இந்தியாவில் நீதிமன்ற திருமணத்திற்கும் மற்றும் திருமண பதிவிற்கும் என்ன வித்தியாசம்?

Last Updated at: Apr 01, 2020
1754
For court marriages in India

நீதிமன்ற திருமணம்

நீதிமன்ற திருமணங்கள் பொதுவாக அனைத்து சடங்குகளையும் பின்பற்றி அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடையே நடக்கும் பாரம்பரிய திருமணங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. நீதிமன்ற திருமணங்கள் பொதுவாக ஒரு திருமண அதிகாரி முன்னிலையில் நடைபெறும். நீதிமன்ற திருமணத்தில், தகுதியுள்ள இரண்டு நபர்கள் மூன்று சாட்சிகளின் முன்னிலையில் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்தை உறுதிப்படுத்த எந்த சடங்குகளும் தேவையில்லை. திருமண அதிகாரி மற்றும் மூன்று சாட்சிகள் மட்டும் போதுமானது. நீதிமன்ற திருமணத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால், அது சிறப்பு திருமணச் சட்டம், 1954 இன் விதிமுறைகளையும், விதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்த எந்தவொரு தனிநபர்களும் தங்கள் சாதி மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் நீதிமன்ற திருமணத்தின் மூலம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளலாம். தனிநபர்கள் இருவரும் இந்திய நாட்டினராக இருக்க வேண்டும் என்பது கூட கட்டாயமில்லை. ஒரு இந்திய நாட்டவரும் ஒரு வெளிநாட்டு நபராகவும் இருக்கலாம்.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for Udyog Aadhaar registration.

 

திருமண பதிவு

திருமண பதிவு சான்றிதழ் என்பது இரண்டு பேர் திருமணமானவர்கள் என்று கூறும் அதிகாரப்பூர்வ சாட்சியமாகும். இந்தியாவில், திருமணங்களை இந்து திருமணச் சட்டம், 1955 இன் கீழ் அல்லது சிறப்பு திருமணச் சட்டம், 1954 இன் கீழ் பதிவு செய்யலாம். இரண்டு வகையான திருமணங்களுக்கும், திருமண பதிவு சான்றிதழ் என்பது ஒரு தம்பதியினர் திருமணம் செய்து கொண்டதற்கான சட்டப்பூர்வ சான்றாகும். 2006 ஆம் ஆண்டில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக திருமணத்தை பதிவு செய்வதை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது. எனவே, திருமணத்திற்குப் பிறகு திருமண பதிவு சான்றிதழைப் பெறுவது பல நன்மைகளைத் தரும்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது திருமணத்திற்குப் பிறகு புதிய குடும்பப் பெயருடன் புதிய வங்கிக் கணக்கைத் திறக்கும்போது திருமண பதிவு சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணமாகும். மேலும், நுழைவிசைவு(அயல்நாட்டு நுழைவுச்சான்று) செயலாக்கம் அல்லது வெளிநாட்டு பயணத்தின் போது, பல தூதரகங்கள் திருமண பதிவு சான்றிதழின் நகலைக் கோருகின்றன. எனவே, பல தம்பதிகள் திருமணத்திற்குப் பிறகு வெளிநாடுகளுக்குச் செல்ல திருமண பதிவு சான்றிதழ் கட்டாயமாகும்.

இந்தியாவில் நீதிமன்ற திருமணத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்:

  1. மணமக்களில் எவரேனும் ஒருவருக்கு முன்பே திருமணமாகி  இருக்கக்கூடாது. ஒரே விதிவிலக்கு என்னவென்றால், முந்தைய மனைவி/கணவன் இறந்து இருத்தல் அல்லது அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றிருத்தல் வேண்டும்.
  2. நீதிமன்ற திருமணத்திற்கு மனப்பூர்வமான ஒப்புதல் இரு தரப்பினரும் வழங்க வேண்டும். நபர் புத்தி சுவாதீனம் இல்லாமை, தெளிவற்ற மனம் கொண்டவர்களாக இருந்தால் ஒப்புதல் ஏற்றுக் கொள்ளப்படாது.
  3. மணமக்கள் இருவரும் திருமணத்திற்குத்  தகுதியான வயது வரம்பை பெற்றிருக்க வேண்டும்.அதாவது ஆண்களுக்கு திருமண வயது 21 ஆக இருக்க வேண்டும் மற்றும் பெண்களுக்கு திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும்.
  4. திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் நீதி மன்ற திருமணத்தில்   ஒருவருக்கு ஒருவர் தடை செய்யப்பட்ட உறவுகளின் கீழ் தொடர்பு படுத்தத் தேவையில்லை. இரு தரப்பினரும் அனுமதித்தால் திருமணம் செய்து கொள்ளலாம்.

