மகாராஷ்டிராவில் தொழில் வரி செலுத்துவதற்கான இ-கட்டணச் சேவை

Last Updated at: Mar 18, 2020
1038
sales tax in maharashtra

மகாராஷ்டிராவில் மஹவத் இணையதளத்தின் மூலம் தொழில்ம வரியை விரைவாக செலுத்தலாம். உண்மையில், மாதாந்திர கட்டணம் செலுத்தும் நபர்களுக்கு இ-கட்டணம் கட்டாயமாகும் ( GST Registration). உங்களுடைய வரி பொறுப்பு ஆண்டுக்கு ரூ. 50,000 மேல் இருந்தால் மாதந்தோறும் கட்டணம் செலுத்துதல் மற்றும் மாத வருமானத்தை தாக்கல் செய்தல் அவசியமாகும். இது அடுத்த மாதத்தின் கடைசி நாளன்று செய்யப்பட வேண்டும். உங்கள் வரி பொறுப்பு ரூ. 50,000 க்கும் குறைவானதாக இருந்தால், நடக்கின்ற நிதி ஆண்டில் மார்ச் மாதம் இறுதி வரை காத்திருந்து கட்டணம் செலுத்தி மற்றும் வருமானத்தை தாக்கல் வேண்டும்.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for Udyog Aadhaar registration.

 

ஆன்லைன் வணிக வரி பதிவு பெறவும்

ஆன்லைனில் (இணையத்தளத்தில்) கட்டணம் செலுத்துவது எப்படி?

  1. தொழில் வரி பதிவு சான்றிதழ் (PTCC), அல்லது PTEC இ-கட்டணம், தொழில் வரி பதிவு சான்றிதழ் (PTEC) பெற, மஹவத் வலைத்தளத்திற்கு சென்று இ-கட்டணம் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் TIN எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து இ-கட்டணத்தை தேர்ந்தெடுக்கவும்.
  3. MTR படிவம் எண் 6 ல் ஒரு செலுத்துச் சீட்டு (Challan) காட்டப்படும். இது TIN மற்றும் டீலரின் பெயரை முன்னிருப்பாக கொண்டிருக்கும்.
  4. இ-கட்டண வகையை (PTEC அல்லது PTRC) தேர்ந்தெடுக்கவும், பணம் செலுத்தும் காலம், பணம் செலுத்துதல், நீங்கள் பதிவு செய்யும் இடம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். படிவத்தில் அணைத்து பகுதிகளும் நிரப்பி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  5. PTEC வைத்திருப்பவர்கள் வரி செலுத்துவதற்கு படிவம் ID ‘VIII’ தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்கள் வெறுமனே ‘பிற’ அல்லது பட்டியலில் இருந்து பொருத்தமான குறிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  6. படிவத்தை முடித்து சமர்ப்பிக்கும்போது, ​​அரசாங்க கோரிக்கை எண் அல்லது GRN உருவாக்கப்படும். ‘செலுத்து’ பொத்தானை கிளிக் செய்து பின்பு பரிவர்த்தனையை முடிக்க வேண்டும்.
  7. அரசாங்கத்திற்கு பணம் செலுத்தியதற்கான சான்று என்பதால் கட்டணத்தில் தோன்றும் ரசீதுகளைச் சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.