படிவம் 38 – வர்த்தகத்திற்காண ஒரு கட்டாய ஆவணம்

Last Updated at: Mar 09, 2020
539
படிவம் 38 ஐ நிரப்புதல்

இரு நாடுகளுக்கு இடையில் போடப்பட்டுள்ள எல்லைகளைப் போலவும், அவ்வாறு எல்லைகோடு இருப்பினும் வர்த்தகம் செய்வதற்காக இந்த எல்லைகளில் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான விதிகளும் போடப்பட்டுள்ளது.  ஒரு நாட்டில் இருக்கும் மாநிலங்களுக்கு இடையிலும் எல்லைகள் போடப்பட்டு  உள்ளன மற்றும் மாநிலங்களில் உள்ள தயாரிப்புகளும் வர்த்தக சொத்துக்களும் அரசாங்கத்தால் போடப்படும் விதிகளை பொறுத்தே செல்லுபடியாகும். படிவம் 38 என்றால் என்ன என்று இங்கு பாப்போம்.

படிவம் 38 என்றால் என்ன?

உத்தரபிரதேசத்தில், படிவம் 38 என பெயரிடப்பட்ட ஒரு படிவத்தை (the Commercial Tax Department) வணிக வரித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.  இது உத்தரபிரதேச மாநிலத்திற்கான சாலை அனுமதி ஆகும். ஒரு நபர் மாநிலத்தில் இருக்கும் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், அவர்களுடைய வர்த்தகத்தை தொடங்க விரும்பும்  அனைத்து தனிநபர்கள் அல்லது பார்ட்னர்களோ இந்த படிவத்தை கட்டாயமாக நிரப்ப வேண்டும்.

இந்த FORM 38 நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், மாநிலங்கள் முழுவதும் வர்த்தகம் செய்வதற்கும் வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் படிவம் 31 ஐப் பயன்படுத்தினர். இந்த படிவம் நிறுத்தப்பட்டவுடன், இந்த படிவம்  நடைமுறைக்கு வந்தது.  மேலும் பார்ம் 31 னை எல்லோராலும் அக்சஸ் செய்யவோ டவுன்லோடு செய்வதோ எளிதல்ல.  அதற்கான டிபார்ட்மெண்ட் டிடம் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும். அந்த தனிப்பட்ட டிபார்ட்மெண்ட் டிடம் அனுமதி பெற்றால் மட்டுமே முடியும்.  தகவலின் பாதுகாப்பு மற்றும் அணுகுமுறைக்கும் இது கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. படிவத்தின் கடினமான நகலைப் பெறுவது வணிக வரித் துறையிலிருநது மட்டுமே சாத்தியமாகும், அதை யாரும் நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியாது.

மேலும் தகவலுக்கு அணுகவும்

அனைத்து நிறுவனங்களும் உட்பட, சட்டம் 1956 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட லிமிடெட் லெயிபிலிட்டி பார்ட்னர்ஷிப் (LLP), பிரைவேட் லிமிடெட் கம்பெனி மற்றும் அன்லிமிடெட் கம்பெனி ஆகியவை இந்த படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

படிவம் 38 ஐ நிரப்புதல் :

இதில் நிரப்பப்பட வேண்டிய பல்வேறு விவரங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • நிறுவனத்தின் பதிவு எண்
  • விண்ணப்பதாரரின் பெயர் (கள்)
  • தேதி
  • கையொப்பம் (ங்கள்)
  • குடியிருப்பு மற்றும் தொழில்முறை முகவரி (கள்)

அனைத்து சரியான சான்றுகளையும் இங்கு நிரப்புவது முக்கியமானதும்  மற்றும் கட்டாயமாகும். இல்லை என்றால் தனிநபர் தண்டிக்கப்படலாம்.

முடிவுரை:

உண்மையில் வணிக வரித் துறை இந்த படிவத்தை நிரப்புவது கட்டாயமாக்கியுள்ளது ஒரு நல்ல செயல் ஆகும். வர்த்தகம் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க இந்த படிவம் கட்டாயமாகும்.