ஐஎஸ்ஓ என்றால் என்ன? ஏன் நிறுவனங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் முக்கியமானது? By Vikram Shah - மார்ச் 7, 2020 Last Updated at: Dec 03, 2020 0 512 நீங்கள் ஒரு நிறுவனத்தை நிர்வகித்துக்கொண்டிருக்கும்போது, உங்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான தரச் சரிபார்ப்பை நீங்கள் சட்டப்பூர்வமாக சரிபார்க்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் . தயாரிப்புகளின் தரச் சரிபார்ப்பு என்பது பொதுமக்கள் பாதுகாப்பையும் அதன் மீது உள்ள நம்பிக்கையும் உறுதி செய்வதாகும். இந்தியாவில் ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ் (ISO 9001 Certification) உங்கள் நிறுவனத்தை மிகவும் வளமான முறையில் நிறுவ விரும்பும்போது பெற வேண்டிய மிகவும் முக்கியமான சான்றிதழ் ஆகும். தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஐஎஸ்ஓ 9001 தர மேலாண்மை அமைப்பின் (கியூஎம்எஸ்) கீழ் வருகிறது. ஒரு நிறுவனத்திற்கு ஏன் ஐஎஸ்ஓ தேவை? ஐஎஸ்ஓ அல்லது சர்வதேச தர நிர்ணய அமைப்பு என்பது ஒரு சுயாதீன அமைப்பாகும், இது நிறுவனத்தின் தரங்களை வழங்குகிறது. தரம் என்பது , வணிகங்களால் வழங்கப்படும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் என்று வரையறுக்கலாம். ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ் உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டுகிறது. மேலும், சந்தை வீதம் அதிகரிப்போ அல்லது வேறுபடுவதில் அதிக போராட்டத்தையோ நீங்கள் காணும்போது, ஐ.எஸ்.ஓ என்பது சந்தையில் தக்கவைத்தக் கொள்ளவும் வளர்க்கவும் உதவும் முக்கியமான ஒன்றகும். உங்கள் நிறுவனத்தை பதிவு செய்து இப்போதே ஐஎஸ்ஓ சான்றிதழை பெறுங்கள். ஐஎஸ்ஓ சான்றிதழ் உங்கள் வணிக நம்பகத்தன்மை அதிகாரம் மற்றும் வணிகத்தின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்த உதவுகிறது. உங்கள் நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றிருக்கிறது எனில் அதன் மூலம் பல நன்மைகள் உள்ளன. ஏன் ஐஎஸ்ஓ சான்றிதழ் முக்கியமானது? ஐஎஸ்ஓ சான்றிதழ் என்பது எம்எஸ்எம்இ அரசால் உங்கள் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தரச் சான்றிதழ் ஆகும் . இந்தியாவில் ஐஎஸ்ஓ சான்றிதழ் என்பது உங்கள் தயாரிப்புகளின் தரம், வணிக செயல்திறன், சர்வதேச அளவில் நம்பகத்தன்மையை உருவாக்குதல், எளிதான சந்தைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதிக நம்பகத்தன்மை தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ஐஎஸ்ஓ) உலகளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதால், உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நோக்கி ஏற்படும் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை விரிவாக்குவதற்குப் பயன்படுகிறது. சிறந்த அங்கீகாரம் இந்தச் சான்றிதழால் உங்கள் தயாரிப்புகளின் வணிக முத்திரை உலகளவில் அங்கீகரிக்கப்படும். மேலும் இது மற்ற சந்தை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உங்கள் தொழில்முறை நிலையை அதிகரிக்கும். உங்கள் வணிக ஐசோ சான்றிதழ் பெறுக மேம்படுத்தப்பட்ட நிலைத்தன்மை உங்கள் வணிக செயல்முறைகளின் கட்டுப்பாட்டை அதிகரிக்க ஐஎஸ்ஓ 9001 உங்களை ஆதரிக்கிறது. உங்கள் வணிகத்தை நீங்கள் எவ்வளவு கட்டுப்படுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் வணிகத்தின் நிலைத்தன்மையும் அதிகரிக்கும். அதிகரித்த நிலைத்தன்மை என்பது உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுடன் வணிகம் செய்யும் ஒவ்வொரு முறையும் சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ ஒரே மாதிரியான நல்ல நிலையில் பெறுகிறார்கள் என்பதாகும். வருவாய் அதிகரிப்பு தரத்தின் உறுதி இருக்கும்போது, மக்கள் மீண்டும் மீண்டும் உங்களிடம் தான் வருவார்கள். இந்த ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறும்போது, உங்கள் தயாரிப்பு / சேவையின் விலை நிர்ணயம் செய்யலாம், இதன் மூலம் உங்கள் வணிகத்திற்கு சிறந்த வருவாயை எதிர்பார்க்கலாம். எனவே வளமான பணிச்சூழல் இருக்கும். ஒரு உன்னதமான அரசாங்க முத்திரை உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்துவது மிகவும் சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் இருக்கும். பொதி செய்யும் போதோ மற்றும் ஆவணப்படுத்தும் போதோ உங்கள் தயாரிப்பை ஐஎஸ்ஓ சின்னத்துடன் அதிகாரப்பூர்வமாக பெயரிடலாம். இந்த அரசாங்க முத்திரை உங்களுக்கு பல வழிகளில் பயனளிக்கும். அதிக