2020 ஆம் ஆண்டில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் தொழில்முறை வரி குறித்த தகவல்கள்

Last Updated at: Apr 01, 2020
697
2020 ஆம் ஆண்டில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் தொழில்முறை வரி குறித்த தகவல்கள்

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் அவர்களுடைய தொழில்முறை வரித்தொகைகளை, அவர்களிடம்  இருந்து வசூலிக்கின்றன.  அந்தந்த மாநிலங்களில் தொழில் மூலம் ஈடுபடும் வருவாயில் விதிக்கப்பட்ட வரியை அரசுகள் நேரடியாக வசூலிக்கின்றனமேலும் இந்த வரி தொழில் நடத்துவோரிடம் மட்டும் இல்லாமல்  ஊதியத்திற்கு வேலை செய்யும் நபர்கள் மீது விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கீழ் உள்ள விதிகளை பொறுத்து வரியின் விகித முறையும் மாறுபடுகிறது, எனவே இந்த வரி குறித்த சில குழப்பங்கள் இயல்பாகவே எல்லோருக்கும் இருக்கிறது.

பெரும்பான்மையான மாநிலங்கள் பல்வேறு விதமான வரி வசூலிக்கும் முறைகள் மூலம் தொழில்முறை வரியை விதிக்கின்றன. சிறிய தொழில் நடத்துவோரிடமிருந்து மருத்துவ துறை வரை அனைவரும் வரி செலுத்துவது கட்டாயம் ஆகும். எனவே, இந்த கட்டுரையில், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தொழில்முறை வரி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே விபரமாக பார்ப்போம்.

தொழில்முறை வரி என்றால் என்ன?

சரி இதை பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்வோம். தொழில்முறை வரி என்றால் என்ன? அடிப்படையில், இது ஒரு நபர் அவர் நடத்தும் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திலோ 

அல்லது வர்த்தக ரீதியாக வரும் வருமானத்திலோ பல்வேறு மாநில அரசாங்கங்களால் அளிக்கப்படும் ஒரு வகையான வரி ஆகும். எனவே இந்த வரியை விதிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரிவு 276 இன் பிரிவு 2 வழியாக பல்வேறு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு மாநிலங்களிலும் அமைத்துள்ள மாநகராட்சிகலே இந்த வரியை மக்களுக்கு விதிக்கின்றது. அப்படி வசூலிக்கப்படும் இந்த வரி அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக உள்ளது. இந்த வரி குறித்து நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே காணலாம்.

நினைவில் கொள்ளவேண்டிய சில முக்கிய குறிப்புகள்:

  • ஒரு ஆண்டிற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச தொகை ரூபாய் 2500 ஆகும்.
  • தனியார் நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்கள் கூட இந்த வரியை செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
  • சம்பளம் பெறும் நபர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை அளவிட ஸ்லாப்ஸ் மூலம் முன்னரே தீர்மானிக்க படுகிறது.
  • அப்படி தீர்மானிக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் ஊழியரின் கணக்கிலிருந்து பற்று வைக்கப்பட்டு மாநகராட்சிக்கு வரவு வைக்கப்படுகிறது.
  • ஒரு நபருக்கு வரி செலுத்த வேண்டிய நிபந்தனை வருகிறது என்றால் அப்போது அவருடைய சலுகைக்காக அரசு சில டிடக்சென்ஸ் அளிக்கிறது

உங்கள் தொழில்முறை வரியைப் பெறுங்கள்

தெலுங்கானாவில் தொழில்முறைகாண வரி விபரம்:

தெலுங்கானாவில் இந்த தொழில்முறை வரி (Professional Tax ) சை வேலைவாய்ப்பு (எம்பிளாய்மென்ட் டாக்ஸ்)  சட்டம் 1987 இன் படி வரி செயல்படுகிறது, மேலும் இது பின்வரும் ஸ்லாப்களின் கீழ் ஒவ்வொரு மாதத்திற்கும் இதன் விகிதங்கள் வரைபடுத்த பட்டுள்ளது :

 • ப்ரோபசனல் டேக்ஸ் ரூபாய் 15000 வரை விதிக்கப்படவில்லை
 • ரூபாய் 15001 முதல்ருபாய்  2௦௦௦௦ வரை ரூபாய் 150 / மாதம் வரை 
 • ரூபாய் 20000 க்கு மேல் ரூபாய் 200  / மாதம் வரை 

கர்நாடகாவில் தொழில்முறை வரி குறித்த தகவல்கள் :-

ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுபவர்களுக்கான தொழில்முறை வரி ஸ்லாப் பின்வருமாறு:

 • ரூபாய் .15000 வரை எந்த வரியும் இல்லை 
 • ரூபாய் 15000 மேல் 200 / மாதம் வரை

டியு  டேட் மற்றும் பெனால்டி:

ஒருவேளை ஊதியம் பெரும் நபர் அவருடைய வரியை சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால்

1.25% என்ற வட்டி விகிதத்தில் லேட் பேமெண்ட் தொகையாக அவர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு விதிக்க படுகிறது. தேவை எனக் கருதப்பட்டால், 50% என்ற விகிதத்தில் அதிகபட்ச அபராதமாக அவர்களுடைய மொத்த வரி செலுத்தவேண்டிய தொகையில் செலுத்தும் படி அந்தந்த அதிகாரத்தால் பரிந்துரைக்க படுகிறது.  இந்த வரி செலுத்துதளுக்கான உரிய தேதியில் எந்தவொரு தாமதக் கட்டணமும் இல்லாமல் செலுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். மேலும் ஊழியர்கள் தங்கள் தொழில்முறை வரியை மாநிலங்களின் ஆன்லைன் தொழில்முறை வரி (Professional Tax) மின் கட்டண போர்டல் வழியாக செலுத்தலாம். 

