இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை: முக்கிய சிறப்பம்சங்கள்

Last Updated at: Mar 28, 2020
2738
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை: முக்கிய சிறப்பம்சங்கள்

நமது வர்த்தகம், வணிகம் மற்றும் வர்த்தகம் குறித்து Foreign Trade Policy 2015-20 நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி தீர்மானிக்கிறது. நமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் உலகம் முழுதும் இருக்கும் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நமது அரசு இதை வெளியிடுகிறது. நமது நாட்டின் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகலை மேம்படுத்துவதற்காக இந்த கொள்கையில் அதிக கவனம் செலுத்தியது மற்றும் இது நம் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதைத்தவிர அவை மேக் இன் இந்தியாமுயற்சிக்கு ஏற்ப இருந்தன, இது போன்ற  நிறைய கொள்கைகளுடன் வெளிவந்தது, மேலும் இது முன்னர் அப்போதைய இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்டது. 

இந்தியாவில் வர்த்தகத்தின் வளர்ச்சி

கடந்த இரண்டு தசாப்தங்களாக நமது நாட்டிற்குள் அதிவேக உயர்வை நமது வர்த்தகத்தில் (Trade) காணப்படுகிறதுஇதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரம் விரைவாக முன்னேறுகிறது. இந்திய உள்நாட்டு பொருளாதாரம் 2004 ல் 32 டிரில்லியன் ரூபாயிலிருந்து 153 டிரில்லியன் டாலராக வளர இந்த வளர்ச்சி உதவியது. (Source: India Brand Equity Foundation).

இது நாட்டிலுள்ள தொழிலாளர்களின் சராசரி தனிநபர் வருமானம் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் விதத்தில் அமைத்துள்ளது. இது, நம் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை வளர்ப்பதற்கும் உதவுகிறது, இந்தியாவின் வெளி வர்த்தகம் துறையில் முன்னோடியில்லாத வளர்ச்சி உதவியதற்கும் நம் நன்றி கூற வேண்டும். 

உங்கள் வர்த்தக உரிமத்தைப் பெறுங்கள்

2015-20 ஆம் ஆண்டின் பாரின் டிரேட் பாலிசி இப்படிப்பட்ட வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதை எண்ணமாக கொண்டுள்ளது, மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவை சர்வதேச வர்த்தகத்தில் ஒரு சூப்பர் பிளேயராக மாற்றவும் எண்ணுகிறது. இதன் நோக்கங்கள் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், மேலும் இதன் சேவைகள் உற்பத்தியாளர்கள் அவர் உற்பத்திசெய்த பொருட்களை மறைக்கப்படுவதை அணுகவும் மற்றும் பயன்படுத்தப்படாத சந்தைகள் போன்றவற்றை தெரிந்துகொள்வதே இதன் நோக்கங்களாகும்.

உற்பத்தித் துறைகளுக்கு பாதுகாப்பு, ஆதரவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் இந்தக் கொள்கையின் மூலம் செயல்படுத்துகிறது. 

அதற்கான முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்

 • நமது பொருட்களை ஏற்றுமதி திறன்களை அதிகரிக்க இந்த FTP நமக்கு உதவுகிறது அதன் மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் மேக் இன் இந்தியாதிட்டத்தின் மூலம் நாட்டிற்குள்  மதிப்பு கூட்டல் அதிகரிக்க செய்கிறது. 
 • நம் நாட்டின் வெளிப்புற சவால்களை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்றும் நமது பொருளாதார சூழலில் ஏற்படும் மாற்றங்களையும், வர்த்தகம் கட்டமைப்பில் வேகமாக வளர்ந்து வரும் சூழல்களையும் அனுமதிக்கிறது.
 • இந்த கொள்கை இரண்டு திட்டங்களை கொண்டு வந்தது, அவை இந்தியாவில் இருந்து வணிக ஏற்றுமதி செய்வதும், இந்தியா திட்டத்திலிருந்து செய்யும் சேவைகள் ஏற்றுமதிகள், இவை இரண்டையும்  ஏற்றுமதி திறன்களை மேம்படுத்துவதற்காக கொள்கைகளாகும். 
 • மேலும், இந்த திட்டங்களின்படி, அவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட டூட்டி கிரெடிட் ஸ்க்ரிப்ட்ஸ் உள்ள எந்தவொரு பொருட்களும், ஒருவேளை முழுமையாக மாற்றப்படலாம். 
 • MEIS இன் கீழ், நாடுகளை மொத்தம் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது, 2 முதல் 5% வரையிலான வெகுமதிகளை வழங்க இருக்கிறது, இந்த SEIS இன் கீழ், வழங்கப்பட இருக்கும் வெகுமதிகள் மொத்தம் 3% முதல் 5% வரை இருக்கும். 
 • இந்தக் கொள்கை மூலம், EPCG ஸ்கீம் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களைப் பெறுவதையும் சாத்தியமாக்கியுள்ளது.
 • மேலும், பாதுகாப்பு மற்றும் ஹைடெக் துறைகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க இந்தக் கொள்கை சாத்தியமாக்கியுள்ளது.
 • கைத்தறி பொருட்கள், புத்தகங்கள், தோல் பொருட்கள், பேஷன் பொருட்கள் மற்றும் தபால் வழியாக அனுப்பப்படும் பொம்மைகள் போன்ற ஏற்றுமதிகளுக்கு 25,000 ரூபாய் வரை MEIS சலுகைகளைப் பெற தகுதியுடையவை என்று கூறப்பட்டுள்ளது. 
 • நாட்டிற்குள்  பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தியாளர்களுக்கு இப்போது பல்வேறுவிதமான ஒப்பந்தங்களின் கீழ் அவர்களுக்கு முன்னுரிமை சிகிச்சையும் அளிக்கப்படுகின்றது, மேலும் அத்தகைய உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படாத சர்வதேச சந்தைகளுக்கு எளிதாக அணுக உதவுகிறது. 
 • இந்த பாலிசி மூலம் சில ஏற்பாடுகளும் செய்கின்றனர், அவர்கள் தயாரிக்கும் தயாரிப்புகளுக்கு  தேவைப்படும் விரைவான பாதை அனுமதி வசதிக்காக இது தரமான தயாரிப்புகளின் உறுதிப்பாட்டை அனுமதிக்கிறது. அதே பாலிசியை துறைமுகங்களுக்கு அருகில் இருக்கும் இடத்தில  கிடங்குகளை அமைக்கவும் அனுமதிக்கிறது மேலும் பயிற்சிக்காக டூட்டி-பிரீ ஏக்கியூப்மெண்ட்டும் கிடைக்கும்.
 • ஏற்றுமதியை அதிகரிக்க, 108 க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ கிளஸ்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.
 • ‘Skill India’ பிரச்சாரத்திற்காக நிரத் பந்து திட்ட த்தை ஊக்குவிக்க நிறுவப்பட்டுள்ளன.
 • மேலும் அடுத்து வரும் ஆண்டுகளில் காகிதமற்ற சூழலை உருவாக்குவதற்காக  FTP  அதிகமான கவனம் செலுத்துகிறது.