 

இந்தியாவில் திருமண பதிவுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்;

1) திருமணத்தின் போது மணமக்களுக்கு வேறு ஒரு துணை இருக்கக் கூடாது.

2) தெளிவான மன நிலை இல்லாமல் மணமக்கள் ஒப்புதலை வழங்கக் கூடாது.

3) இரு கட்சிகளும் சரியான ஒப்புதல் அளிக்க வல்லவை என்றாலும், அவர்கள் இருவருமே எந்தவிதமான மன கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது.

4) அவர்கள் இருவருமே கால்-கை வலிப்பு அல்லது புத்தி சுவாதீனம் இல்லாமையின்  தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.

5) திருமணத்தின் போது மணமகளுக்கு 18 வயது இருக்க வேண்டும், மணமகனுக்கு 21 வயது இருக்க வேண்டும். 

6) மணமக்கள் இருவரும் தடை செய்யப்பட்ட உறவுகளின் எல்லைக்குள்  இல்லாமல் இருந்தால்,அத்திருமணம் வழக்கம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டு அனுமதிக்கப்படாது.

7) இருவருக்கும் இடையிலான திருமணத்திற்கு நடைமுறையில் உள்ள வழக்கம் அல்லது பாரம்பரியம் அனுமதிக்காவிட்டால், சம்மந்த பட்டவர்கள் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.  

திருமண பதிவு பெறுங்கள்

நீதிமன்ற திருமணத்திற்கு தேவையான ஆவணங்கள்-

1) மணமகனும், மணமகளும் கையெழுத்திட்ட விண்ணப்ப படிவம்.

2) மணமகனும், மணமகளும் பிறந்த தேதிக்கான ஆதாரம்.

3) வீட்டு முகவரி ஆதாரம்.

4) விண்ணப்ப படிவத்துடன் செலுத்தப்பட்ட கட்டண ரசீது.

5) மணமகன், மணமகள் இருவரின் கடவுச்சீட்டு அளவு 2 புகைப்படங்கள்

6) விவாகரத்து வழக்கில் விவாகரத்து ஆணை அல்லது உத்தரவின் நகல் மற்றும் கணவனை /மனைவியை இழந்த விதவையாக இருந்தால் விதவை வழக்கில் மனைவியின்/ கணவனின் இறப்பு சான்றிதழ்.

7) மணமகள் மற்றும் மணமகன் இருவரிடமிருந்தும் தலா ஒரு உறுதிச் சான்று. நீதிமன்ற திருமணம் குறித்த உறுதிச் சான்றில் பின்வரும் நீதிமன்ற திருமண தகவல்கள் இருக்க வேண்டும்-

(i) பிறந்த தேதி

(ii) திருமண நிலை (திருமணமாகாதவர், விவாகரத்து செய்தவர் அல்லது விதவை)

(iii) எந்தவொரு தடைசெய்யப்பட்ட உறவுகளின் கீழ் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கை.

திருமண பதிவுக்கு தேவையான ஆவணங்கள்

திருமண சான்று

திருமண அழைப்பிதழ் அல்லது கோவில் திருமண ரசீதுகள் அல்லது திருமணத்திற்கான ஏதாவது ஒரு ஆதாரம்.

அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று

பணியாளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது நுழைவிசைவு(அயல்நாட்டு நுழைவுச்சான்று)  அல்லது கடவுச்சீட்டு

வயதிற்கான சான்று

பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ் அல்லது நுழைவிசைவு(அயல்நாட்டு நுழைவுச்சான்று) அல்லது கடவுச்சீட்டு.