Streamline your tax compliance with our expert-assisted GSTR 9 & 9C services @ ₹14,999/-

Tax efficiency, interest avoidance, and financial control with advance payment @ 4999/-
Provident Fund

EPFO – PF உரிமைகோரல் நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் முறை குறித்து படி படியாக இங்கு அறிந்துகொள்வோம்

நீங்கள் கொடுத்த கோரிக்கைக்கான, அதாவது கிளைம்மின்  தகவல்களை பெற EPFO ஒரு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நமது EPF வின் பாலன்ஸ்சை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் அல்லவா? இங்கு PF பாலன்ஸ்சை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பது பற்றி பாப்போம். அதற்கு முன்னதாக EPFO ஒரு முதலீட்டிற்கான சிறந்த நிதிக் கருவியாக இருப்பதின் காரணத்தை பற்றி விரிவாக பாப்போம். ஆன்லைனில் PF உரிமைகோரல் நிலை அறியவும்

Employees Provident Fund (EPF) என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் பெரும் திட்டமாகும், Employees’ Provident Fund மற்றும் Miscellaneous Provisions Act, 1952 கீழ் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு ஊழியருடைய அடிப்படை சமபலம் மற்றும் டியர்நெஸ் அலோவென்ஸ் சேர்த்து  மாதத்திற்கு ருபாய் 15000 யாக இருக்கும் போது EPF இன் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் ஒரு ஊழியர் ருபாய் 15000 மேல் சம்பளம் பெறுகிறார் என்றால் அசிஸ்டன்ட்  PF கமிஷனர் மற்றும் பணியாளர் சம்மதத்துடன் EPF வில் பங்களிக்க வேண்டும்.

இந்த EPF திட்டத்தின் கீழ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அவரது சம்பளத்தில் இருந்து 12 சதவிகித தொகையை இந்த திட்டத்தில் பங்களிக்க வேண்டும், மேலும் அந்த நிறுவனமும் சமமான தொகையை பங்களிக்கிறது. Employee’ Provident Fund Organization (EPFO) வே பங்களிக்கும் சதவிகிதத்தை தீர்மானிக்கிறது. முதலாளியின் பங்களிப்பில் 12% = Employees’ Pension Scheme (EPS) திட்டத்தின் கீழ் 8.33% + Employees’ Provident Fund (EPF) கீழ் 3.67% ஆகும். 

PF ஐ யார் வித்டிரா செய்வார்? 

60 நாட்களுக்கு ஒரு ஊழியர் அவருடைய நிறுவனத்தில் வேலையில்லாத ஊழியராக  இருந்தால் (அதாவது இரண்டு மாதத்திற்கு) அவருடைய மொத்த PF தொகையில் இருந்து 75 % திரும்பப் பெறலாம், மீதமுள்ள 25% புதிய கணக்கிற்கு மாற்றத்தக்கது. ஒரு ஊழியர் அப்போதுவரை அந்நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார் என்றால் மருத்துவ அவசரநிலை, திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற சில அவசரகால சூழ்நிலைக்காக அவர் ஓரளவு அவருடைய PF தொகையில் இருந்து திரும்பப் பெற முடியும். மேலும் ஒரு பணியாளர் அவருடைய PF ஐ ஆன்லைன் மூலம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை எழுப்ப முடியும். 

ஆன்லைன் மூலம் PF ஐ திரும்பப் பெறுதல்

ஒரு பணியாளர் அவருடைய PF  தொகையை ஆன்லைன் மூலம் திரும்ப பெரும் முறை  மிக எளிமையானதாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆன்லைனில் PF தொகையை எவ்வாறு திரும்பப் பெறுவது? (Link the article here) ,

PF வித்டிரா செய்வதற்கான கோரிக்கையை ஒரு பணியாளர் கொடுத்து விட்டார் என்றால் 15 லிருந்து 20 நாட்களுக்குள் அவருடைய வாங்கி கணக்கிற்கு அந்த வாங்கி பணத்தை கிரெடிட் செய்துவிடும். நீங்கள் கொடுத்த கோரிக்கைக்கான, அதாவது கிளைம்மின்  தகவல்களை பெற EPFO ஒரு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆன்லைனில் PF  உரிமைகோரல் நிலை எவ்வாறு சரிபார்க்கலாம்?

