சேவை வரி பதிவை இணையத்தில் எவ்வாறு பெறுவது

Last Updated at: December 12, 2019
201
சேவை வரி பதிவை இணையத்தில் எவ்வாறு பெறுவது

சேவை வரி பதிவு மத்திய அரசால் வழங்கப் படுகிறது. இந்த வரியானது  கிட்டத்தட்ட அனைத்து சேவை வழங்குவோர்களாலும் வசூலிக்கப்படுகிறது,அதாவது குறிப்பிட்ட நிதியாண்டில் அவர்களின் விற்றுமுதல் 10 லட்சத்தை எட்டியிருத்தல் வேண்டும். இந்த பதிவானது எவ்வாறாயினும்   இலக்கு 9 லட்சத்தை எட்டினாலே செய்து கொள்ள வேண்டும்.அதாவது இதன் அர்த்தம் விற்றுமுதல் இலக்கை எட்டும் வரை நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.பொதுவாக விற்றுமுதல் 9 லட்ச இலக்கை பெற்றாலே நீங்கள் கண்டிப்பாக சேவை வரி பதிவை பெறவேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது விற்றுமுதல்  10 லட்சத்தை தாண்டியவுடன் உங்கள் வாடிக்கையாளர்களிடம் சேவை வரியை 14.5% கூடுதலாக வசூலிக்கத் தொடங்க வேண்டும்.

எஸ்.டீ-1 க்கு விண்ணப்பித்தல்:

ஒரு விண்ணப்பதாரர் எஸ்.டீ-1 விண்ணப்பத்தை எசிஇஎஸ் என்ற வலைதளத்தில்  தாக்கல் செய்ய வேண்டும். இந்த எசிஇஎஸ்  என்பது தானியங்கு மத்திய கலால் மற்றும் சேவை வரியை குறிக்கிறது. இச்செயலை நீங்கள் செய்வதற்கு முன்  வலைத்தளத்தில் பதிவு செய்வது தேவையான ஒன்றாகும்.பதிவை செய்த உடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

எஸ்.டீ-1 ஐ தாக்கல் செய்யும்போது, சேவை வரி பதிவுக்கு தேவையான அனைத்து ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு 7 நாட்களுக்குள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

நம்பிக்கையின் அடிப்படையில் 7 நாட்களுக்குள் எஸ்.டீ-1 வழங்கப்படுகிறது (அதாவது  மின்னஞ்சலை நீங்கள் பெறவில்லை என்றால்); நீங்கள் பெறும் பதிவு சான்றிதழை பயன்படுத்தி  வரிகளை செலுத்தலாம்.

சில சந்தர்ப்பங்களில், ஒரு சேவை வரி அதிகாரி உங்கள் வளாகத்தை ஆய்வு செய்யலாம் அல்லது அசல் ஆவணங்களைக் கேட்கலாம். இவற்றில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், பதிவு கூட ரத்து செய்யப்படலாம்.

சேவை வரி பற்றி தகவல் அறியுங்கள்

எஸ்.டீ-2  அனுமதி:

நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தைப் பொறுத்து, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் வரை,  10 முதல் 15 நாட்களுக்குள் எஸ்.டீ-2 ஆனது இணையத்தில் அல்லது தபால் மூலம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

    SHARE