பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்)பொதுவான கணக்கு எண்(யுஏஎன்) உதவி மேசை: உங்கள் சந்தேகங்களை தீர்ப்பது

Last Updated at: May 22, 2020
913
பணியாளர் வருங்கால வைப்பு நிதி பொதுவான கணக்கு எண் உதவி மேசை: உங்கள் சந்தேகங்களை தீர்ப்பது

சட்ட முறைகளை நிரப்புவது சில சிறிய மற்றும் பெரிய தவறுகளுடன் பல  முறைகள் உள்ளன. எந்தவொரு குழப்பத்தையும் தவிர்க்க, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ஒரு தனி உதவி மேசை  உள்ளது – அது ஈபிஎஃப் யுஏஎன் உதவி மேசை ஆகும். பயனர்களின் பிரச்சினைகளை மின்னஞ்சல் மற்றும் கட்டணமில்லா எண்கள் மூலம் தீர்க்க இது உதவுகிறது.

ஈபிஎஃப் யுஏஎன் உதவி மேசை

உதவி மேசை என்பது இணையவழி  மையமாகும், அங்கு ஊழியர்கள் மற்றும் அத்துடன் முதலாளிகள் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சேவைகள் சம்மந்தமாக  தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா எண் 1800 118 005, மற்றும் வணிக நேரங்களில் ஏற்படும் அனைத்து  கேள்விகளுக்கும் அவர்களை தொடர்பு கொள்ளலாம், அதாவது, எல்லா நாட்களிலும் காலை 9:15 முதல் மாலை 5:45 மணி வரை (ஐஎஸ்டீ) தொடர்பு கொள்ளலாம்.

தனிநபரின் அனைத்து கேள்விகளையும் புரிந்துகொள்வதற்கும்  மேலும் தொடர்வதற்கு முன்னும் , யுஏஎன் என்றால் என்ன, இது போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் அது எவ்வாறு பயனளிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யுஏஎன் (பொதுவான கணக்கு எண்)

யுஏஎன் என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஒ) உடன் தொடர்புடைய ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்ட ஒரு தனித்துவமான எண். வேலைகள் விஷயத்திலும் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு அடையாளாச் சின்னம்  மற்றும் கடவுச்சொற்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அனைத்து நிறுவனங்களிலும் ஒற்றை யுஏஎன் செல்லுபடியாகும், இதனால் தனிநபர் தங்கள் பிஎஃப் (PF)கணக்குகளை எளிதாக அணுக முடியும். எனவே யுஏஎன்/ ஈபிஎஃப் இணைய வாயிலில்  உள்நுழைய, யுஏஎன் எண்ணையும் கடவுச்சொல்லையும் வைத்திருப்பது கட்டாயமாகும்.

மற்ற எண்முறை  தளங்களில் உள்ளதைப் போலவே உறுப்பினர்கள் தங்கள் கைபேசி எண் அல்லது கடவுச்சொற்களை எளிதாக மாற்றலாம். கைபேசி எண்ணை இணையத்தின்  ‘தொடர்பு’ பட்டி மூலம் புதுப்பிக்க முடியும்.

இலவச சட்ட ஆலோசனை

ஈபிஎஃப் உதவி மேசைக்கு  அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • புதிய கைப்பேசி  எண்ணைப் புதுப்பித்தல்.
 • இணையவாயிலுக்கான  கடவுச்சொல் நினைவில் இல்லை. அதை மாற்றுவது எப்படி?
 • ஓடீபி  ஐ எனது மொபைலில் பெற முடியவில்லை.
 • பிறந்த தேதியில் (டிஓபி) மாற்றங்களைச் செய்வது  / தவறான டிஓபி இல் நுழைவது.
 • தந்தையின் பெயரில் மாற்றங்கள் செய்வது.
 • சேரும் தேதியில் மாற்றங்கள் செய்வது.
 • கேவொய்சி விவரங்கள் சரிபார்க்கப்படவில்லை.

