மகாராஷ்டிராவில் சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி?

Last Updated at: Mar 23, 2020
859
மகாராஷ்டிராவில் சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி?

சமூக நலத் திட்டங்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து பிற உதவிகளை  நீங்கள் பெற விரும்பினால், சாதி சான்றிதழைப் பெற வேண்டும் என்பது தேவையான ஒன்றாகும். சாதி சான்றிதழ் என்பது ஒரு நபர் தான் கூறுகின்ற சாதியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் மற்றும் சான்றளிக்கும் ஒரு ஆவணம். இந்த சாதி சான்றிதழைப் பெறுவதற்கான செயல்முறை நாடு முழுவதும் தனிநபரின் நிலையைப் பொறுத்து மாறுபடும். மகாராஷ்டிராவில் சாதி சான்றிதழைப் பெறுவதற்கான படிப்படியான நடைமுறையை இங்கே நாங்கள் உங்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். 

சாதி சான்றிதழ் ஏன் முக்கியமானது

ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு கோரவும், மாநில அளவில் வேலைவாய்ப்புகளை உயர்த்தவும் இந்த சாதி சான்றிதழ்கள் இசைவு செய்கின்றன. இது முக்கியமாக திட்டமிடப்பட்ட  சாதி [எஸ்சி], திட்டமிடப்பட்ட பழங்குடியினர் [எஸ்.டி] மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் [ஓபிசி] ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை பயக்கும். மற்றொரு கூடுதல் நன்மை என்னவென்றால், மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும் , பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழக மட்டத்தில் சேர்க்கை பெறுவதற்கும் இதும் முக்கியமான ஒன்றாகும். மேலும், ஒதுக்கப்பட்ட பிரிவினர்கள் மத்திய, மாநில அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வைத்த பல்வேறு நன்மைத் திட்டங்களைப் பெற  இது உதவுகிறது.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for Udyog Aadhaar registration.

 

மகாராஷ்டிராவில் சாதி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் யாவை?

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதி சான்றிதழ் பெற, பின்வரும் ஆவணங்களை அசல் மூலமாக எடுக்கப்பட்ட அச்சு நகல்களை  சமர்ப்பிக்க வேண்டும்.

 1. பூர்த்தி செய்த விண்ணப்ப்பப் படிவம்
 2. குடியிருப்பு ஆதாரம் (ஏதேனும் ஒன்று)
 • கடவுச் சீட்டு 
 • ஓட்டுநர் உரிமம் 
 • நிரந்தர கணக்கு எண் அட்டை 
 • அல்லது ஏதேனும் ஒரு அரசாங்கத்தின் அடையாள அட்டை.
 1. ஏதேனும் ஒரு முகவரி ஆதாரம்
 • கடவுச்சீட்டு
 • ஆதார் அட்டை
 • வாக்காளர்  அடையாள அட்டை 
 • தண்ணீர் பயன்பாட்டு ரசீது
 • மின் ரசீது
 • தொலைபேசி ரசீது
 • குடும்ப அட்டை 
 • சொத்து வரி ரசீது
 1. கடவுச் சீட்டு அளவு புகைப்படம்
 2. கேட்கப்படக்கூடிய பிற ஆவணங்கள்:
  • சம்பந்தப்பட்ட சாதியை ஆதரிக்கும் சான்று
  • விண்ணப்பதாரரின் பிறப்புச் சான்றிதழ் அல்லது தந்தை அல்லது உறவினர்களின் பிறப்புச் சான்றிதழ்
  • ஆரம்ப பள்ளி சேர்க்கை மற்றும் பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ் 
  • வருவாய் பதிவுகள் அல்லது கிராம பஞ்சாயத்து நகல்கள்
  • எஸ்.டி சாதிக்கான பிரமாண பத்திர சான்றிதழ் (படிவம்-ஏ –1)
  • விண்ணப்பதாரரின் சொந்த  கிராமம் / நகரத்தின் சான்றுகள்
  • பொருந்தினால், விண்ணப்பதாரரின் தந்தை அல்லது உறவினரைக் குறிப்பிடும் அரசு சேவை பதிவுகளின் பிரித்தெடுத்தல்

சாதி சான்றிதழ் பதிவிற்கு அணுகவும்

மகாராஷ்டிராவில் சாதி சான்றிதழ் பெற  இணைய வழியில் விண்ணப்பிப்பது எப்படி? 