இடைக்கால விமர்சனம்

ஏப்ரல் 2015 இல் பாலிசியை  வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கொள்கையின் செயல்திறனை அறிய டிசம்பர் 2017 லில் அரசாங்கம் ஒரு இடைக்கால மறுஆய்வுடன் அதைத் தொடர்ந்தது. திட்டங்களின் செயல்திறனை சிறப்பாக மேற்கொள்வதே இந்த இடைக்கால ஆய்வின் சிறந்த நோக்கம் ஆகும். மேலும் இதில் கூடுதலாக பல திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, அது அங்கு வியாபாரம் செய்வது எளிதாக்குவதற்காக ஒரு சூழலை நிறுவ உதவியது. உண்மையான முடிவெடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசிடமிருந்து பல்வேறு மாநில அரசுகளுக்கு தேவைக்கேற்ப  மாறுகிறது என்பதே இதன் பொருள் ஆகும். பின்வருபவை இடைக்கால மதிப்பாய்வின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். 

 1. MEIS தொழில்களான கார்பெட் தயாரித்தல், தோல், கை கருவிகள் மற்றும் அறிவியல் மற்றும் மருத்துவ தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது மேலும் அவற்றுக்கான வர்த்தகம் விகிதங்கள் 2% அதிகரித்துள்ளன. அக்கவுண்டன்சி, சட்ட உள்கட்டமைப்பு, கட்டிடக்கலை, ஹோட்டல் போன்ற சேவைத் துறைகள் மற்றும் கல்வித் துறை போன்ற தொழில்களின் விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 
 2. வெளிநாட்டு சந்தைகள் மற்றும் இந்தியா சந்தைகள் இரண்டிலும் சுங்க அனுமதி பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்டஎகனாமிக் ஆப்பரேட்டர்ஸ்  ஸ்கீம் எளிதாக அனுமதிக்கிறது. 
 3. விவசாய ஏற்றுமதி கொள்கை மூலம் வழங்கப்படும் வாய்ப்புகள் வழியாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதன் மூலம் நீண்ட கால ஏற்றுமதிகள் விரைவில் வெளியிடப்படும்.
 4. டிபார்ட்மெண்ட் ஆப் காமெர்ஸ் மூலம் ஒரு புதிய லாஜிஸ்டிக்ஸ் டிவிசன் அமைக்கப்படுகிறது.
 5. மற்றொரு முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது என்னவென்றால் நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் இன்பர்மேசனல் போர்டல் உருவாக்கியதே ஆகும். இது ஆன்லைன் மார்க்கெட்டை பயன் படுத்தப்படும் நபர்களுக்கு உருவாக்கப்பட்டதாகும். மேலும் இப்படி பயன்படுத்தியதால் லாஜிஸ்டிக்ஸ்  காஸ்டஸ் குறைக்க படுகின்றது. டிரேடு பெசிலிசேசன் அக்ரீமெண்ட் மூலம் இந்த போரட்டளுக்கான உதவி மற்றும் ஆதரவுகளை பெறுகிறது. மேலும் இதில் புதிய e-Way Bill ளையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 6. மேலும், இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறிஈட்டை ஒரு நிரந்தர கணக்கு எண்ணுக்கு அளிக்கும் படி வழிவகுக்கிறது. 
 7. ஸ்கிரிப்ட்கள் இப்போது 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகின்றது, இதற்கு முன்பு 18 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆனது. 
 8. மேலும், இறக்குமதி வரி மீதான DTA விற்பனையை  நீக்கப்பட்டது மற்றும் இதற்கான  கட்டுப்பாடுகழும் தளர்த்தப்பட்டுள்ளன.
 9. புதிய ARO வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இதில் ஏற்றுமதிக்கான பொறுப்புகளையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.