ஏற்றுமதியாளர்களுக்கான வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக மேற்கொள்ளும் கடிதம்

Last Updated at: Mar 23, 2020
1016
ஏற்றுமதியாளர்களுக்கான வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக மேற்கொள்ளும் கடிதம்

முன்னுரை

ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் வர்த்தகத்தை அவர்கள் வசிக்கும் நாட்டில் மட்டும் இல்லாமல், உலக அளவிலும் அவர்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். அப்படி தொழில் புரிவோர் அவர்களது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் அவர்களின் வணிகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுவதற்காக, அரசாங்கம் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எனவே அவற்றின் முக்கிய பங்கை அளிப்பதுதான் ஜிஎஸ்டி, இந்த வரி நாடுமுழுவத்துக்கும் பொதுவானவை ஆகும். ஏற்றுமதியாளர்கள் அவர்களின் பொருட்களை  IGST (Integrated Goods and Services Tax) எனும் இந்த வரியை செலுத்தாமல் ஏற்றுமதி செய்ய லெட்டர் ஆப் அண்டர்ட்ஸ்கிங் எனும் படிவத்தை சமர்ப்பித்து அவர்களது பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். LUT என்றால் என்ன என்பதை விரிவாக காண்போம்.

LUT என்றால் என்ன?

LUT என்றால் லெட்டர் ஆப் அண்டர்ட்ஸ்கிங் என்பதாகும். ஜிஎஸ்டி யின் கீழ், ஒவ்வொரு ஏற்றுமதியாளருக்கும் அவர்களது பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது போடப்படும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கான இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன வரிகளில் இருந்து எக்சம்ப்ஸன் பெறுவதற்காக பார்மட்டை தேர்வு செய்யவேண்டும். அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது,

 • Integrated Goods and Services Tax (IGST) இன் வரியை செலுத்திய பிறகு பின்னர் பணத்தைத் திரும்பப்பெறும் தொகைக்கு உரிமை கோருகிறது.
 • Letter of Undertaking யை யோ அல்லது பாண்டையோ பைல் செய்ய வேண்டும் பிறகு ஏற்றுமதிக்கு வரி செலுத்துவதில் இருந்து (ஐஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படுகிறது. 

இந்த LUT யை, Form GST RFD 11, rule 96A of GST கீழ் வழங்கப்படுகிறது* இந்த விதியின் கீழ், ஒரு ஏற்றுமதியாளர் ஐ.ஜி.எஸ்.டி.க்கு பணம் செலுத்தாமல் ஏற்றுமதியை வழங்குவதற்கான அறிக்கையை வெளியிடுகிறார், எனவே இறுதியில் GST விதிகள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யப்படுகிறது

LUT சமர்ப்பிப்பதற்கான எலிஜிபிலிட்டி குறித்த விபரங்கள்:

GST சட்டத்தின் கீழ் பதிவு செய்த  அனைத்து நபர்களும் LUT யையும் சமர்ப்பிக்கலாம். வரி ஏய்ப்புக்காக சம்மன் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கிறது. ஜிஎஸ்டி அல்லது ஐஜிஎஸ்டி 2017 விதிகளின் கீழ், ருபாய் 2.50 லச்சத்திற்கு மேல் இருக்க கூடாது. ஒரு வேளை, LUT ஐ சமர்ப்பிக்க தனிநபருக்கு அனுமதி இல்லை என்றால் பின்னர் அவர்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் ஜிஎஸ்டி பதிவு

லெட்டர் ஆப் அண்டர்டேக்கிங் கின் பார்மெட் குறித்த விபரம்

LUT இன் கீழ், பின்வரும் விவரங்களை நிரப்பப்பட வேண்டும்: 

 • GSTIN (Goods and Services Tax Identification Number)
 • ஜிஎஸ்டியின் (Gst Registration) கீழ் பதிவு செய்யப்பட்ட பெயர்
 • டாக்குமென்ட் டின் வகை (Bond) 
 • முகவரி
 • நிறுவுதல் தேதி
 • கையொப்பம் மற்றும் பதவி
 • சாட்சி விவரங்கள்
 • வங்கி உத்தரவாதம்

LUTல் வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். செல்லுபடியாகும் தேதி காலாவதியானதும், மீண்டும் தொடர்வதற்காக  அந்த நபர் படிவத்தை புதுப்பிக்க வேண்டும். 

ஜிஎஸ்டி போர்ட்டலில் இதை உடனடியாக ஆன்லைனில் செய்யலாம். 

