வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் படிவம் 29 B

Last Updated at: Mar 09, 2020
689
வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் படிவம் 29 B

படிவம் 29 B என்றால் என்ன?

படிவம் 29 B என்பது வருமான வரித் துறைக்கு நிர்வணக்களால் அவர்களது BOOK PROFIT ட்டை வெளிப்படுத்த  பயன்படுத்தும் ஒரு படிவமாகும். ஆனால் இதை சமர்ப்பிப்பது  எளிமையானது அல்ல.  இருப்பினும், படிவம் 29 B இன் நோக்கம் தொடர்பான முழு கருத்தையும் நாம் இங்கு நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதை பற்றிய தகவல்களை அடிப்படைகளுடன் ஆரம்பிக்கலாம்.

ஜீரோ – வரி நிறுவனம்:

ஒரு கம்பெனியின் கணக்கு வழக்குகள் எல்லாம் கம்பெனிஸ் ஆக்ட் டின் படியே தயாரிக்கப்படுகின்றன மேலும் வருமான வரிச் சட்டத்தின்  வழிகாட்டுதல்களின்படிஅந்த நிறுவனம் செலுத்த வேண்டிய வரி கணக்கிடப்படுகிறது. மேலும் ஸ்டேட்மெண்ட் ஆப் பிராபிட் அண்ட் லாஸ் சில் கூறப்பட்ட லாபத்தையே “BOOK PROFIT ” என்பது ஆகும்இந்த லாபத்தையே நிறுவனத்தில் அந்த ஆண்டிற்கான மொத PROFIT என்று கணக்கிட படுகிறது. பல நிறுவனங்களுக்கு BOOK PROFIT  இருக்கிறது ; எனினும், அவர்கள் வருமான வரி விதிகளின்படி எந்த வரிகளையும் அறிவிப்பதில்லை. 

அத்தகைய நிறுவனங்களையே “ZERO TAX ” நிறுவனங்கள் என்று அழைக்கிறோம். அவர்களிடத்தில் போதுமான BOOK PROFIT இருக்கிறது என்ற போதும், IT ACT டிற்கு கீழ் டிடக்சென்ஸ் & எக்சம்ப்ஸ் மூலமாக கிளைம் செய்யவே கருதுகின்றனர். இதன் மூலம் அவர்கள் வரியை ZERO TAX சாக குறைக்க முடிகிறது.

MAT – Minimum Alternate Tax என்றால் என்ன?

ZERO Tax நிறுவனங்களை ஐடி சட்டத்தின் கீழ் கொண்டுவர, நிதி சட்டத்தின் கீழ்  1987 ஆம் ஆண்டு Section 115 JB  அறிமுகப்படுத்தப்பட்டது* பிரிவு 115 JB இன் படி, நிறுவனங்கள் 18.5 % என்ற கணக்கில் Minimum Alternate Tax (MAT) செலுத்த வேண்டும. அதாவது இந்த BOOK PROFIT  என்பது 18.5 % வரிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

சரி இது சார்ந்த எடுத்துக்காட்டு ஒன்றை பாப்போம். ஒரு நிறுவனத்தின் BOOK PROFIT எல்லா எக்சம்ப்ஸ் சையும் கிளைம் செய்வதற்கு முன்பாக ( எடுத்துக்காட்டாக டெப்ரிசியேசன் மற்றும் பிற) ஐ।டி சட்டத்தின் கீழ் அவர்களது BOOK PROFIT ரூபாய் 10 லச்சமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். செலுத்த வேண்டிய MAT 10 லட்சத்தில் 18.5% ஆக இருக்கும், இது ரூ. 185000 / –

ஆயுள் காப்பீட்டு வணிகங்களுக்கான நிறுவனங்கள் இந்த MAT  இலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

வருமான வரி பதிவிற்கு அணுகவும்

மேலும் படிவம் 29 B பற்றி அறிவோம்:

பிரிவு 115 JB  யின் கீழ் வரும் எல்லா நிறுவனங்களும் கட்டாயம் இந்த படிவம் 29 பி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதை நிறுவனத்தின் சார்ட்டட் அசவுண்டன்ட் மட்டுமே நிரப்ப வேண்டும். அப்படி பூர்திசெய்தல் மட்டும் தான் SECTION 115 JB யின் கீழ் BOOK PROFIT டின் ஸ்டேட்மெண்ட் உள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன் விளக்கத்தைப் பெற வேண்டும். நீங்கள் அறிக்கையை மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

படிவம் 29 பி பார்மெட் மிகவும் எளிது. இது பின்வரும் தகவல்களைக் கொண்டுள்ளது :

  • நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி (company name)
  • பான் அட்டை எண்
  • நிறுவனத்தின் வணிகத்தின் தன்மை 
  • மதிப்பீட்டு ஆண்டு
  •  BOOK PROFIT டின் லாபத்தின் தொகை 

MAT கிரெடிட்  என்றால் என்ன?

