் என்ன?

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) என்பது ஒவ்வொரு வியாபாரத்திற்கும் வழங்கப்படும் ஒரு தனிப்பட்ட அடையாள எண், இது VAT அல்லது கூடுதல்-மதிப்பு வரி மற்றும் CST அல்லது மத்திய விற்பனை வரி ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும். ஒரு உள் அல்லது வெளி மாநில அரசு விற்பனை செய்யப்படும் போது இது பதிவு செய்யப்படுகின்றது. இதனுடன், மாநில வர்த்தக வரித் துறை, ஒரே நொடியில் VAT எண்ணின் கீழ் செய்யப்பட்ட அனைத்து பரிமாற்றங்களையும் சரிபார்த்துக் கொள்கின்றது.

TIN எண்ணை அனைத்து நிதி பரிவர்தனைகளிலும் மற்றும் வர்த்தக சீட்டுக்களிலும் கண்டிப்பாக மேற்கோளிட்டு காட்டப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு வர்த்தகர் மற்றும் வியாபாரிகளும் தங்களது வருவாய்  ரூ. 5 லட்சத்திற்கு மேல் தாண்டினால் கண்டிப்பாக TIN எண்ணை பெற்றிருக்க வேண்டும். இது ஒரு 11 இலக்க எண் ஆகும், இதனை பதிவின் மூலம் நாம் பெறலாம். முதல் 2 இலக்கங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்டவை ஆகும்.

    SHARE