வருங்கால வைப்பு நிதி – பிஎஃப் வட்டி மற்றும் பிரதான நன்மைகள்

Last Updated at: Mar 24, 2020
962
வருங்கால வைப்பு நிதி - பிஎஃப் வட்டி மற்றும் பிரதான நன்மைகள்

நல்ல நிதி ஆதரவா? பாதுகாப்பான எதிர்காலமா? இந்த விஷயங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளன. சரி தானே? இதை எளிதாக்குவதற்காக,  வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் 1952 இல் ஈபிஎஃப் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் ஒவ்வொரு மாதமும் சமமான தொகையை பங்களிப்பு செயகிறார்கள், இது ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இபிஎப்ஓ ஆல் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதமும் தொகையில் வழங்கப்படுகிறது.

அவ்வாறு வைப்பு  செய்யப்பட்ட தொகையை  பணியாளர் ஓய்வு பெற்ற பிறகோ   அல்லது ‘முன்பணம் ’ வடிவத்திலோ  திரும்பப் பெறலாம் மற்றும் இந்த தொகைக்கு  அரசாங்கத்தின் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த முழுமையான செயல்முறை இபிஎப்ஓ (பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for Udyog Aadhaar registration.

 

பி.எஃப் (PF) வட்டி மற்றும் பங்களிப்புகள்

20 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட எந்தவொரு அமைப்பும் தங்களை இபிஎப்ஓ இல் பதிவு செய்து கொள்ளலாம்.

ஊழியரின் சம்பளத்தில் 12% மற்றும் முதலாளியின் சமமான பங்களிப்புடன் நடைபெறுகிறது. ஆனால், முதலாளி வழங்கிய தொகையில் 3.67% மற்றும் பணியாளர் பங்களித்த தொகையில் 12% மட்டுமே இபிஎஃப் கணக்கில் மாற்றப்படுகிறது. மேலும் ஊதியமானது  15,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்போது இது  நிகழ்கிறது. 

மீதமுள்ள 8.33% தொகையை இபிஎஸ் (பணியாளர் ஓய்வூதிய திட்டம்) க்கு முதலாளி பங்களிக்கிறார். அதாவது ஒரு வேளை,   சம்பளம் 15,000 ரூபாய் என வைத்துக்கொண்டால், அதில் 8.33% அதாவது  1,250 ரூபாய் இபிஎஸ்-க்கு வைப்பு செய்யப்படும். 

ஒவ்வொரு மாதமும் முதலாளியும் பணியாளரும் பங்களிப்பு செய்தாலும், வட்டி பங்களிப்பு அளவு ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் தான்  இபிஎப்ஓ வட்டி விகிதத்தின்படி நடைபெறுகிறது. 

இது 2017-18 ஆண்டு ஆண்டின் வட்டி விகிதம் 8.55% போலல்லாமல் 2018-19 நிதியாண்டின் படி தற்போதைய வட்டி விகிதம் 8.65% ஆகும். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும் மற்றும் இபிஎப்ஓ  இன் வழிகாட்டுதல்கள் அதை தீர்மானிக்கின்றன.

சட்ட வல்லுநர்களிடம் பேசுங்கள்

மொத்த தொகையை ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் இறுதியில்  பின்வருமாறு கணக்கிடலாம்:

முந்தைய ஆண்டின் தொடக்க இருப்பு + மாதாந்திர பங்களிப்புகள் + முந்தைய இருப்பு மற்றும் பங்களிப்புகளின் மொத்த வட்டி. இதில் கடந்த 3 ஆண்டுகளாக எந்தவொரு பங்களிப்புகளோ அல்லது செயல்பாடுகளோ இல்லாதிருந்தால் கணக்கு செயலற்றதாகிவிடும், மேலும் அதைத் தொடர்ந்து சேகரிக்கப்பட்ட தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படாது.

தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (வி.பி.எஃப்)

ஊழியர் அதிகமாக சேமிக்க விரும்பினால், அவர்கள் தன்னார்வ வருங்கால வைப்பு நிதியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கூடுதல் பங்களிப்புகளைச் செய்யலாம், அதில் அவர்கள் வரி இல்லாத வட்டியைப் பெறுவார்கள். மேலும் இது விருப்பத் தேர்வு மற்றும்  இதற்கு தனி கணக்குகள் உள்ளது.

