தமிழ்நாட்டில் சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி?

Last Updated at: January 07, 2020
56

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்த சிலரை வகைப்படுத்தி அவர்களுக்கு சில நன்மைகளை அளிக்கிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது ஆவண ஆதாரத்தை தயாரிக்க முடியும் மேலும் அதை கொண்டு கிளைம் செய்யவும் முடியும். எனவே, ஒரு சாதி சான்றிதழ் என்பது ஒரு நபரின் சாதியை உறுதிப்படுத்தும் ஒரு ஆவண சான்றாகும், மேலும் எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது நன்மைக்கும் தகுதியுடையவர்களாக இருக்க அவர்களுக்கு உதவுகிறதுஇந்த சாதி சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படை என்னவென்றால், பின்தங்கிய சாதிகள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதாகும் – அதாவது பேக்வர்டு காஸ்ட் , ஸ்கெடியுள்டு காஸ்ட், ஸ்கெடியுள்டு ட்ரிப்ஸ் அல்லது இதர பேக்வர்டு காஸ்ட் கம்யூனிடி சார்ந்தவர்களுக்கும் பொருந்தும். 1988 ஆம் ஆண்டில் தான், நிரந்தர சாதி அல்லது சமூக சான்றிதழ் பெறும் முறையை தமிழக அரசு துவக்கியது. எனவே, இந்த சமூகங்களில் ஏதேனும் ஒரு நபருக்கு நன்மைகளைப் பெற விரும்பும் ஒருவருக்கு சாதி சான்றிதழ் அவசியம். தமிழ்நாட்டில் சாதி சான்றிதழ் பெறுவதற்கான படிப்படியான நடைமுறை இங்கே காணலாம்.

தமிழகத்தில் சாதி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் யாவை?

தமிழ்நாட்டில் சாதி சான்றிதழைப் பெறுவதற்கு, அசல் மற்றும் பிரதிகளில் சாதி சான்றிதழைப் பெற பின்வரும் ஆவணங்கள் தேவை:

 • விண்ணப்ப படிவத்தை  முழுமையாக நிரப்பப்பட வேண்டும் 
 • ரேஷன் கார்டு
 • ஸ்கூல் லீவிங் சர்டிபிகேட் அல்லது  ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட் நகல்
 • பெற்றோரின் சாதி சான்றிதழ்கள்
 • பெற்றோரின் பள்ளி சான்றிதழ்கள்

சாதி சான்றிதழ் (caste certificate) பெறுவதற்கான நடைமுறை என்ன?

BC / SC / ST மற்றும் OBC வகைகளைப் பொறுத்து தமிழ்நாட்டில் சாதி சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை வேறுபடுகிறது.

உங்கள் காஸ்ட் சான்றிதழைப் பெறுங்கள்

BC / SC / ST வகைகளுக்கான நடைமுறை

BC/SC/ST பிரிவுகளுக்கு சாதி சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை இங்கே காணலாம் 

1: http://www.tn.gov.in/ இணைப்பைப் பயன்படுத்தி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைக.

2: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு, பாம் செக்சனை (Form Section) னை வலைப்பக்கத்தின் வலது பக்கத்தில். தேடுங்கள், படிவங்கள் (Forms) மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளின் பட்டியல் காண்பிக்கப்படும். வலைப்பக்கத்தில் உள்ள படிவங்கள் பிரிவின் கீழ் மேலும் கிளிக் செய்க. அதில் உள்ள சர்ச் டேப்பில் கம்யூனிடி செர்டிபிகேட் என்று டைப் செய்யவும்

3: தேடல் முடிவுகள் திரையில் தோன்றியதும், ‘சமூக சான்றிதழ்இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் சமூக சான்றிதழைப் பதிவிறக்கவும். விண்ணப்பதாரரின் பின்வரும் விவரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டிய ஒரு போர்ட்டலுக்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்:

 • விண்ணப்பதாரரின் பெயர்
 • தந்தை / கணவரின் பெயர்
 • செக்ஸ் (பெண் / ஆண்)
 • முழு குடியிருப்பு முகவரி
 • விண்ணப்பதாரரின் ரேஷன் கார்டு எண்
 • பெற்றோரின் சமூக சான்றிதழ் விவரங்கள்
 • பெற்றோரின் பள்ளி சான்றிதழ்கள் பற்றிய விவரங்கள்
 • விண்ணப்ப தேதி

4: படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட பிறகு, விண்ணப்பதாரர் ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.

