கர்நாடக ஷாப் அண்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் ஆக்ட் – அவற்றை பற்றிய முழுமையான வழிகாட்டி

Last Updated at: Mar 28, 2020
663
கர்நாடக ஷாப் அண்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் ஆக்ட் - அவற்றை பற்றிய முழுமையான வழிகாட்டி

கர்நாடக  ஷாப்ஸ் அண்ட் கமெர்சியல் எஸ்டாபிளிஷ்மெண்ட்ஸ் ஆக்ட், 1961 ஆண்டில் அமைந்துள்ள இந்த ஆக்ட் ஒரு ஸ்டேட் லேபர் லாஸ் ஆகும், டிபார்ட்மெண்ட் ஆப் லேபர் ஆல்செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆக்ட்டை கர்நாடக மாநில அரசு அறிவித்த தேதியிலிருந்து அங்கு கர்நாடக மாநிலம் முழுவதும் செல்லுபடி ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. மாநிலத்திற்குள் வணிக நிறுவனங்களின் கடைகளில் வேலை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் கமெர்சியல் எஸ்டாபிளிஷ்மெண்ட் ஸின்படி  இந்த சட்டம் விதிமுறைகள் மற்றும் பிற வழிகாட்டுதல்களை வழங்குகிறது. ஷாப்  மற்றும் எஸ்டாபிளிஷ்மென்ட் லைசென்ஸ் ஆக்ட்டில் இருக்கும் வணிக விலக்குகல் என்னென்ன என்பதை விரிவாக காணலாம்

இந்தச் சட்டத்தின்படி, “Commercial Establishmentஎன்பது 

 1. வணிகரீதியானது
 2. டிரேடிங் 
 3. பேங்கிங் 
 4. இன்சூரன்ஸ் கம்பெனி 
 5. ஒரு ஸ்தாபனம் அல்லது நிர்வாக சேவைகள்

ஒரு நபர் அவர் / அவள் யாராக இருந்தாலும் சரி அலுவலக வேலை, ஒரு ஹோட்டல், ஒரு உணவகம், போர்டிங், ஒரு கபே அல்லது வேறு சில ரெப்ரஸ்மென்ட் இடங்களில் வேலை செய்கின்றார்கள் என்றால் 

ஒரு தியேட்டர் அல்லது வேறு எந்த பொது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வேலை செய்கிறவர்கள்.

6. மாநில அரசால் ஒரு குறிப்பிட்ட இடத்தை வணிக ஸ்தாபனங்களுக்கான ஆக்ட் டிற்கு அறிவிக்க முடியும். 

கடைகள் என்பது எல்லா வளாகத்தையும் குறிக்கிறது அல்லது அது இருக்கும் இடத்தையோ அங்கு வணிகம் அல்லது நுகர்வோருக்கு சேவை வழங்கப்படும் இடத்தில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் அலுவலகங்கள், ஸ்டோர் ரூம்கள், குடோன்கள், கிடங்குகள் போன்றவை அடங்கும். இது குறிப்பிட்ட ஒரே வளாகத்தில் இருக்கலாம் அல்லது வேறு விதமாக கூட இருக்கலாம். ஆனால், இந்த விளக்கத்தில் தொழிற்சாலையுடன் இணைக்கப்பட்ட வணிக அல்லது கடை சேர்க்கப்படவில்லை மேலும் இதன் ஊழியர்கள் Factories Act, 1948 கீழ் வருகிறார்கள். 

ஷாப்  மற்றும் எஸ்டாபிளிஷ்மென்ட் லைசென்ஸ் ஆக்ட்டில் இருக்கும் வணிக விலக்குகல் என்னென்ன? 

இந்த சட்டத்தின் படி வணிகங்களுடைய எந்த செயலுடனும் எந்த தொடர்பும் இல்லாதவற்றயே   “exemption” என்று கூறப்படுகிறது.

  1. மத்திய மற்றும் மாநில அரசு அல்லது உள்ளூர் அதிகாரிகளின் அலுவலகங்கள்.
  2. தபால், ரயில்வே, தொலைபேசி, நீர் போக்குவரத்து சேவைகள்,
  3. ஒரு வங்கி நிறுவனத்திற்கான அலுவலகம், 
  4. ரயில்வே சாப்பாட்டு கார்,
  5. சிகிச்சைக்கு ஒரு இடம் அல்லது நோயுற்றவர்களைப் பராமரித்தல் அல்லது மனரீதியாக தகுதியற்றவர்கள்,
  6. Food Corporation of India (FCI)  யை நிறுவுதல், 
  7. ஒரு வங்கி அலுவலகங்கள்,
  8. மூன்று நபர்கள் மட்டுமே பணிபுரியும் சட்ட மற்றும் மருத்துவ நடவடிக்கைகளின் அலுவலகங்கள்,
  9. முக்கியமாக மருந்துகளில் ஒரு கடை, அறுவை சிகிச்சை தேவைகள் அல்லது அதற்கான உபகரணங்கள்,
  10. ஒரு நபர் நேரடியாக கிளெர்க் வேளையில் ஈடுபட்டவரே பொருட்களை அனுப்புவதற்கு பொறுப்பு

கடைகள் மற்றும் ஸ்தாபன உரிமம்

கர்நாடக ஷாப் மற்றும் எஸ்டாபிளிஷ்மென்ட் ஆக்ட்டின் அம்சங்கள் என்ன?

