இந்தியாவில் ஒரு நபர் நிறுவனத்தை எவ்வாறு தொடங்குவது

Last Updated at: December 12, 2019
162
one person company

ஒரு வணிகத்தின் மீது முழு கட்டுப்பாட்டை நீங்கள் விரும்பினால், அதை இயக்கும் பொறுப்பானது பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நபர் நிறுவனத்தை (ஓபிசி) தொடங்க வேண்டும். இந்தியாவின் புதிய கருத்தானது, நீங்கள் மட்டுமே பங்குதாரராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து ஒரு ஓபிசி நிறுவனத்தை நடத்த அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் முதலீட்டில் அதிகபட்ச சராசரி வருவாயாக மூன்று ஆண்டுகளில் ரூ. 2 கோடி வரை ஈட்ட உதவுகிறது. இதில் ஒரு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இருக்க வேண்டும், ஆனால் அது நிறுவனத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே. இந்த ஓபிசி நிறுவனத்தின் பெரிய குறைபாடு என்னவென்றால், நீங்கள் பங்குகளை உயர்த்தவோ அல்லது பணியாளர் பங்கு விருப்பங்களை வழங்கவோ முடியாது.

ஓபிசியை யார் தொடங்கலாம்? இந்தியாவில் வசிக்கும் பதினெட்டு வயதிற்க்கு மேலான இந்திய குடிமக்கள் மட்டுமே ஓபிசியை தொடங்க முடியும். ஒரு தனிநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓபிசியைத் தொடங்க முடியாது, ஆனால் அவர்கள் மற்ற வணிகங்களின் ஒரு பகுதியாக இருக்க முழு சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. ஆனால், பதினெட்டு வயதிற்க்கு கீழ் இருக்கும் சிறியவர்கள் எவரும் ஓபிசியில் உறுப்பினராகவோ அல்லது பரிந்துரையாளராகவோ இருக்க முடியாது.

ஓபிசியை தொடங்குவதற்கு வேண்டியது என்ன? குறைந்தது ஒரு பங்குதாரர் மற்றும் இயக்குனர் (அவர்கள் ஒரே நபராக இருக்கலாம்) மற்றும் ஒரு பரிந்துரையாளர் இருக்க வேண்டும். ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைப் போலவே, பணம் செலுத்தும் மூலதனத்திற்கு குறைந்தபட்சம் என்று எதுவும் இல்லை என்றாலும், குறைந்தபட்ச அங்கீகரிக்கப்பட்ட மூலதனமானது ரூ. 1லட்சம் ஆகும்.

ஒரு நபர் நிறுவனத்திற்கான நடைமுறைகள்:

எண்முறை கையொப்ப சான்றிதழ் (டி.எஸ்.சி) பெறுதல்

முடிக்க வேண்டிய நேரம்: 3 முதல் 5 நாட்கள்

செலவு: ஒரு இயக்குநருக்கு ரூ .1,500

1.இணைத்தல்:

இணைத்தல் இப்போது இணையதளத்தில் செய்யப்படுவதால், மின்னணு ஆவணங்களில் இயக்குநரின் கையொப்பம் தேவைப்படுகிறது. இதை சாத்தியமாக்க, ஓபிசியில் உள்ள இயக்குநர் தொகுப்பு-2 ன் படி எண்முறை கையொப்ப சான்றிதழ் (டி.எஸ்.சி) பெற வேண்டும். எம்.சி.ஏ ஆல் நியமிக்கப்பட்ட ஆறு சான்றளிக்கும் அதிகாரிகளில் ஏதேனும் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், என்கோட் மற்றும் இ-முத்ரா போன்ற விற்பனையாளரிடமிருந்து இது கிடைக்கிறது. ஆனால், விற்பனையாளர்களின் விகிதமானது வேறுபடும். மேலும் இக்கட்டணத்தில் யூ.எஸ்.பி டோக்கனின் விலையும் மற்றும் சான்றிதழின் விலையும் அடங்கும்.

இந்த முழு செயல்முறையையும் செய்து முடிக்க மூன்று நாட்கள் ஆகும், ஏனெனில் பெரும்பாலும் படிவம் மற்றும் ஆவணங்களின் நகல்கள் விற்பனையாளருக்கு தபால் மூலமே அனுப்பப்படும் (வக்கில்சர்ச் உள்ளிட்ட இணையதள சட்ட சேவை நிறுவனங்கள், இருப்பினும், இந்த செயல்முறையைத் தொடங்க சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகள் மட்டுமே தேவைப்படும்).

நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியது:

 1. பூர்த்தி செய்யப்பட்ட வகுப்பு -2 படிவத்தின் நகல்
 2. அடையாளச் சான்று: சுய சான்றளிக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் நகல், அல்லது வெளிநாட்டவர் என்றால் கடவுச்சீட்டின் நகல்
 3. முகவரி சான்று: கடவுச்சீட்டு / தேர்தல் / வாக்காளர் அட்டை / குடும்ப அட்டை / ஓட்டுநர் உரிமம் / பயன்பாட்டு ரசீதுகள் / ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட நகல். சமர்ப்பிக்கப்படும் பயன்பாட்டு ரசீதுகள் (மின்சாரம் / தொலைபேசி), விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும் மற்றும் அது படிவத்தை தாக்கல் செய்ததிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. (வெளிநாட்டவர் பொறுத்தவரை 12 மாதங்கள், வெளிநாட்டு).
 1. இயக்குனர் தகவல் எண் (டிஐஎன்) பெறுதல்:

முடிக்க வேண்டிய நேரம்: 1 நாள்

செலவு: ஒரு இயக்குநருக்கு ரூ .500 மற்றும் சிஏ / சிஎஸ் கட்டணம்

டிஐஎன் என்பது இயக்குநர் தகவல் எண் இதுவே நிறுவனத்தின் இயக்குநர்களை எம்.சி.ஏக்கு அடையாளம் காட்டுகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், இதற்கு குடியுரிமை தேவையில்லை. இணையதளத்தில் ரூ .500 செலுத்தி இதைச் செய்யலாம்.

இதற்கான செயல்முறை இங்கே:

 1. எம்.சி.ஏ வலைத்தளத்திலிருந்து டிஐஆர்-3 படிவத்தைப் பதிவிறக்கவும்.
 2. இந்திய மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தேவையான விவரங்களுக்கு மாறுபடும். இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் வழங்க வேண்டும், அதே சமயம் வெளிநாட்டவர் என்றால் கடவுச்சீட்டின் எண்ணை வழங்க வேண்டும். மேலும் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படமும் தேவை. இந்த படிவத்தை நிரப்பும்போது பொதுவான பிழைகளை தவிர்க்கவும்.
 3. அடையாளச் சான்று: சுய சான்றளிக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் நகல், அல்லது வெளிநாட்டவர் என்றால் கடவுச்சீட்டின் நகல் தேவை.
 4. முகவரி சான்று: கடவுச்சீட்டு / தேர்தல் / வாக்காளர் அட்டை / குடும்ப அட்டை / ஓட்டுநர் உரிமம் / பயன்பாட்டு ரசீதுகள் / ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட நகல். சமர்ப்பிக்கப்படும் பயன்பாட்டு ரசீதுகள் (மின்சாரம் / தொலைபேசி), விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும் மற்றும் அது படிவத்தை தாக்கல் செய்ததிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. (வெளிநாட்டவர் பொறுத்தவரை 12 மாதங்கள், வெளிநாட்டு).
 1. நிறுவனத்தின் பெயர் தன்மைக்கு தன்மைக்கு ஏற்றவாறு அமையும் வரை தேடுங்கள்:

முடிக்க வேண்டிய நேரம்: 1 முதல் 3 நாட்கள்

செலவு: இலவசம்

இந்த செயல்முறையைத் தொடங்க டிஐஎன்னிற்க்கு நீங்கள் காத்திருக்க தேவையில்லை. உண்மையில், இது மிகவும்  தந்திரமானதாக இருக்கும், ஆகையால் நீங்கள் டி.எஸ்.சிக்கு விண்ணப்பித்தவுடன் அதைத் தொடங்குவது நல்லது. காரணங்கள் என்னவென்றால், உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் பெற விரும்பும் பெயரானது எம்.சி.ஏ ஆல் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறக்கூடும், வேறொரு நிறுவனத்தால் எடுக்கப்பட்டிருக்கலாம் மற்றும் முன்பே இருக்கும் எந்த வர்த்தக முத்திரைகளுடனும் முரண்படக்கூடும்.