5: பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட படிவம், ஆவணங்களுடன், அந்தந்த வருவாய் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், அது அதிகாரிகளின் முடிவில் செயல்படுத்தப்படும், பின்னர் அனைத்து விவரங்களும் சரியாக சரிபார்க்கப்பட்டால், சமூக சான்றிதழ் 30 நாட்களுக்குள் விண்ணப்பத்திற்கு அனுப்பப்படும்.

OBC வகைகளுக்கான செயல்முறை

OBC வகைகளுக்காண சாதி சான்றிதழ் விண்ணப்ப செயல்முறை பின்வரும் முறையில் பெறப்படுகிறது :

1: https://www.tnesevaitn.govin/ என்ற லிங்க்கின் பயன்படுத்தி  e-சேவை வெப் போர்டலில் லாக் ஆண் செய்யவும் 

2: அடுத்து Citizen Login டேப்பை கிளிக் செய்து, ரெஜிஸ்டெர் செய்யப்பட்ட சரியான லாகின் யூசர் மற்றும் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் 

3:  இ – சேவை டேஸ்போர்ட்டில் இடது புறம் ஸ்கிரீன் உள்ள சர்விஸ் ஆப் சனை கிளிக் செய்யவும்  அப்போது சர்விஸ் டிபார்ட்மெண்ட் வைஸ்சில் ஒரு லிஸ்ட் வரும், அதில் ரெவென்யூ டிபார்ட்மெண்ட் என்னும் ஆப்ஷனை தேர்ந்தேடுக்கவும் 

4: அடுத்த கட்டமாக  REV-115  பிற பின்தங்கிய வகுப்புகள் (OBC) சான்றிதழ் இணைப்பைக் கிளிக் செய்யவும்। இதன் மூலம் தமிழ்நாடு இ – டைரக்ட் வெப் போரட்டலுக்கு நேராக இணைப்பை கொண்டு சேர்க்கும்। செர்டிபிகேட் தோன்றிய பிறகு ப்ரோஸீட்  பட்டனை கிளிக் செய்யவும்। 

5: விண்ணப்பதாரர் தேடல் படிவத்தில், விண்ணப்பதாரரின் பின்வரும் விவரங்களை நிரப்பவும்.

 • CAN  நம்பர் 
 • பெயர்
 • விண்ணப்பதாரரின் தந்தையின் பெயர்
 • கைபேசி எண்
 • மின்னஞ்சல் முகவரி
 • பிறந்த தேதி

6: CAN க்கான பதிவைத் தொடர, ரெஜிஸ்டர் CAN என்ற பட்டனைக் கிளிக் செய்யவும் । படிவத்தில் விவரங்களை பூர்திசெய்தபின்CAN  பார்ம்மை சப்மிட் செய்ய   ரெஜிஸ்டர் பட்டனை கிளிக் செய்யவும் 

7: நீங்கள் விவரங்களைத் திருத்த விரும்பினால், Edit CAN details என்ற பட்டனை கிளிக் செய்யவும், இல்லையெனில் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும்।

8: அறிவிப்புகளை ஏற்று சமர்ப்பி சப்மிட் பட்டனை  கிளிக் செய்க।

9: தேவையான அனைத்து ஆவணங்களையும் பரிந்துரைக்கப்பட்ட பைல் சைஸ் மற்றும் பைல் டைப்புகளில் இணைக்கவும்।

10: ஸ்க்ரீனில் மொத்தம் செலுத்த வேண்டிய தொகையின் விபரம் தோன்றும்।   பிரிண்ட் ரெசிப்ட் டை கிளிக் செய்து ரெஸிப்ட்டின் படிவத்தை டவுன்லோட் அல்லது பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

  SHARE