மேலும் சம்பளம் பெரும் ஊழியர்கள் அவர்களுடைய PROFESSIONAL TAX சை அவர்களின் மாத சம்பளத்திலிருந்து டிடக்ட்டு செய்து கொள்வார்கள். மேலும் இந்த தொகையை நிறுவனம் போர்ட்டல் வழியாக அரசாங்கத்திற்கு செலுத்தப்படுகிறது. மேலும் சுயதொழில் செய்யும் நபர்கள் மின் கட்டண போர்ட்டலைப் பயன்படுத்தலாம், இதில் அவர்களின் அனைத்து நிலுவைத் தொகையும் தீர்க்கவும் மற்றும் அவர்களின் PT ஐ செலுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

தொழில்முறை வரி செலுத்துவதற்கான எலிஜிபிலிட்டி குறித்த விபரங்கள்:

பின்வரும் நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கர்நாடக சட்டங்களின்படி P T  செலுத்த வேண்டும்:

 1. கம்பெனிஸ் மற்றும் கார்பொரேஷன்ஸ் 
 2. கார்பொரேட் பாடிஸ்
 3. ஹிந்து ஆண்டிவைடெட் பேமிலி 
 4. FIRMS , க்ளாப்ஸ், சோசைடிஸ் மற்றும் அஸோஸியேஷன்ஸ் 
 5. சம்பளம் பெறும் நபர்கள்
 6. ஊதியம் பெறுவோர்
 7. சுயதொழில் வல்லுநர்கள்

விலக்குகள்:

கர்நாடக சட்டங்களின்படி பின்வரும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் PT செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தல் குறித்த விபரங்கள்:

 • தொண்டு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்கள்
 • கண் பார்வை அற்றோர் / காது கேலாதோர் / வாய் பேச முடியாதோர் / உடல் ஊனமுற்றோர் ஆகியவர்கள் பெறப்படும் சம்பளங்கள்  
 • முன்னாள் படைவீரர்கள்
 • மத்திய அரசு ஒப்புதல் அளித்த வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள்
 • அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிதி நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள்
 • ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் சிபிஎம்எஃப்

மகாராஷ்டிராவில் இருக்கும் தொழில்முறை வரி குறித்த விபரங்கள்:

மகாராஷ்டிராவில் விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

 1. ருபாய் 7500 கீழ் இருந்த வரி தொகை இல்லை 
 2. ருபாய் 7501 முதல் ருபாய் 10000 வரை  ருபாய் 175 / மாதம் 
 3. பிப்ரவரி  மாதத்திற்கு ருபாய் 10001 க்கு அதிகமாக இருந்தல், மற்றும் மீதமுள்ள மாதங்களுக்கு ருபாய் 200 என்ற விகிதத்தின் படி இருத்தல் 

மகாராஷ்டிராவில் இருக்கும் பெண்கள் அவர்களின் வருமான தொகை ருபாய் 10000 திற்கும் கம்மியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த ஒரு Professional Tax வரி செலுத்த வேண்டியதில்லை. 

அனைத்து நிலுவைத் தொகையும் செலுத்துவதற்கான கடைசி தேதி மகாராஷ்டிராவில் யார் வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது அன்று கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் லையபிலிட்டி ருபாய் 50000 மேல் உள்ளது என்றால் அவர்களுக்கு கடைசி தேதி மார்ச் 31 ஆகும். வருடத்திற்கு ஒரு முறைதான் கட்டணம் செலுத்தவேண்டும், ஆனால் குறைந்த பட்ச லையபிலிட்டி கொண்ட நிறுவனங்கள் மட்டும் ஒவ்வொரு புதிய மாதமும் தொடங்குவதற்கு முன்பு மாதந்தோறும் தங்கள் நிலுவைத் தொகையை அழிக்க வேண்டும். 

தொழில்முறை வரி செலுத்துதல்

1 https://mahagst.gov.in/en/payments இல் உள்ள போர்டல் வழியாக ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.

2 TIN, TAN மற்றும் PAN போன்ற ஆவணங்கள் PT நிலுவைத் தொகையை அழிக்க வேண்டும்.

3 நீங்கள் வெப் சைட்டிற்குள் வந்த பிறகு தேவையான விவரங்களையும் கேப்ட்சாவையும் நிரப்பி, NEXT  என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்