அமெரிக்க வணிகத்தை அமைப்பதற்கான ஆவணங்கள் என்ன?

Last Updated at: Mar 09, 2020
780
அமெரிக்க வணிகத்தை அமைப்பதற்கான ஆவணங்கள் என்ன

இன்றைய காலகட்டத்தில் யு.எஸ். இல் ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கான செயல்முறை மிகவும் எளிமையானதாக உள்ளது. சரியான விசாவை அந்த நபர் வைத்திருக்காவிட்டாலும், அல்லது யு.எஸ். க்கு வரத் திட்டமிடாவிட்டாலும் அவர்  யு.எஸ். இல் தொழில் தொடங்கலாம்.  இருப்பினும், உங்கள் வணிகத்தின் வெற்றியை உறுதிப்படுத்த சில அடிப்படை சட்ட ஆவணங்களை வைத்திருக்கிறீர்களா என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வணிகத்திற்கான பங்கை உங்களின் ஆவணங்கள் கொண்டே உள்ளது, எனவே உங்கள் ஆவணங்களை பாதுகாப்பது அவசியமாகும். இங்கே, ஒரு அமெரிக்க வணிகத்தை அமைப்பதற்கான ஆவணங்கள் சிலவற்றை நாங்கள் விவாதிப்போம்.

யு.எஸ். இல் உங்கள் வணிகத்தை ( US Incorporation ) பதிவு செய்வதன் நன்மைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்

1. வணிக திட்டம்

இது ஒரு சட்டபூர்வமான ஆவணம் இல்லை என்றாலும், உங்கள் வணிகத்திற்கான முதலீட்டை நீங்கள் பெற விரும்பினால் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  உங்கள் வணிகத் திட்டங்கள் குறித்தும்உங்கள் வணிகத்தின் நோக்கங்களையும்  மற்றும் அதை அடைய அதன் வரைபடத்தைப் பற்றிய தெளிவையும்  இது வழங்குகிறது. இது சாத்தியமான முதலீட்டாளர்களைப் பற்றியும் தெரிவிக்கிறது

 • வணிகத்தை நிர்வகிக்கிறார்கள் யார் என்பதை பற்றிய தகவல்கள் 
 • உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன்  சேவைகள்
 • விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலின்  உத்தி
 • உங்கள் இலக்குகல், அவற்றின் சந்தைப் பிரிவு மற்றும் இங்கு தொடர்புடைய வாய்ப்புகள் மற்றும் அபாயங்கள்
 • தயாரிப்புகள் / சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் 

2. ஜென்ரல்  பார்ட்னெர்ஷிப்  அக்ரீமெண்ட் 

ஒரு தொழிலை தொடங்குவதற்கான முதலீட்டு தொகைக்காகவும், தொழில் சார்ந்த பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்காகவும் நீங்கள் ஒருவருடன் பார்ட்னெர்ஷிப் வைக்கலாம். பொதுவான இத்தககைய கூட்டாண்மை ஒப்பந்தங்கள் அனைத்து கூட்டாளர்களுக்கும், கூட்டாண்மை விதிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும், பின்பற்றுவதற்கும், எதிர்காலத்தில் சாத்தியமான சட்ட மோதல்களைத் தவிர்க்கவும் உதவும்.  கீழே கூறப்படும் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்

 • சம்பந்தப்பட்ட பார்ட்னர்கள் பெயர்கள்
 • பார்ட்னெர்ஷிப்பின் மொத கால அளவு 
 • நிலம், பணம் அல்லது வணிக உபகரணங்கள் அடிப்படையில் ஒவ்வொரு பார்ட்னர்கலின்  பங்களிப்புகள்
 • அதிகாரப் பிரிவு மற்றும் தொழிலாளர் பிரிவு 
 • தேவைப்பட்டால், புதிய பார்ட்னர்களை சேர்க்கும் நடைமுறை
 • ஒரு கூட்டாளியின் மரணம் அல்லது விலகுவது போன்ற சில நிகழ்வுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தகவல்கள் 

3. எல்.எல்.சி இயக்க ஒப்பந்தம்

இந்த வகை பதிவு ( எல். எல். சி ) செய்வது அதிக ஆபத்துள்ள வணிகங்களுக்கு ஏற்றதாகும்,  ஏனெனில் உங்கள் வணிகத்தால் திரட்டப்பட்ட எந்தவொரு கடன்களுக்கும் நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க மாட்டீர்கள். ஒரு இயக்க ஒப்பந்தத்தை பல உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒவ்வொரு எல்।எல்।சிக்கும்  நாங்கள் பரிந்துரைக்கிறோம். அனைத்து உறுப்பினர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன், அது அவர்களுக்கு ஒரு  ஒப்பந்தமாகிறது.  

உங்கள் வணிகத்தை அமெரிக்காவில் பதிவுசெய்க

மேலும், நீங்கள் நிறுவனத்தின் ஆர்டிகிள்ஸ் செய்  தாக்கல் செய்து, உங்கள் எல்.எல்.சியை ஒரு ஒப்பந்தத்துடன் இயக்கவில்லை என்றால், யாராவது உங்களிடம் வழக்குத் தொடர்ந்தால் அல்லது ஐ.ஆர்.எஸ் ஆடிட்டின்  போது நீங்கள் சிவில் அபராதங்களை ஏற்க நேரிடும். இயக்க ஒப்பந்தம் குறிப்பிடுவது என்னவென்றால் – 