யுஏஎன் உதவி மேசையை  எவ்வாறு அணுகுவது மற்றும் தீர்க்கக்கூடிய பல்வேறு சிக்கல்கள்

 • யுஏஎன் இணைய வாயிலை பார்வையிட்டு இணையத்தில் உதவி மேசை பக்கத்திற்குச் செல்லவும்.
 • இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும், ஒன்று ‘உறுப்பினர்’, மற்றொன்று ‘முதலாளி’.
 • ‘உறுப்பினர்’ விருப்பத்தை சொடுக்கவும்.
 • அதன் பிறகு, உறுப்பினர்கள் பல சிக்கல்களில் இருந்து தனக்கானதை தேர்வு செய்ய வேண்டும் , அவை பின்வருமாறு:
 • எனது யுஏஎன்  என்ன- ஒரு வேளை தனிநபர் தங்கள் யுஏஎனை மறந்துவிட்டால், பல்வேறு தனிப்பட்ட விவரங்களை வழங்குவதன் மூலம் அதைப் பெறலாம்.
 • கைப்பேசி  எண் மாற்றப்படுதல் மற்றும் கடவுச்சொல்லை மறத்தல் – பெரும்பாலான சிக்கல்கள் இது தொடர்பானவை. ஒரு படிவம் திறக்கப்பட்டு, தகவலை மீட்டெடுக்க உறுப்பினர் விவரங்களை நிரப்ப வேண்டும், இல்லையெனில் கடவுச்சொல்லை யுஏஎன் இணைய வாயில் மூலம் நேரடியாக மாற்றலாம்.
 • தனிப்பட்ட விவரங்களைத் திருத்துதல்: மாற்றங்களைச் செய்ய முதலாளியிடம் கோருவதன் மூலம் இந்த விவரங்களை இணையத்தின் வழியிலோ   அல்லது இணைய வழி இல்லாமலோ சரிசெய்யலாம்.
 • இரண்டு சந்தர்ப்பங்களிலுமே , விவரங்களை மாற்றுவதற்கான கோரிக்கைகளை ஆதரிக்க ஒரு அடையாள ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம்

பி.எஃப் கணக்குகள் மற்றும் வினவல்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் பெற,  7738299899 என்ற எண்ணிற்கு இபிஎஃப்ஓஹச்ஓ <யுஏஎன் > எல்ஏஎன் என்ற வடிவத்தில் ஒரு எஸ்எம்எஸ் தர வேண்டும், இங்கு எல்ஏஎன் என்பது மொழியைக் குறிக்கிறது.

செயல்படாத கணக்குகள்

வருங்கால வைப்பு நிதி கணக்கில் உறுப்பினரால் நிதி பரிமாற்றம் அல்லது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதபோது, பி.எஃப் கணக்கின் நிலையை உதவி மேசையை தொடர்புகொள்வதன் மூலம் சரிபார்க்க முடியும்.

புகார்களின் நிலையை கண்காணித்தல்

உறுப்பினர்கள் அளித்த புகார்கள் மற்றும் வினவல்களின் நிலையை இணையத்தில்  வழங்கப்பட்ட பதிவு எண்ணின் உதவியுடன் எளிதாகக் கண்காணிக்க முடியும். இபிஎஃப்ஓ  ஆல் சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்னரே கோரிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முழுமையான செயல்முறை பொதுவாக 15-30 நாட்கள் வரை ஆகும். புகாரைப் பற்றி எந்த தகவலும் புதுப்பிப்புகளும் வழங்கப்படாவிட்டால், பதிவு எண்ணுடன் மீண்டும் விவரங்களை  அனுப்புவதன் மூலம் பின் தொடரலாம்.

குறைதீர்த்தல்

கேள்விகள், வினவல்கள் மற்றும் புகார்களின் துறப்பணம் இங்கே முடிவதில்லை. வருங்கால வைப்பு நிதி பரிமாற்றம், தொகை, படிவங்களை தாக்கல் செய்தல், ஓய்வூதிய திட்டத்திற்கு செய்ய வேண்டிய தீர்வுகள், பிஎஃப் கணக்கு மற்றும் காப்பீடு தொடர்பான பிரச்சினைகளையும் உறுப்பினர்கள் எதிர்கொள்ளலாம். கூடுதலாக, யுஏஎன் மற்றும் கணக்குகள் தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம்.  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியத்தால் (ஈ.பி.எஃப்.ஓ), உறுப்பினர்களின் பிரச்சினைகள் கடுமையான காலக்கெடு மற்றும் திறமையான செயல்முறைகளுடன் தீர்க்கப்படுகிறது. இந்த சிக்கல்கள் கவனமாக கவனிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு , உறுப்பினர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குகின்றன மேலும் அவர்களின் கணக்குகள் மற்றும் வருங்கால வைப்பு நிதிகளைப் பாதுகாக்கின்றன.

முடிவுரை

எனவே ஈபிஎஃப்ஓ உதவி மேசையை மேலே குறிப்பிட்ட கட்டணமில்லா எண் மூலம் எளிதாக தொடர்பு கொள்ளலாம் அல்லது uanepf@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்  மின்னஞ்சல் அனுப்பலாம். 

ஈபிஎஃப் யுஏஎன் உதவி மேசை பிஎஃப் கணக்குகளை கையாளும் போது செய்யப்படும் அனைத்து வினாக்களையும்  தவறுகளையும் தீர்க்க உதவுகிறது.