ஆன்லைனில் உங்களது ப்ரொவிடென்ட் பண்ட் கிளைம் மின் நிலையை குறித்து சரிபார்க்கும் முன்நீங்கள் உங்களது UAN எண் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட்  வைத்திருப்பது அவசியம் ஆகும். 

உங்கள் உரிமைகோரல் நிலையை சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன :

  1. UAN மென்பர் போர்ட்டலில் மூலமாகவும் 
  2. EPFO இணையதளத்தில் மூலமாகவும் 
Elevate your business with PF Registration Online. Ensure employee benefits, compliance, and growth. Seamless process, expert guidance. Drive success today

1. UAN மென்பர் போர்ட்டலில் மூலமாக அறியும் வழிமுறைகல்:

படி 1:

 UAN e-Sewa portal – மூலம் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற வெப்சைட்டை பார்க்கவும்.

உங்களுடைய LOGIN டீடெயில்ஸ் ஐ பதிவு செய்யவும். UAN, னின் பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா கோடை என்டர் செய்து SIGN IN என்பதை கிளிக் செய்க.   

படி 2:

“Online Services” எனும் பகுதியை தேர்வு செய்து “TRACK CLAIM STATUS.” ஐத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3:

அப்போது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கிளைம் ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களின் விபரங்களை இப்போது அங்கு தோன்றும் திரையில் காணலாம்.

2. EPFO இணையதளத்தில் மூலமாக அறியும் வழிமுறைகல் 

இங்கே EPFO ​​வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://www.epfindia.gov.in/

படி 1:

“Our Services” என்பதைக் கிளிக் செய்து பிறகு அங்கே தோன்றும் ட்ராப்டவுன் லிஸ்ட்டில் இருந்து “For Employees” என்பதை கிளிக் செய்க.  

படி 2:

இப்போது, ​​“SERVICES” பிரிவின் கீழ் “Know Your Claim Status” என்பதை செலக்ட் செய்யவும். 

படி 3:

“Click here to get redirected to the passbook application” என்ற டேபை செலக்ட் செய்யவும்.

படி 4:

உங்கள் “UAN” மற்றும் “Password” உடன் உள்நுழைக.

படி 5:

உள்நுழைந்த பிறகு, மெம்பெர் ஐடியைத் தேர்ந்தெடுத்த பிறகு “View Claim Status.” என்பதை கிளிக் செய்யவும். 

தேர்வுசெய்ததும், கடைசியாக அப்டேட் செய்த கிளைம் ஸ்டேட்டஸ் டீடெயில்ஸ் ஐ பார்க்கலாம்

வாடிக்கையாளர் பராமரிப்பு – UAN

ஒருவேளை நீங்கள் போர்ட்டலில் உள்நுழைவதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால் UAN வின் வாடிக்கையாளர் பராமரிப்பு குழுவை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.epfindia.gov.in  என்பதே ஆகும். 

  • டோல் ப்ரீ ஹெல்ப் டெஸ்க் : 1800 11 8005 
  • ஈமெயில் ஐடி : employeefeedback@epfindia.gov.IN
  • டைரெக்டரி ஆப் EPFO Regional/Sub-Regional office: http://www.epfindia.gov.in/site_en/Contact_us.php 

இப்போது, ​​உங்களுடைய PF கிளைம் ஸ்டேட்டஸ் குறித்த தகவலை தெரிந்துகொள்ளும்  நிலையை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் என்று எண்ணுகிறோம். மேலும் இதுகுறித்த சந்தேகள் அல்லது கேள்விகள் இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும்.


Subscribe to our newsletter blogs

Back to top button

Adblocker

Remove Adblocker Extension