வாடிக்கையாளர் தக்கவைப்பு மற்றும் வாடிக்கையாளர் மனநிறைவு உங்கள் தயாரிப்பில் பெயரிடப்பட்ட அரசாங்க குறிச்சொல்லைக் கண்டறிந்தால், அதிகமான வாடிக்கையாளர்கள் உங்களை நோக்கி வருவது முக்கியமான அம்சங்களில் ஒன்று. அதிக தரமான தயாரிப்புகளை வைத்திருப்பது அதிக வாடிக்கையாளர்களைப் பெற உதவும். எனவே இதன் மூலம் நீங்கள் வாடிக்கையாளர் மனா நிறைவையும் அதன் மூலம் வாடிக்கையாளர் தக்கவைப்பையும் பெறுவீர்கள். எளிதான சந்தைப்படுத்தல் நுட்பம் ஐஎஸ்ஓ உங்களுக்கும் உங்கள் தயாரிப்புகளுக்கும் அதிக மதிப்பை வழங்குகிறது. இந்த காரணியை உங்கள் விளம்பர புள்ளியாக நீங்கள் பயன்படுத்தலாம். சர்வதேச தரமான நம்பகதன்மையை வெல்வதன் மூலம் உங்கள் தயாரிப்புகளை எளிதாக சந்தைப்படுத்தலாம். நாடுகளுக்கு இடையே வர்த்தகம் ஐஎஸ்ஓ சான்றிதழ் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டதால், நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எளிதாக இருக்கும். ஒரு சில கட்டுப்பாடுகள் மற்றும் ஆவணப்படுத்தல் சிக்கல்களுடன், உங்கள் வர்த்தக செயல்முறை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும். அதிகாரம் பெற்ற ஊழியர்கள் அதன்படி, ஐஎஸ்ஓ தரத்தைப் பெறும்போது, ஊழியர்கள் அதிகாரம் பெறுவார்கள், ஏனெனில் அவர்கள் தானாகவே முறையாக வேலை செய்ய கற்றுக்கொள்வார்கள். மேலும், அவற்றின் சுயவிவரங்கள் மதிப்பு கூட்டப்பட்ட ஒன்றாக இருக்கும். இது ஒரு ஐஎஸ்ஓ அடிப்படையிலான நிறுவனம் என்பதால் அவர்களின் பணி குறித்த அவர்களின் அறிவு மேலும் வளப்படுத்தப்படும். தொழில்முறை கலாச்சாரத்தின் வளர்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் நிபுணத்துவம் பராமரிக்கப்படும். ஒரு சர்வதேச அளவில் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் ஆகிய அனைத்தும் ஒரு தொழில்முறை கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதில் செயல்படுத்தப்படும். நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றுவது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பல தொழில்களுடன் வர்த்தகம் செய்வதற்கும் பயனளிக்கும். உந்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊழியர்கள் ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் பயிற்சி மற்றும் மேம்பாடு தேவைப்படுகிறது. மேலும், நடைமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் அளவீடுகள் போன்ற வேலைகளைச் செய்ய அவர்களுக்கு தேவையான கருவிகளை இது வழங்குகிறது. இதன் விளைவாக, உங்கள் ஊழியர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது சம்மந்தமாக அதிக அறிவைப் பெறுவார்கள், மேலும் பயிற்சி மிகுதி என்பதால், அவர்களின் தொழிலும் மேம்படும். கூடுதல் நுகர்வு குறைத்தல் ஐஎஸ்ஓவைப் பெற்ற பிறகு வளர்ச்சி நடைபெறுகிறது, எதைப் பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்தக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியும். சந்தையில் உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் தனித்துவமான மற்றும் மதிப்புமிக்க வழியில் நீங்கள் புரிந்துகொண்டு முன்னேறத் தொடங்குவீர்கள். தயாரிப்புகள் / சேவைகளின் பாதுகாப்பு உத்தரவாதம் ஒரு நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறும்போது, தரம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனில் இதில் இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை இது பொதுவான மக்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் / சேவையின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. திறமையான மற்றும் மேம்பட்ட செயல்பாடுகள் செயல்முறை, பணிகள், நடைமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகள் எளிமைப்படுத்தப்பட்டு தொழிலாளர்கள் மத்தியில் சமமாக விநியோகிக்கப்படும். மேலும், மேம்பட்ட மற்றும் திறமையான செயல்பாடுகள் இருக்கும். இந்த வழியில் ஒரு வணிகத்தை நடத்துவதனால் ஊழியர்களிடையே புகார்கள் மற்றும் சிக்கல்களைக் குறைக்கப்படும். இருப்பினும், ஒரு ஐஎஸ்ஓ சான்றிதழைப் பெறுவது உங்கள் தயாரிப்புகளுக்கும் வணிகத்திற்கும் பல வழிகளில் பயனளிக்கிறது. உண்மையில் இந்தச் சான்றிதழை பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆவணங்களின் சரிபார்ப்பு ஐஎஸ்ஓ உரிமத்திற்காக அதிகாரப்பூர்வமாக நடைபெற வேண்டும். மேலும், ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் .எனவே, ஒரு ஐஎஸ்ஓ சான்றிதழை வாங்குவது உங்கள் நிறுவனத்தை உலகளாவிய சந்தையில் நிறுவுவதற்கு உதவும்.