குமாஸ்டா உரிமத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

Last Updated at: Mar 28, 2020
874
குமாஸ்டா உரிமத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

மகாராஷ்டிராவில், நீங்கள் ஏதாவது வணிக ஸ்தாபனத்தையும் அமைக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு உங்களுக்கு குமாஸ்டா உரிமம் தேவை. மகாராஷ்டிராவிற்குள் இந்த மாநில அனுமதி எல்லா விதமான வணிகத்தையும் சட்டப்பூர்வமாக்குகிறது மேலும் இது ஷொப்ஸ் அண்ட் எஸ்டாபிளிஷ்மென்ட்  ஆக்ட் லைசென்ஸ் என்று அழைக்க படுகிறது. மேலும் இது மும்பை முனிசிபல்  கார்பொரேஷன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அத்தகைய லைசென்ஸ் சிற்கான தேவை 1948 இன் Maharashtra Shops and Establishment Act  டின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.  மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் குமாஸ்டா உரிமத்தைப் பயன்படுத்துகின்றன

குமாஸ்டா உரிமம் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?

மகாராஷ்டிராவில் ஒரு கடை அல்லது வணிக ஸ்தாபனத்தை அமைத்து தொழில் புரிய வணிக்கைத்தை திறக்க விரும்பும் எவராலும் இந்த குமாஸ்தா உரிமம்  பெறப்படுகிறது. 

எந்தவொரு குடிமகன் / முதலாளி / பணியாளர் மற்றும் நிறுவனம் மும் இதற்கு விண்ணப்பிக்கலாம்। 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு முதலாளியும் குமாஸ்டா உரிமத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

குமாஸ்டா உரிமத்தின் நன்மைகள்

இந்த உரிமத்தால் கிடைக்கப்படும் சில நன்மைகள் பின்வருமாறு :-

 1. உங்களுக்கு சொந்தமான கடை அல்லது ஸ்தாபனம் சட்ட நிறுவனம் தான் என்பதற்கான ஆதாரம். 
 2. இது உங்களை மகாராஷ்டிராவில் வணிகம் நடத்த உங்களை அனுமதிக்கிறது.
 3. மகாராஷ்டிரா அரசு பல வரி மானியங்களை வழங்குகிறது.
 4.  வங்கிகளுக்கான அடையாள ஆதாரமாக இது செயல்படுகிறது.

குமாஸ்டா உரிமத்திற்கான தேவையான ஆவணங்கள்

  • முகவரி சான்று- மின்சார பில்கள், வாடகை ஒப்பந்தம், விற்பனை பத்திர நகல், உரிமையாளரிடமிருந்து என்ஓசி, எரிவாயு அல்லது நீர் பில்
  • பான் கார்டு 
  • மும்பை முனிசிபல் கார்பொரேஷன் மூலம் பெறப்படும் அதிகார கடிதம்.
  • FORM A 
  • ஒருவேளை நீங்கள் பார்ட்னெர்ஷிப் பில் ஒரு தொழிலை துவங்க விரும்பினால் அப்போது நீங்கள் பார்ட்னெர்ஷிப் டீட் டை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அணைத்து பார்ட்னர் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களின் முகவரி சான்று.
  • ஒருவேளை உங்களிடம் ஒரு தனியார் நிறுவனம் இருந்தால், மெமோரண்டும் ஆப் அஸோஸியேஷன், ஆர்டிகிள் ஆப்அஸோஸியேஷன், மற்றும் அனைத்து இயக்குநர்களின் பெயர் மற்றும் முகவரி ஆதாரத்துடன் ஒரு பட்டியலுடைய ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தொண்டு அறக்கட்டளைகளுக்கு, ரிசர்வ் வங்கியின் கடிதத்தின் நகல் மற்றும் பதிவு சான்றிதழின் நகல் வழங்கப்பட வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பக் கடிதம்.