 1. பெயர் ஒப்புதல் பெறுதல்:

முடிக்க நேரம்: 2 முதல் 7 நாட்கள்

செலவு: இரண்டு கோரிக்கைகளுக்கு ரூ .1000

படிவம் பெயர்களை ஐஎன்சி-1 இல் சமர்ப்பிக்குமாறு ஆர்ஓசி கோருகிறது. ஒவ்வொரு முறையும் இந்த படிவத்தை சமர்ப்பிக்கும் போதும், நீங்கள் ரூ .1,000 செலுத்துகிறீர்கள். அவ்வாறு நீங்கள் பரிந்துரைத்த பெயர்க முதல் முறையாக நிராகரிக்கப்பட்டால், நீங்கள்  மறுமுறை (15 நாட்களுக்குள்) எந்த செலவுமின்றி மீண்டும் சமர்ப்பிக்கலாம். ஆனால், அவை மீண்டும் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் மீண்டும் பணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இங்கே:

 1. ஐஎன்சி -1 படிவத்தைப் பதிவிறக்கவும்.
 2. படிவம் குறைந்தபட்சம் ஒரு பெயரையும் அதிகபட்சமாக ஆறு பெயரையும் அனுமதிக்கிறது. முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதிகபட்ச எண்ணிக்கையை சமர்ப்பிப்பதே சிறந்தது.
 3. உங்கள் வணிகத்தின் முக்கிய பொருள்கள் மற்றும் ஒவ்வொரு முன்மொழியப்பட்ட பெயரின் முக்கியத்துவத்தையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவை உங்கள் விண்ணப்பத்தில் ஒவ்வொன்றிலும் ஒரு வரி இருக்க வேண்டும்.
 4. ஒப்புதல் ஆரம்பத்தில் 2 நாட்கள் ஆகலாம், ஆனால் அதற்கு 5 முதல் 7 வேலை நாட்கள் ஆகும்.
 5. ஒப்புதல் அளிக்கப்பட்டதும், பெயர் 60 நாட்களுக்கு ஒதுக்கப்படும். எனவே, இணைப்பதற்கான விண்ணப்பம் அதன் காலாவதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
 1. சங்கத்தின் பதிவுக்குறிப்பு மற்றும் கட்டுரைகளின் வரைவு:

நேரம்: 2 நாட்கள்

நிறைவுக்கான செலவு: ஒரு ஆவணத்திற்கு ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை.

பெயர் அங்கீகரிக்கப்பட்டதும், எம்சிஏக்கு முன்மொழியப்பட்ட நிறுவனத்தின் கூடுதல் வரையறை தேவைப்படுகிறது. அவை சிஎஸ் அல்லது வழக்கறிஞரால் தயாரிக்கப்படக்கூடிய சங்கத்தின் பதிவுக்குறிப்பு (எம்ஓஏ) மற்றும் சங்கத்தின் கட்டுரைகள் (ஏஓஏ) மூலம் வழங்கப்படும். எம்ஓஏ வில், ஐஎன்சி -1 ஆல் அங்கீகரிக்கப்பட்ட சரியான பிரதான பொருள்களை சேர்க்க நினைவில் கொள்ளுங்கள். ஒரு சொல் மாறினால் கூட, உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்க ஆர்ஓசிக்கு அதிகாரம் உள்ளது.

நிறுவன பதிவு பெறுங்கள்

எம்ஓஏ: எம்ஓஏ என்பது நிறுவனத்தின் அரசியலமைப்பு, மேலும் அதன் செயல்பாடுகளை வரையறுத்தல் மற்றும் நிர்வகித்தல், மேலும் பங்குதாரர்களுடனான அதன் உறவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தின் அளவுகளை குறிப்பதாகும். இந்த சட்ட ஆவணமானது பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். இது நிறுவனத்தின் பெயர், அதன் முகவரி மற்றும் பங்குதாரர்களின் பெயர்கள் மற்றும் பங்குகளின் விநியோகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ஏஓஏ: ஏஓஏ என்பது நிறுவனத்தின் உள்துணை விதிகளைக் கொண் டிருப்பது, மேலும் இது நிறுவனத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பட்டியலிடுகிறது, மற்றும் நிறுவனம் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களிடையேயான உறவையும் வரையறுக்கிறது. எம்ஓஏ எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை தெளிவுபடுத்தும் செயல்பாட்டை ஏஓஏ கொண்டுள்ளது.