 1. பதிவு சான்றிதழ் வழங்குதல்
 2. பதிவு சான்றிதழ் புதுப்பித்தல்
 3. பதிவு சான்றிதழில் மாற்றங்களை எளிதாக்குதல்
 4. டூப்ளிகேட் ரெஜிஸ்திரேட்டின் செர்டிபிகேட் வழங்குதல்
 5. ஆண்டு வருமானத்தை தாக்கல் செய்வது 
 6. வார விடுமுறை நிவாரணம் அல்லது விலக்கு அளித்தல்
 7. நைட் ஷிப்டுகளில் பணிபுரியும் பெண்களுக்கு விலக்கு
 8. மேல் முறையீட்டிற்கு சமர்ப்பித்தல் 

உரிமையாளரின் கடமைகள்:

 1. அவர்களுடைய நிறுவனத்தின் பதிவு
 2. ஸ்தாபனத்திற்கான வார விடுமுறை
 3. வேலை நேரத்தை நிர்ணயித்தல்
 4. வேலைவாய்ப்பு மற்றும் ஒழுங்குமுறைகள்
 5. ரெகார்ட்ஸ் மேனேஜ்மென்ட் 

இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தை எவ்வாறு பதிவு செய்வது

ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய மற்றும் ஸ்தாபனத்தை புதுப்பித்தல் செய்ய கர்நாடக ஷாப் மற்றும் எஸ்டாபிளிஷ்மென்ட், 1961 னின் படி தொழில் முனைவோர் e-Karmika என்ற ஆன்லைன் வசதியைப் பெறலாம். 

 • ஒரு நிறுவனத்தை நீங்கள் புதிதாக ரெஜிஸ்டர் செய்கிறீர்கள் என்றால், வணிகத்தை தொடங்கிய நாளில் இருந்து நீங்கள் 30 நாட்களுக்குள் அந்த நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். 
 • ஒருவேளை இது ஒரு எக்சிஸ்டிங் ஆர்கனைசேஷன் னாக இருந்தால், உங்கள் நிறுவனத்தை இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து பதிவு செய்ய வேண்டும்.
 • ஒரு நிறுவனத்திற்கான பதிவு சான்றிதழ் (REGISTRATION CERTIFICATE ) வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், எனவே பரிந்துரைக்கப்பட்ட முறையில், அதன் கட்டணம் செலுத்தப்படும் காலாவதி தேதிக்குள் மீண்டும் அதை புதுப்பிக்க வேண்டும். 
 • நிறுவனத்தின் உரிமையாளர் அவருடைய பதிவு சான்றிதழை, அலுவலக வளாகத்திற்குள் அனைவராலும் பார்க்கக்கூடிய இடத்தில் காண்பிக்க வேண்டும்.
 • நீங்கள் ஏதேனும் தகவலை மாற்ற வேண்டும் என்று எண்ணினால் அத்தகைய மாற்றத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பதிவு அதிகாரத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.
 • ஒருவேளை ஒருவர் அவருடைய ஸ்தாபனத்தை மூடுகிறார் என்றால், உரிமையாளர் பதிவு சான்றிதழை அதிகாரத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 

பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள் யாவை

 • உரிமையாளரின் முகவரி ஆதாரம் (ஆதார் அட்டை / வாக்காளர் ஐடி / ஓட்டுநர் உரிமம்)
 • இன்கார்ப்பொரேஷன் செர்டிபிகேட்  / MOA  (பிரைவேட் லிமிடெட் கம்பெனி க்கு மட்டும்)
 • சுய சான்றளிக்கப்பட்ட கடிதத்தை அதாரிட்டி இடமிருந்து  உரிமையாளர் / அங்கீகார கடிதம் பெறவேண்டும் 
 • பேமெண்ட் ரெசிப்ட் அல்லது செலான் 
 • உரிமையாளர் கையொப்பமிட்ட ரெஜிஸ்டரேஷன் செர்டிபிகேட்

புதிய ரெஜிஸ்டரேஷன் செய்வதற்காக கட்டணம் என்ன?