எல்லா நிறுவனங்களும் பிரிவு 115 JB  படிபடிவம் 29 B யில் அறிக்கையை தாக்கல் செய்வது அவசியமாகும். இதன் அடிப்படையில், அந்த நிறுவனம் குறைந்தபட்ச மாற்று வரியை செலுத்த வேண்டும். உண்மையில் நிறுவனம் செலுத்தும் வரியை MAT கிரெடிட் அடிப்படையில் பெற முடியும். ஒரு வருடத்தில் செலுத்தப்பட்ட MAT தொகையை அடுத்தடுத்த ஆண்டுகளில் “CREDIT ” டாக பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், MAT இன் கீழ் செலுத்தப்பட்ட வரி மற்றும் வழக்கமான வரியின் கீழ் செலுத்த வேண்டிய வரிக்கு இடையே செலுத்தப்பட்ட தொகையில் வேறுபாடு இருக்கலாம். செலுத்தப்பட்ட அதிகப்படியான MAT தொகை MAT கடன் என அழைக்கப்படுகிறது. எனவே, இந்த கடனை 15 நிதி ஆண்டுகளுக்கு முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

எளிமைப்படுத்த, இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் அதாவது MAT கேரி பார்வர்ட் மெகானிசத்தை பற்றி பாப்போம்.

1 வது ஆண்டுடில் அதிகமாக ரூ. 2 லச்சத்தை  MAT  செலுத்தியது. 2 டாவது ஆண்டு அதிகமாக ரூ. 1 லச்சத்தை MAT செலுத்தியது. 3 வது ஆண்டில் செலுத்தப்பட்ட கூடுதல் வரி ரூ. 4 லட்சம் ஆகும். எனவே 4  ஆவது நிதி ஆண்டுகளின் முடிவில் இந்த நிறுவனம் மொத்தம் MAT CREDIT  ரூ. 7 லட்சமாக இருக்கும்.

இப்போது 4 வது ஆண்டில்ரூ. 5  லச்சத்தை  MAT செலுத்தியது. இருப்பினும், அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய உண்மையான வரி ரூ. 9 லட்சம் ஆகும். இருப்பினும், இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் மொத்த கடன் தொகையிலிருந்து MAT CREDIT  ரூ. 4 லட்சத்தை அந்த நிறுவனம் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே 4 வது ஆண்டில் நிறுவனம் புதிய செலவினங்களில் கணிசமான தொகையைச் சேமிக்கிறது. அதாவது இப்போது அடுத்த ஆண்டிலும், அவர்கள் உண்மையான செலுத்த வேண்டிய தொகையுடன் ஒப்பிடும்போது MAT தொகை குறைவாக உள்ளது* ஆகவே அந்த  நிறுவனம் கிடைக்கும் MAT கிரெடிட்டின் நிலுவைத் தொகை  ரூ. 1.50,௦௦௦ பயன்படுத்திக்கொள்கிறது. 

படிவம் 29 பி நோக்கம்:

ஒரு நிறுவனத்தின் MAT இன் கீழ் கணக்கிடப்படும்  வரித் தொகையையும், நிலையான வரி விதிப்படி செலுத்த வேண்டிய வரியையும் கணக்கிட வேண்டும். உண்மையை சொல்லபோனால் எந்த தொகை அதிகமாக உள்ளதோ அந்த தொகையையே அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். அதாவது வழக்கமான வரி செலுத்த வேண்டிய தொகையை விட, MAT தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது என்றால் அந்த நிறுவனம் MAT டின் தொகையையே செலுத்த வேண்டும். படிவம் 29 B இல் குறிப்பிடப்பட்டுள்ள BOOK PROFIT டின்  அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சார்ட்டட் அக்கௌன்டன்ட் இந்த ரிப்போர்ட்ஸ் களை ஆடிட் செய்து பார்க்கிறார்* இருப்பினும், படிவம் 29 B MAT கிரெடிட் டை கிளைம் செய்ய கடினமானதாகவேய அமைகிறது. எனவே இந்த படிவம் 29 B ஐ தாக்கல் செய்வது ஐடி சட்டத்தின்படி கட்டாயமாகும், மேலும் நிறுவனங்கள் MAT கிரெடிட்டையும் கிளைம் செய்வதும் நன்மையையே தருகிறது. 

முடிவுரை :

குறைந்தபட்ச மாற்று வரியை ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுடைய BOOK PROFIT டிலிருந்து செலுத்தவேண்டும். படிவம் 29 B இன் கீழ் நிறுவனத்தின் ஆடிட் ரிப்போர்ட்டில் BOOK PROFIT டின் தொகையை கூறப்பட்டிருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் லாபத்தை கொண்டு அதன் வரி தொகையை கணக்கிடுவதற்காக இதை மேற்கொள்ள படுகிறது. எனவே, இந்த MAT இன் அடிப்படை கணக்கிடப்பட்டு செலுத்தப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் MAT கிரெடிட்டைக் கிளைம் செய்ய  இந்த படிவம் 29 B அவசியம் ஆகும். மேலும், படிவம் 29 B ஒரு நிறுவனத்திற்கு மிக முக்கியமானதாக அமைகிறது.