இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர்க்கான குறியீடு (IEC) விண்ணப்பத்தின் செயல்முறைகள்

Last Updated at: December 12, 2019
86
இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர்க்கான குறியீடு (IEC) விண்ணப்பத்தின் செயல்முறைகள்

ஏற்றுமதிக்கான வர்த்தக நடைமுறைகளின்  விதி முறைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது. ஒரு நபர் ஏற்றுமதியாளராக இருக்கிறார் என்றால் அவர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான அந்நாட்டிற்கான  கொள்கைகள் , விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாக பின்பற்றியுள்ளாரா என்பதை உறுதி செய்வது கட்டாயமாகும். IEC எண்ணைப் பெறுவதற்கு, ஏற்றுமதியாளர் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரீஜினல் இம்போர்ட் – எக்ஸ்போர்ட் லைசென்சிங் அத்தாரிட்டியை விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அல்லது ஏற்றுமதி செய்ய இறக்குமதியாளர்-ஏற்றுமதியாளர் குறியீடு அல்லது IEC அவசியம். இது 10 இலக்கக் குறியீடாகும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கிளைகளுக்கும் கொடுக்கப்பட்ட குறியீட்டு என் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். பின்வரும் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க  வேண்டும்.

IEC க்கு தேவையான ஆவணங்கள்

  1. நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் IEC எண்ணை வழங்குவதற்கான கோரிக்கை வைத்தல்.
  2. விண்ணப்பதாரரால் சுய சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யத ஆயத் நிர்யாத் படிவம் ANF இன் இரண்டு பிரதிகள்.
  3. அப்பெண்டிஸ் 18A. வின்படி  விண்ணப்பதாரருக்கு வங்கியாளறால் அளிக்கப்பட்ட சான்றிதழ்.
  4. செல்ப் அட்டெஸ்டேட் செய்யப்பட்ட பான் கார்டின் நகல் வேண்டும். ஒரு பான் கார்டு எண்ணுக்கு எதிராக ஒரு IEC மட்டுமே வழங்க முடியும்.
  5. விண்ணப்பதாரர் / இயக்குநர்கள் / பார்ட்னர்களின் இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்.
  6. மெமோரண்டம் ஆப் அஸோஸியேஷன், ஆர்டிகிள்ஸ் ஆப் அஸோஸியேஷன் மற்றும் இன்கார்பொரேஷன் செர்டிபிகேட் (கம்பனியாக இருந்தால்) அல்லது LLP அக்ரீமெண்ட் (LLP  யாக இருந்தால்) இவற்றின் நகல்கள் வேண்டும்.

வர்த்தகம் பற்றிய விவரங்களுக்கு

IEC க்கான நடைமுறைகள்:-

  1. DGFT வலைத்தளத்திற்குச் சென்று IEC ஆன்லைன் விண்ணப்ப விருப்பத்தை சொடுக்கவும்.
  2. பைல் மெனுவில் PAN என்பதை தேர்வு செய்து அதில் கிரிஏட் எனும் ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
  3. அப்பொழுது கணினி புதிய ஈ-காம் குறிப்பு எண்ணை உருவாக்கும்.
  4. பெயர், முகவரி, பான் அட்டை விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் இப்போது நீங்கள் பதிவு செய்யலாம்.
  5. மின்னணு பரிமாற்றத்தின் மூலம்  DGFT  க்கு ரூபாய் 250 நீங்கள் செலுத்த வேண்டும்
  6. மேலே குறிப்பிட்ட ஆவணங்களை PDF வடிவத்தில் பதிவேற்றவும்.

உங்கள் சமர்ப்பிப்பு சரியாக இருக்கிறது என்றால் ஒரு வாரத்திற்குள்  விண்ணப்பத்தில் கொடுக்கப் பட்ட முகவரிக்கு  IEC வந்து சேரும். (இது லெட்டர்ஹெட்டில் உள்ள முகவரிக்கு சமமாக இருக்க வேண்டும்).

உங்களிடம் மேலும் கேள்விகள் இருந்தால், இந்த DGFT ஆவணத்தைப் பார்க்கவும். எனவே, உங்கள் வணிக பொருட்களை இறக்குமதி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஈடுபட்டால் IEC எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் போது, ​​நீங்கள் சில ஆவணங்களையும் வழங்க வேண்டும். கொடுக்கப்பட்ட வழிமுறைகள்  மற்றும் ஆவணங்கள் போதுமான அளவு திருப்தியளிப்பதாக இருந்தால் IEC என்னை அதிகாரிகள் வழங்குவார்கள்.

    SHARE