 
வேலையாட்களின் எண்ணிக்கை
கட்டணம் (RUPEES)
1 நில் எம்ப்லாய்                      300 
2 ஒன்று முதல் ஒன்பது நபர்  வரை                     600 
3 பத்து முதல் பத்தொன்பது வரை                 4,000 
4 இருபது முதல் நாற்பத்தி ஒன்பது வரை                10,000 
5 ஐம்பது முதல் தொன்னூத்தி ஒன்பது வரை                 20,000 
6 நூறு முதல் இருநூற்றி ஐம்பது வரை                40,000 
7 இருநூற்றி ஐம்பத்தி ஒன்று முதல் ஐநூறு வரை               50,000 
8 ஐநூற்றி ஒன்று முதல் ஆயிரம் வரை                70,000 
9 ஆயிரத்திற்கும் மேல்                 75,000 

 

ஸ்தாபனத்திற்கான வார விடுமுறை:

வாரத்திற்கு ஒரு நாள் எல்லா ஸ்தாபனத்தையும் மூட வேண்டும். ஒரு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விடுமுறையாக விடப்படும் அந்த ஒரு நாளை ஸ்தாபனத்தின் உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும், மேலும் அதையே ரெஜிஸ்டரேஷன் அதாரிட்டி இடமும் தெரிவிக்க வேண்டும்.

இருப்பினும்,ஒரு சில நிறுவனங்களுக்கு வார விடுமுறை நாட்கள் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. அப்படி பட்ட சில நிறுவனங்களை இங்கே காணலாம்

 1. கிளப்புகள், ஹோட்டல்கள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், ரெசிடென்ட்டில் பள்ளிகள்.
 2. ஹேர் கட்டிங் சலூன்
 3. தாமிரம், கண்டெய்னர், உற்பத்தி நிறுவனங்கள்.
 4. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை
 5. தினசரி செய்தித்தாள் மற்றும் வார இதழ்கள்
 6. சினிமா அரங்குகள், திரையரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு மையங்கள்.
 7. மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளர்கள்
 8. தொற்று நோய்கள் குறித்து ஆராய்ச்சி / ஆய்வு செய்யும் நிறுவனங்கள்.

வேலை நேரம்:

எந்த ஒரு வணிகமும் அல்லது ஸ்தாபனம்மும் பரிந்துரைக்கப்பட்ட வேலை நேரத்திற்கு மற்றும் வேலை செய்தல் போதும். அதாவது எந்த ஒரு ஸ்தாபனதையும் கொடுக்கப்பட்டுள்ள கால அளவிற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இருக்கக்கூடாது. 

 • பெங்களூர் நகரம் – காலை 6 மணிக்கு முன் மற்றும் இரவு 9 மணிக்குப் பிறகு இரவு.
 • பிற இடம்: காலை 8 மணிக்கு முன் மற்றும் இரவு 8 மணிக்குப் பிறகு.

தடை மற்றும் விலக்கு:

எந்தவொரு நிறுவனத்திலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குப் பிறகு எந்தவொரு நிறுவனத்திலும் பெண்கள் வேலை செய்ய தேவையில்லை அல்லது வேலை செய்ய அனுமதிக்கப்படவும்  மாட்டார்கள். 

இருப்பினும், தகவல் தொழில்நுட்பம் / வணிக தொழில்நுட்ப அமைப்புகல் (Form R) ரின் மூலம் இரவு 8 மணிக்குப் பிறகு வேலை செய்ய அனுமதி பெறலாம். 

வேலைவாய்ப்பு மற்றும் ஒழுங்குமுறை:

 1. 180 நாட்கள் அல்லது 6 மாத வேலை நாட்களை நிறைவு செய்த எந்தவொரு ஊழியரையும் முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ய முடியாது.
 2. எந்தவொரு பணியாளரின் வேலை நேரமும் கூடுதல் வேலை நேரம் உட்பட 48 மணி மற்றும் 58 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 3. பணியாளர் வருகை FORM T இல் பராமரிக்கப்பட வேண்டும்
 4. ஒவ்வொரு ஊழியருடைய சம்பளத்தையும் அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்கு முன் வரவு வைக்கப்பட வேண்டும்.

படிவங்கள் மற்றும் பதிவுகள்:

 1. படிவம் A :

பதிவு, புதுப்பித்தல் மற்றும் ஸ்தாபனத்தின் தகவல் மாற்றத்தின் அறிக்கையை அளிப்பது

2. படிவம் P :

வார விடுமுறை நாட்களுக்கான வெவ்வேறு நாட்களை சரிசெய்தல்

3. படிவம் F & படிவம் H :-

பணியாளர் விடுப்பு நாட்களை பராமரித்தல்  (Form F) மூலம், மற்றும் ஒரு நகலை ஊழியரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் (FORM H)

4. படிவம் T :-

பணியாளர் தினசரி அட்டெண்டென்ஸ் 

5. படிவம் R :-

இரவு 8 மணிக்குப் பிறகு பெண்கள் வேலை செய்ய அனுமதி.

6. படிவம் U :-

டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். 

மேற்பார்வை தொழிலாளர் ஆணையர் – தலைமை ஆய்வாளர் கீழ் இந்த சட்டம் கீழ் செயல்படுத்தப்படும். 

இன்ஸ்பெக்டர் மற்றும் துறை மட்ட அதிகாரிகள் கூடுதல் இன்ஸ்பெக்டர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கடை மற்றும் ஸ்தாபனத்தின் அரசாங்க PDF கீழே கிடைக்கிறது. இதை நீங்கள் இங்கே  பார்க்கலாம்.

Shop and Establishment – Karnataka