ஈபிஎஃப் கணக்கிலிருந்து தொகைகளைத் திரும்பப் பெறுதல்

பணியாளர் வேலையை விட்டு வெளியேறினாலோ  அல்லது சில அவசரநிலைகளைக் கொண்டிருந்தாலோ , குறிப்பிட்ட படிவங்களை பூர்த்தி செய்வதன் மூலம் அவர்கள் தொகையைத் திரும்பப் பெறலாம். ஓய்வுக்குப் பிறகு, தனிநபர் பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட நன்மைகளுடன்  முழுத் தொகையையும் எளிதாக திரும்பப் பெற முடியும், ஆனால் 55 வயதிற்குப் பிறகுதான் பெற முடியும்.

 55 வயதை அடைவதற்கு முன்னர் தனிநபர் வேலையை விட்டு வெளியேறினால், விலகிய பின் உடனடியாக தொகையை  திரும்பப் பெற வேண்டும் என்றால் அவர்கள் 90 சதவீத தொகையைப் பெறுவார்கள். ஆனால் 60 நாட்களுக்குப் பிறகு திரும்பப் பெறுவதாக ஒருவர் கூறினால், அவர்கள் முழுத் தொகையையும் பெறலாம். “யுஏஎன் அடிப்படையிலான படிவம் 19” ஐ நிரப்புவதன் மூலம் நீங்கள் அதைச் செய்யலாம்.

ஊழியர்களுக்கான முன்பணம் மற்றும் அதை  எவ்வாறு பெற முடியும்?

சேகரிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற ஓய்வு பெறும் வரை காத்திருக்க எப்போதும் தேவையில்லை. அதாவது அவசரநிலை மற்றும் தேவைப் படும் நேரத்தில் , இவை “முன்பணம் ” வடிவத்தில் திரும்பப் பெறப்படலாம். இந்த முன்பண தொகையானது  கணக்கிடப்பட்ட மொத்தத் தொகையிலிருந்து கழிக்கப் படுகிறது. இந்த “முன்பணம் ” செயலில் வட்டி செலுத்துதல் தேவையில்லை, மேலும் இந்த தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

முன்பணம் பெறுவது பின்வரும் சூழ்நிலைகளில் பின்பற்றப்படுகிறது:
  • வீட்டுக் கடன்கள்
  • ஒரு வீட்டை வாங்குதல்
  • மருத்துவ அவசரநிலைகள்
  • கல்வித் தேவைகள்
  • பிள்ளைகளின் திருமணம்

ஊழியர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு , புதிய விதிகளில், ஊழியர்கள் தங்களின் திரட்டப்பட்ட தொகையில் 90 சதவீதத்தை ஒரு வீட்டை வாங்குவதற்கு அல்லது அதற்கான கட்டணங்களை சமர்ப்பிக்க பயன்படுத்த வேண்டும் என்று இபிஎப்ஓ அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கான நிபந்தனை என்னவென்றால், தனிநபர் மொத்தம் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

வட்டி மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றின் நன்மைகளைப் பெறுவதற்கான நிபந்தனை

யுனிவர்சல் கணக்கு எண் (யுஏஎன்): பங்களிக்கும் தொகையின் மீதான வட்டிகளைப் பெறுவதற்கு, பணியாளர் தங்கள் யுஏஎன் ஐ வைத்திருக்க வேண்டும். இது உறுப்பினர்களுக்கான தனித்துவமான அடையாளமாக செயல்படுகிறது, இது அவர்களின் வேலை நேரம் முழுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். மேலும், இது நன்மைகளைப் பெறுவதற்கும், ஓய்வுக்குப் பிறகு தொகையைத் திரும்பப் பெறுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

முடிவுரை

எனவே, புள்ளிவிவரங்களின்படி, வருங்கால வைப்பு நிதிகளின் வட்டி விகிதங்களில் தொடர்ந்து அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஈபிஎஃப்ஒ படி, இது ஒவ்வொரு ஆண்டும் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. ஆனால், இந்த வருங்கால வைப்பு நிதி தொகைகள் தனிநபர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு சமமாக முக்கியதத்துவம் வகிக்கிறது.