இணைய இணைப்பு  முறை மூலம் மகாராஷ்டிராவில் சாதி சான்றிதழைப் பெறுவதற்கு, பின்வரும் வழிமுறைகளை ஒரு விண்ணப்பதாரர் கவனமாக பின்பற்ற வேண்டும்:

படி 1:

https://aaplesarkar.mahaonline.gov.in/en/Login/Login என்ற இணைப்பைப் பயன்படுத்தி மகாராஷ்டிரா மாநில அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுக வேண்டும்.

படி 2:

புதிய பயனராக, நீங்கள் பதிவு செய்யும் பணியை பூர்த்தி செய்ய  வேண்டும்.

பெயர், வயது, பாலினம், தொழில், குடியிருப்பு முகவரி, கைபேசி  எண், அடையாள அட்டை  ஆதார பிரதிகள், குடியிருப்பு ஆதார பிரதிகள் மற்றும் உங்கள் புகைப்படம் போன்ற தனிப்பட்ட விவரங்களை நீங்கள் உள்ளிட வேண்டும்.

படி 3:

பதிவுசெய்ததும், நீங்கள் இணைய வாயிலில்  உள்நுழையலாம். முகப்பு பக்கத்தில், இணைய வழியில்  கிடைக்கும் சேவைகளின் கீழ், சாதி சான்றிதழ் என்ற விருப்பத்தை சொடுக்கவும்.

படி 4:

நீங்கள் சாதி சான்றிதழ் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் செய்ய வேண்டியது விண்ணப்பிக்கவும்என்ற பொத்தானைக் அழுத்த வேண்டும்.

படி 5:

அடுத்த கட்டத்தில், கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தேவையான சாதியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்- நீங்கள் [எஸ்சி  / எஸ் டி / ஓ பி சி / வி பி சி / இ பி சி.வி ஜே என் டி /புத்திசம் / இ ஜெ என்டி ] சேர்ந்த சாதியைக் குறிப்பிட வேண்டும். கீழேயுள்ள திரைக்காட்சியில்  உள்ளதைப் போல பட்டியல் தோன்றும். 

படி 6:

கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு சேமி பொத்தானைக் அழுத்த வேண்டும் . எதிர்கால குறிப்புக்காக இந்த தகவலை அச்சிடலாம்.

சாதி சான்றிதழ் (Caste Certificate) இணைய இணைப்பு வழி இல்லாமல்  விண்ணப்பிப்பது எப்படி?

இணைய வழியில் இல்லாமல் சாதி சான்றிதழை விண்ணப்பிக்க, நீங்கள் அருகிலுள்ள தாசில்தார் அலுவலகத்தைப் பார்வையிட்டு விண்ணப்ப படிவத்தைப் பெறலாம். இல்லையெனில் மற்றொரு முறை விண்ணப்பப் படிவத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்து,அதன் அச்சு ஒன்றை எடுத்து அதை பூர்த்தி செய்து ,அதனுடன் மேல குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் தாசில்தார் அலுவலகத்தில் அதனை சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்கு பெயரளவு கட்டணமாக 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது, இது நீதிமன்றக் கட்டணமாக செல்கிறது.

விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டவுடன் சாதி சான்றிதழின் நிலையை எவ்வாறு கண்காணிப்பது?

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, நிலையை சரிபார்க்க மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணைய நுழைவை   பயன்படுத்தலாம். இணைய நுழைவில்  உள்நுழைந்து, உங்கள் விண்ணப்பத்தைக்  கண்காணிக்கவும் என்ற விருப்பத்தை அழுத்தி  விண்ணப்பத்தின் அடையாளத்தை உள்ளிடவும்.