LUT க்கு தேவையான ஆவணங்கள்

LUT உடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

 • LUT அக்ஸ்சப்டென்ஸ் சிட்கான கவர் லெட்டர் 
 • பதிவுக்கான ஜிஎஸ்டி சான்றிதழின் நகல்.
 • படிவம் GST RFD 11: ஒரிஜினல் பார்ம் மின் இரண்டு செட்டுகள் 
 • LUT  இன் அசல் இணைப்பு (இரண்டு தொகுப்புகள்).இவர்களுடன், இரண்டு சாட்சிகளும் ஆஜராக வேண்டும்.
 • வெரிபிகேஷன் செய்த பிறகு வங்கி மேலாளரிடமிருந்து டிஜிட்டல் கையொப்பங்களை பெறவேண்டும்
 • சாட்சிகள் அவர்களுடைய ID ப்ரூப்களையும் மற்றும் பான் கார்டையும் சமர்ப்பிக்க வேண்டும் 
 • இதில் வழங்கப்பட்ட அனைத்து விவரங்களும், ID ப்ரூப் பில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் 
 • தனிநபரின் பான் கார்டு அட்டை வழங்கப்பட்டிருக்க  வேண்டும்
 • அவர்களுடைய நிறுவனத்தை இன்கார்போரேஷன் செய்ததற்கான ஆதாரம் வழங்கப்பட வேண்டும், அதாவது, Bond Incorporation Certificate . ஒருவேளை பார்ட்னர்ஷிப் நிறுவனமாக இருந்தாள் பார்ட்னர்ஷிப் டீட் சமர்ப்பிக்கப் பட்டிருக்க வேண்டும்
 • ஒரு லெட்டர்ஹெட் டில் அவர்களுக்கான தகுதியை ஸெல்ப்டிக்ளர்ரேசன் செய்திருக்க வேண்டும் 
 • ஏற்றுமதி விற்பனைக்கான அனைத்து விலைப்பட்டியல்களின் தகவல்களை அளிக்க வேண்டும். 
 • இந்த விலைப்பட்டியல்களை சார்டெட் அக்கௌன்டன்ட் சரிபார்த்து சான்றளிக்க வேண்டும்.
 • IEC குறியீட்டின் நகல்.

LUT ஐ நிறுவுதல்

முன்னதாக, LUT இன் அனைத்து செயல்முறைகளும் ஆஃப்லைனில் செய்யப்பட்டன. ஆனால், இப்போது, ​​மிக எளிய வழிமுறைகளுடன் இதனை ஆன்லைனில் எளிமையாக வழங்க முடிகிறது* அதற்கான வழிமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

 • முதலில் www.gst.gov.in என்ற வெப்சைட் டை லாகின் செய்து யூசர் ஐடி யையும், பாஸ்வேடையும் கொடுக்க வேண்டும்பின்னர், 
 • அடுத்து சேவைகள்தாகவலின் கீழ், ‘பயனர் சேவைகள்தாகவலைத் தேர்ந்தெடுக்கவும்.
 • அப்போது ட்ராப்  டவுன் மெனுவிலிருந்து, ‘ஃபர்னிஷ் லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
 • அப்போது  ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு பதிவு செய்யப்பட்ட பெயர், வர்த்தக பெயர், ஜிஎஸ்டி போன்றவை உட்பட அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டுடிருக்கும். அதே பக்கத்தில், நிதி ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும். 
 • ஒரு வேளை, LUT யை மேனுவலாக வழங்கப்பட்டிருந்தால் அப்போது நீங்கள் டாக்குமெண்ட்டை அப்லோட் செய்யலாம். 
 • அடுத்து, ஸ்கிரீனில்  தோன்றும் படிவத்தில் LUT தொடர்பான அனைத்து விவரங்களையும் நிரப்பவும். (குறிப்பு: சாட்சி மற்றும் அவற்றின் விவரங்கள் வங்கி அறிக்கைகள் / கேரென்டியில் குறிப்பிடப்பட்டதைப் போலவே இருக்க வேண்டும்.
 • கடைசியாக, பதவி / கையொப்பத்துடன் தாக்கல் செய்யும் இடத்தை உள்ளிட வேண்டும். 

(குறிப்பு: சமர்ப்பிக்கப்பட்ட கையொப்பத்தை எந்தகாரணத்தை கொண்டும் திருத்த முடியாது.)

 • படிவத்தை இறுதியாக சமர்ப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று EVC (Electronic Verification Code) மற்றொன்று DSC (Digital Signature Certificate). இரண்டிற்குமே Application Reference Number (ARN) தேவைப்படும்
 • இறுதியாக எல்லா பார்மாலிட்டிஸ்களையும் முடித்தவுடன் Letter of Undertaking டவுன்லோடு செய்ததற்கான அக்நாலெட்ஜ்மென்ட் பெறப்படும்.
குறிப்பு: டி.எஸ்.சி முறையை நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.பி.க்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

LUT செய்வதை தவிர, ஏற்றுமதியாளர் அவர்களுடைய பாண்டை சமர்ப்பிப்பதே மற்றோரு வழி ஆகும். இதற்கு ஒரேமாதரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதில் புதிய விஷயமாக இருபது வங்கிக்கு உத்திரவாதம் அளிப்பதே ஆகும். இதில் மொத்த தொகையின் 15% வங்கி உத்தரவாதத்துடன் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முடிவுரை

எனவே, அனைத்து ஏற்றுமதியாளர்களும் வர்த்தகர்களும் அவர்களுடைய ஏற்றுமதியில்  LUT ஐ சமர்ப்பிப்பதன் மூலம் வரி செலுத்துவதைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் தொழிலை எளிமையாக நடத்த முடியும். இது வர்த்தகர்களுக்கு மட்டும் இல்லாமல் , அரசாங்கத்திற்கும்  பயனுள்ள வகையில் உதவுகிறது.