கடைகள் மற்றும் ஸ்தாபன உரிமம்

ரெஜிஸ்ட்ரேசன் ஆப் குமாஸ்டா லைசென்ஸ்

 1. யாராவது குமாஸ்டா உரிமத்தை பெற விரும்பினால், அவர்கள் முதலில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும், அதைத் தொடர்ந்து ஒரு அதிகாரி ஸ்தாபனத்தை பதிவுசெய்து பதிவு சான்றிதழ் மற்றும் தொழிலாளர் அடையாள எண்ணை வழங்குகிறார். 
 2. அப்படி பெறப்பட்ட உரிமம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதற்கு மேல் தொடர வேண்டும் என்றால் அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால், அந்த விண்ணப்பதாரர் விரும்பினால் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு கூட உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
 3. புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை உரிமத்தின் செல்லுபடியை நீட்டிக்க ஆண்டுதோறும் நிரப்பப்படலாம். நீங்கள் புதிய விண்ணப்பத்தை தற்போதுள்ள சான்றிதழ் காலாவதியாகும் 30 நாட்களுக்கு முன்பாக அனுப்ப வேண்டும்.
 4. நீங்கள் ஒரு சுற்றுலா வாகனம் வைத்திருந்தாலோ  அல்லது இயக்கினாலோ குமாஸ்டா உரிமம் பெறுவது அவசியம் ஆகும். இது அனைத்து வணிகங்களுக்கும், வர்த்தகங்களுக்கும், சேவை அடிப்படையிலான வணிகங்களுக்கும் பொருந்தும்.
 5. குமாஸ்டா உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை இந்த வலைத்தளத்தின் http://www.mcgm.gov.in மூலம் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்படலாம். 
 6. குடிமக்கள் சேவை >> கடைகள் மற்றும் ஸ்தாபனம் >> பதிவு செய்ய விண்ணப்பிக்கவும் >> மேலும் என்ற ஆப்சன்களுக்குள் செல்லுங்கள்.
 7. கொடுக்கப்பட்ட ஆப்சன்களில் இருந்து ஷாப் அண்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் ரெஜிஸ்திரேட்டின் என்ற ஆப்சனை   தேர்வு செய்த பிறகு “ADD ”  என்பதை கிளிக் செய்யவும்.
 8. கேற்கப்படும் தேவையான விவரங்களுடன் இருக்கும் படிவத்தை நிரப்பி, தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 
 9. இறுதியாக, கட்டணங்களை ஆன்லைனில் அல்லது டிடி வழியாக செலுத்தி செலான் எண்ணை சமர்ப்பிக்கவும்.
 10. பின்னர், Submit என்பதைக் கிளிக் செய்க, அதைத் தொடர்ந்து உங்களுக்கு வழங்கப்படும் யுடிஎன் எண்ணைக் குறிப்பிட வேண்டும்
 11. படிவம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும் 
 12. உங்கள் விண்ணப்பத்தின், நிலையை சரிபார்க்க வெப்சைட்டிற்குள் லாகாண் செய்யவும். 
 13. சிட்டிசன் போர்ட்டலுக்குச் சென்று >> செக் ஸ்டேட்டஸ் நிலையை சரிபார்க்கவும் பின்னர் உங்கள் யுடிஎன் எண்ணை உள்ளிடவும்

ஆய்வுக்கான உதவிக்குறிப்புகள் 

 • உங்கள் பான் கார்டை எல்லா நேரங்களிலும் உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
 • தீயணைப்பு கருவிகள் வளாகத்திற்குள் தேவைப்படும் இடங்களில் இருபதை  உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • நீங்கள் உரிமத்திற்காக சமர்ப்பிக்கும்போது உங்கள் வணிகத்தின் பெயரை உறுதிப்படுத்தவும். ஆங்கிலம் மற்றும் மராத்தி இரண்டிலும் பிரிண்ட் இருக்க வேண்டும்.
 • மேலும், உங்களிடம் 10 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், தவறாமல் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 • நீங்கள் பெற்ற இறுதி சான்றிதழ் அல்லது உரிமத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறது என்றால், நீங்கள் உடனடியாக அதை பொறுப்பான அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை சரிசெய்ய வேண்டும். அத்தகைய மாற்றங்களின் திருத்தத்தை பின்னர் ஏற்றுக்கொள்ளபடாது எனவே, சரியான மாற்றங்கள் இருந்தால், அப்படி திருத்தப்படாத செட்டிபிகேட் செல்லுபடி ஆகாது. அப்படி அந்த சான்றிதழில் இருக்கும் தவறுகளை அதிகாரிகள் கூறிய பின்னர் மேற்கொண்ட திருத்தங்களை சரி பார்க்க வேண்டும், சான்றிதழோடு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க வேண்டும், அதன் பின்னரே உரிமத்தை புதுப்பிப்பர்.