6.மின் படிவங்களை தாக்கல் செய்தல்:

முடிக்க நேரம்: 2 நாட்கள்

செலவு: சிஎஸ் கட்டணம் (பொதுவாக ஒரு ஆவணத்திற்கு ரூ. 2,000)

எம்ஓஏ மற்றும் ஏஓஏ வரைவு செய்யப்பட்டவுடன், இறுதி தாக்கல் செயல்முறையை தொடங்கலாம். இது பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிப்பதை உள்ளடக்குகிறது:

 1. ஐ.என்.சி -7, இதை இணைப்பதற்கான முக்கிய பயன்பாடாகும். பின்வரும் ஆவணங்களுக்கு முழுநேர சி.எஸ் சான்றளிக்க வேண்டும்:

சங்கத்தின் பதிவுக்குறிப்பு

சங்கத்தின் கட்டுரைகள்

ஐ.என்.சி -8 இல் தொழில் பிரகடனம்

பயன்பாட்டு ரசீதுகளின் நகல் இரண்டு மாதங்களுக்கு மேல் இல்லை

நிரந்தர கணக்கு எண் அட்டை / கடவுச்சீட்டின் நகல்

படிவம் ஐ.என்.சி -9 இல் சந்தாதாரரிடமிருந்து நினைவுப் பத்திரம்

சந்தாதாரர்களின் கையொப்பத்தின் சரிபார்ப்பு (படிவம் ஐ.என்.சி -10, நிறுவனத்திற்கு பங்கு மூலதனம் இல்லையென்றால்).

 1. ஐ.என்.சி -22, இது பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிடுகிறது.

பதிவுசெய்யப்பட்ட அலுவலக முகவரியின் சான்று (சொத்து இருந்தால், அல்லது வாடகை ரசீது)

இந்தியயாவில் இருப்பது என்றால் குடியிருப்பு அல்லது வணிக இருப்பிடதின் முகவரி

சொத்தின் உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லை சான்றிதழ்

 1. டி.ஐ.ஆர் -12, இது நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் முக்கிய பணியாளர்களை நியமிப்பது தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ளது

இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரி, மேலாளர்களை நியமிக்கும் கடிதங்கள்

ஐஎன்சி -9 இல் முதல் இயக்குனரின் அறிவிப்பு

படிவம் டி.ஐ.ஆர் -2 இல் நியமிக்கப்பட்ட இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனரின் அறிவிப்பு

 1. ஆர்ஓசி கட்டணம் செலுத்துதல்:

முடிக்க வேண்டிய நேரம்: 1 நாள்

செலவு: அங்கீகரிக்கப்பட்ட மூலதன கட்டணம் மற்றும் நிறுவனத்தின் இருப்பிடத்தின் படி மாறுபடும்

ஆர்ஓசி கட்டணம் மற்றும் முத்திரை வரி இந்த கட்டத்தில் மின்னணு முறையில் செலுத்தப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மூலதனக் கட்டணத்தின் படி ஆர்ஓசி கட்டணம் மாறுகிறது, மற்றும் முத்திரை வரியானது இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற சில மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட இக்கட்டணமானது மிகவும் அதிகம். எம்சிஏ இணையதளத்தின் மூலம் செலுத்த வேண்டிய கட்டணங்களை நீங்கள் கணக்கிடலாம்.

ஆர்ஓசி ஆல் சரிபார்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு சான்றிதழ் வழங்கல்:

முடிக்க வேண்டிய நேரம்: 7 முதல் 8 வேலை நாட்கள்

செலவு: என்/ஏ

ஆர்ஓசி ஆவணங்களை சரிபார்க்கும். மேலும் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், தேவையான மாற்றங்கள் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும். மாறாக இவை அனைத்தும் தெளிவாக இருந்தால், 7 முதல் 8 நாட்களுக்குள் நீங்கள் இணைக்கும் சான்றிதழைப் பெறுவீர்கள். இறுதி ஒப்புதலின் பேரில், ஒருங்கிணைப்பு சான்றிதழ் இயக்குநர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது. எம்சிஏ இப்போது டிஜிட்டல் சான்றிதழ்களை மட்டுமே வழங்குகிறது. ஆகையால் நீங்கள் விரும்பினால் ஒருங்கிணைப்பு சான்றிதழை நீங்களே அச்சிட்டுக்கொள்ளலாம்.

  SHARE