 • எல்.எல்.சி.க்கு சொந்தமான உறுப்பினர்கள்
 • செயல்பாடுகள் மற்றும் நிதி முடிவுகளை  உறுப்பினர்கள் மீது பிணைக்கப்படுகின்றன
 • உறுப்பினர்களிடையே இலாப நட்டங்களின் விநியோகம்
 • முக்கிய வணிக முடிவுகள் எவ்வாறு வந்து சேரும்
 • உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்
 • எல்.எல்.சி எவ்வாறு வரி விதிக்கப்படும்

4. நிறுவனங்களுக்கான பைலாக்கள் மற்றும் மினிட்ஸ் ஆப் மீட்டிங்ஸ்:

ஒரு நிறுவனத்தை அமைக்க நீங்கள் முடிவு செய்கிறீர்கள் என்றால், யு.எஸ். இல் உள்ள பெரும்பாலான மாநிலங்கலில்  பைலாக்களின் பதிவைப் பராமரிப்பது அவசியம் ஆகும். பைலாக்கலில்  குறிப்பிடுகின்ற தகவல்கள் –

 • நிறுவனம் எவ்வாறு தன்னை ஆளுகிறது
 • உங்கள் வணிகத்தின் அமைப்பு
 • தனிநபர்களின் வேலைகள்
 • ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் / மோதல்களை எவ்வாறு தீர்ப்பது

யு.எஸ். மாநிலங்களுக்கும் மினிட்ஸ் ஆப் மீட்டிங் தேவைப்படுகின்றன. இந்த மினிட்ஸ் கட்டாயம் போதுமான தகவல்களை கொண்டிருப்பதாக இருக்க வேண்டும், இதனால் அவை உங்கள் நிறுவனத்தின் இன்ஸ்டிடியூஷனல்  மெமரியாக செயல்பட முடியும். அவற்றுள் பொதுவாக சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் –

 • டைப்ஸ் ஆப் மீட்டிங் 
 • மீட்டிங்கிற்கான இடம் மற்றும் நேரம் 
 • வருகை விவரங்கள் 
 • எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் / முடிவுகள் (தேர்தல்கள், கொள்முதல் போன்றவை)
 • வாக்களிப்பு விவரங்கள், ஏதேனும் இருந்தால், வாக்களிக்காத விவரங்களுடன் 

5. வேலைவாய்ப்பு ஒப்பந்தம்

நிறுவனத்தில் இது எதிர்காலத்தில் ஏற்படும் சச்சரவுகள் / மோதல்களைக் குறைப்பதற்கவும், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளையும், கடமைகளையும் விவரிக்கும் முக்கியமான ஆவணமாகும்.  இது உங்கள் நிறுவனத்தை விட்டு விரைவில் வெளியேற நினைக்கும்  உங்கள் ஊழியர்களைத் தடுக்கும் ஒப்பந்தமாகும், மேலும் இது ரகசிய வணிகத் தகவலை வெளிப்படுத்தாதிருக்கவும் அல்லது நிறுவனத்தின் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தாதிருக்கவும் இது உதவுகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் ஊழியருக்கும் முதலாளிக்கும் இடையே ஒரு உறுதியான அடித்தளத்தையும் முறையான உறவையும் உருவாக்குகிறது, மேலும் இரு தரப்பினருக்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்டாபிளிட்டியை வழங்குகிறது। வேலைவாய்ப்பு தொடர்பான சில முக்கியமான அம்சங்கழும் இதில் அடங்கும்- 

 • பொது வேலைவாய்ப்பு விதிமுறைகள்
 • ஊதியங்கள், சலுகைகள் மற்றும் பிற இழப்பீடு
 • ஊழியர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்
 • பதவிகள்
 • வேலை நேரம்
 • போட்டியிடாத மற்றும் கோரப்படாத உட்பிரிவுகள்
 • வர்த்தக ரகசியங்கள் மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றைப் பாதுகாக்க ரகசியத்தன்மை விதி
 • நோட்டீஸ் பீரியட் அண்ட்  டெர்மினேஷன் 

தனியுரிமைக் கொள்கை மற்றும் அதன் விதிமுறைகள்:

இந்த இரண்டு காமன் லீகல் டாக்குமெண்ட்ஸ் சும் எல்லா விதமான நிறுவனங்களும் இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கிறது. நிறுவனத்தின் வலைத்தளம் / மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தும் போதெல்லாம் வணிக விபரங்களையும், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் / தரவை எவ்வாறு பயன்படுத்தும் என்பது குறித்து தனியுரிமைக் கொள்கை ஒரு பயனருக்குத் தெரிவிக்கிறது. இதேபோல், டெர்ம்ஸ் ஆப் சர்வீஸ் சின் விதிமுறைகள் வணிக வலைத்தளம் / மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தும் போதெல்லாம் பயனர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்த இரண்டு ஆவணங்களும் உங்களுக்கு ஏன் தேவை என்பதற்கு மூன்று அடிப்படை காரணங்களை கூறப்பட்டுள்ளது-

 • ஆன்லைன் கட்டணங்களை எளிதாக்குவதற்காக 
 • வணிக நடவடிக்கைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய
 • மேலும் வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்துவதும்அவர்களுக்கு வசதியாக முறைகளை மேற்கொள்வதும் 

இவையே அமெரிக்க வணிகத்தை அமைப்பதற்கான ஆவணங்கள் ஆகும்

அடிக்குறிப்பு:

சரியான ஆவணங்களை வைத்திருப்பது என்பது எதிர்காலத்தில் சிக்கல்கள் / தகராறுகள் / விலையுயர்ந்த வழக்குகளைத் தவிர்க்க உதவுகிறது. இது மாநில மற்றும் கூட்டாட்சி விதிமுறைகளை மிக எளிதாக பின்பற்ற உங்களுக்கு உதவுகிறது.